Published:Updated:

டேக் கேர் கிட்னி!

10 கட்டளைகள்ஹெல்த்

டேக் கேர் கிட்னி!

- பி.செளந்தரராஜன், சிறுநீரகவியல் நிபுணர், ராமச்சந்திரா மருத்துவமனை

• ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். பனி மற்றும் கோடைக் காலத்துக்கு ஏற்ப, தண்ணீரின் அளவை சிறிது குறைத்தோ, அதிகரித்தோ அருந்தலாம். ஒரு லிட்டருக்கும் குறைவாக, தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. அதுபோல 5-8 லிட்டர் என அதிகம் குடிப்பதையும் தவிர்க்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால், உடனடியாகக் கழித்துவிட வேண்டும். அடக்கிவைப்பது தவறு. சிறுநீர் கழித்தவுடன், சுத்தம் காப்பது நல்லது. இதனால் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

• வலி நிவாரணி மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.  எதையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. மாத்திரைகளைச் சாப்பிடும் முன், அதன் அட்டையில் உள்ள தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி தேதியை சரிபார்க்கும் பழக்கம் அவசியம். 

டேக் கேர் கிட்னி!

• ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.

• சிறுநீரகத்தில் கல் பிரச்னை இருப்போர், மூளை, மண்ணீரல், ஈரல் போன்ற தனித் தனி உறுப்புகளை (Organ meat) மட்டும் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளலாம்.

• சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி  என எந்த மாற்று சிகிச்சைக்கு மாறினாலும், அந்த மருத்துவர் கொடுக்கும் மருந்துகள், அரசாங்கத்தின் ஆணைப்படி தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

• கொழுப்பு நிறைந்த வெண்ணெய்,  இறைச்சி, எண்ணெய் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சோடியம், உப்பு, ஊறுகாய், கருவாடு, பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆயத்த உணவுகள் (Ready to eat) போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

• சரிவிகித உணவும், திரவம் சார்ந்த உணவுகளும் சிறுநீரகத்துக்கு நல்லது. இளநீர், நீர் மோர், பதநீர், நீர் ஆகாரம், கஞ்சி, கூழ் போன்ற இயற்கை முறையில் கிடைக்கும் உணவுகள், சிறுநீரகத்தைக் கவசமாய்காக்கும்.

• புகைப் பழக்கம், மதுப்பழக்கம், துரித உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் ஆகியவை சிறுநீரகத்தைப் பாதிக்கும் செயல்கள் என்பதால், இவற்றை உடனடியாக நிறுத்துவதே சிறந்த வழி.

• உங்கள் குடும்பத்தினர் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்பு இருந்து, சிகிச்சை பெற்றிருந்தால், உங்களுக்கும் வர வாய்ப்புகள் இருக்கிறது.  எடை மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.  ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

- ப்ரீத்தி