கன்சல்டிங் ரூம்
Published:Updated:

புகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா !

புகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா !

உறிஞ்சும் ஸ்ட்ராதான் இனி உங்கள் சிகரெட். பழச்சாறுகளை ஸ்ட்ரா போட்டுக் குடித்துப் பழகலாம். இது, மூளையில்  ‘டோபோமைன்’ என்ற ஹார்மோன் சுரந்து, மோசமான மனநிலையைச் சரிசெய்துவிடும். புகை பிடிக்கும் எண்ணம் தோன்றாது.

புகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா !

புகை பிடிப்பதை நாளை நிறுத்தலாம், அடுத்த மாதம் நிறுத்தலாம் என்று திட்டமிடாமல், முடிவெடுத்த அந்த நிமிடத்தில் இருந்து செயல்படுத்த வேண்டும். கடினமாகத்தான் இருக்கும். சிகரெட் புகைக்கவேண்டும் என்ற உணர்வு தோன்றும்போது, மனதை திசை திருப்பினால்... வெற்றி நிச்சயம்.

புகை பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு வரும்போது, சிறிய அளவிலான, சுகர் ஃப்ரீ சூயிங்கம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை சாப்பிடலாம்.

புகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா !

புகை பிடிக்க தினமும் செலவழிக்கும் பணத்தை, அப்படியே உண்டியலில் போட்டுச் சேமிக்கத் தொடங்குங்கள். ஒரே மாதத்தில் சேமித்த தொகையைப் பார்த்துப் பிரமிப்பும் உற்சாகமும் பிறக்கும்.

நூலகம், சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் கட்டாயம் புகை பிடிக்க அனுமதி இல்லை. எனவே, அது போன்ற இடங்களுக்கு அடிக்கடி செல்லலாம்.

புகை பிடிப்பதை ஏன் நிறுத்த வேண்டும் என்ற காரணங்களைப் பட்டியலிட்டு, சமையலறை, அலுவலகம், கழிப்பறைக் கதவுகளில் ஒட்டுங்கள். உங்கள் குடும்பப் புகைப்படத்தை கம்ப்யூட்டர் ஸ்கிரீன், மொபைல் போனில் பார்க்கும்படி வையுங்கள்.

புகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா !

சுறுசுறுப்பாய் இருக்க தினமும் நடை, மெதுவான ஓட்டம், நடனம், நீச்சல், செல்லப் பிராணிகளுடன் விளையாட்டு, தோட்டக் கலை என விரும்பியதில் ஈடுபடுங்கள்.

புகைபிடிப்பதை நிறுத்திய நாளுக்குப் பிறகு, தினமும் உங்களின் திட்டம் என்ன என்பதை ஒரு டைரியில் எழுதத் தொடங்குங்கள். குடும்பத்துடன் சனிக்கிழமை உணவகம், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா என பிஸியாக வைத்திடத் திட்டமிடுவது நல்லது.

மன அழுத்தம், கோபம், ஏமாற்றம் போன்றவை, புகை பிடித்து நிறுத்திய அந்த ஒரு வாரத்தில் தோன்றும். இதைச் சமாளித்து புகைபிடிக்காமல் இருந்துவிட்டால், அப்புறம் வெற்றிதான்.
புகை பிடிக்காமல் முதல் 3 வாரத்தைக் கடந்துவிட்டீர்கள் எனில், அதுவே வெற்றிதான். இனி, உங்களுக்குப் புகையின் வாசம் பிடிக்காது, புகை பிடிக்கும் எண்ணம் எளிதில் தோன்றாது. உங்களால் இனி புகை பிடிக்காமல் இருக்க முடியும் என்ற நம்பிக்கை வேர் ஊன்றிவிடும்.

- ப்ரீத்தி

புகைக்கு நோ சொல்லலாம் ஈஸியா !