நாகர்கோயிலில் இருக்கும் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப் பெரிய மருத்துவமனை. நான்கு நூற்றாண்டுகளாக மாவட்டத்தின் மக்களை நோய்களில் இருந்து காப்பாற்றிவருகிறார்கள். 10 தலைமுறைகளாக இந்தக் குடும்பத்தில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள். டாக்டர் ஜெயசேகரனின் மகன்கள், டாக்டர் தேவபிரசாத், டாக்டர் சாபு, டாக்டர் ரஞ்சித் மூவரும்தான் இப்போது மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்கள்.

மூத்தவரான டாக்டர் தேவபிரசாத் முதலில் பேசினார். ‘‘எங்கப்பா, தாத்தா, அவருடைய அப்பா என எங்க குடும்பத்தில், கடந்த நான்கு தலைமுறையாக அலோபதி மருத்துவர்கள். அதற்கு முன்பும் நாட்டு வைத்தியத்தில் பல தலைமுறைகளாக வைத்தியர்களாக இருந்திருக்காங்க. அப்பாவின் தாத்தா ஜோசப் டேனியல், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் டாக்டராக இருந்தவர். எங்க தாத்தா ஜே.என்.டேனியல், இதே ஊரில் டாக்டராக இருந்திருக்கிறார். அப்பா ஜெயசேகரன்தான், எங்கள் மாவட்டத்தில் எஃப்.ஆர்.சி.எஸ் படித்து பிராக்டீஸ் செய்த முதல் டாக்டர். 1965-லேயே இந்த மருத்துவமனையில் சிறப்புப் பிரிவுகள் இருந்தன. அந்த அளவுக்குச் சிறப்பாக இந்த மருத்துவமனையை உருவாக்கினார் எங்க அப்பா.

எங்கம்மா ராணி ஜெயசேகரன், அந்தக் காலத்து எம்.எஸ்.ஸி. அவர்தான் அப்பாவுக்கு உதவியாக, மருத்துவமனையைக் கவனித்துக்கொண்டார். அம்மாவின் அப்பா ஜி.எம்.சாமுவேலும் டாக்டர்தான். அவர்கள் வீட்டிலும் தலைமுறையாக டாக்டர்கள்தான். இப்படி குடும்பமே டாக்டர்களாக இருந்ததால், வேறு வேலை செய்வது பற்றியெல்லாம் நாங்கள் யோசித்ததுகூட இல்லை’’ என்றார்.

தேவபிரசாத்தின் மனைவி ரேணு, மகன் ஆனந்த், மருமகள் ஸ்வத்தா, என இவர் குடும்பத்திலும் அனைவரும் டாக்டர்கள்தான். இதைப் போலவே, தேவபிரசாத்தின் தம்பிகள், தங்கைகள், அவர்கள் பிள்ளைகள் என இந்தக் குடும்பத்தில் நிறைய டாக்டர்கள்.

மற்றவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளும் இந்த டாக்டர்கள், தங்கள் ஆரோக்கியத்துக்காக என்ன செய்கிறார்கள்?

‘‘தினமும் டென்னிஸ் ஆடறேன். விடியற்காலையில் வீட்டுத் தோட்டத்திலேயே நடைப்பயிற்சி செய்வேன். அதற்கு நேரம் இல்லாமல், இங்கு மருத்துவமனை வரவேண்டியது இருந்தால், இந்த வளாகத்திலேயே நடைப்பயிற்சி செய்வேன். என் குடும்பத்தில் எல்லோருமே, உடற்பயிற்சியில் அதிக கவனம் எடுத்துப்பாங்க. தினமும் கொஞ்ச தூரம் நடப்பது என்கிற அளவிலாவது உடற்பயிற்சி இருக்கும். சரியான நேரத்துக்கு உணவு எடுத்துப்பேன். ஃப்ருட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் மட்டுமே பிரேக்ஃபாஸ்ட். மதியம் ஹாஸ்பிடலில் உள்ள மெஸ்ஸில் சாப்பாடு. அதில் தினமும் ஏதாவது ஒரு கீரை இருக்கும். இரவில் லைட் டின்னர்’’ என்று தன் ஃபிட்னெஸ் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார் தேவபிரசாத்.

குறுக்கிட்ட டாக்டர் ரேணு, ‘‘எண்ணெய் சேர்க்காத உணவைத்தான் அதிகம் எடுத்துப்போம். மைதா உணவுகளைத் தொடுறதே இல்லை. எப்பவாவது விருந்துக்குப் போகும்போது பாயசம், ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடுவோம். மற்ற நேரங்களில் உணவில் கவனமாக இருப்போம்.’’ என்றார்.

இருவரும் டாக்டர்களாக இருப்பதால், ஓய்வு நேரம் கிடைக்குமா? அந்த நேரத்தை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

அவர் யூராலஜிஸ்ட்டாகவும் நான் அனஸ்தீஸ்டாகவும் இருப்பதால் ஓய்வு நேரம் கிடைப்பதே அரிதுதான். பிள்ளைகளும் எங்களோடு இல்லை, அதனால் ஓய்வு நேரம் பற்றி அலட்டிக்கொள்வது இல்லை. மகன் ஆனந்த் வேலூர் சி.எம்.சி-யிலும், கேம்ப்ரிட்ஜிலும் படிப்பை முடித்துவிட்டு, சிங்கப்பூரில் கேன்சர் சயின்டிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக வேலை செய்கிறான். மனைவி ஸ்வத்தா, கண் மருத்துவர். மகள் ரேஷ்மி, ஆட்டிசம் நோய்க்கான ஸ்பெஷல் மருத்துவம் கற்றுக்கொண்டு, சென்னையில் வேலை செய்கிறாள்.

மகனும் மகளும் லீவுக்கு வந்துவிட்டால், குடும்பத்தோடு வெளி இடங்களுக்குப் போவோம். அதிக வேலைப்பளு, டென்ஷன் இருந்தால், இவரது தம்பிகள் குடும்பத்தோடு டிரக்கிங் கிளம்பிடுவோம். ‘குமரி மாவட்ட ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் நேச்சர் கிளப்’ல் நான் ஆக்ட்டிவ் மெம்பர். அந்த கிளப் மூலமாகவும் இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்குப் போய், காடுகளில் கிடக்கும் பிளாஸ்டிக், பாலித்தீன் அகற்ற நடவடிக்கை எடுப்போம். அதுவே ரிலாக்ஸாக இருக்க உதவும்’’ எனச் சிரிக்கிறார் ரேணு.

உங்கள் வீட்டிலேயே இவ்வளவு டாக்டர்கள். உங்கள் உடலுக்கு எதாவது பிரச்னை வந்தால், என்ன மருந்து எடுத்துக்கொள்வீர்கள்?

‘‘சின்ன பிரச்னை என்றால், என்ன செய்வது என எங்களுக்கே தெரியும். பிரச்னை கொஞ்சம் சீரியஸ் என்றால், எங்கள் மருத்துவமனையில் உள்ள ஸ்பெஷலிஸ்ட்டுகளை கன்சல்ட் செய்து, உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வோம். சுய மருத்துவம் செய்வதே இல்லை. டாக்டர்களாக இருந்தாலும், உடலுக்கு ஏதாவது வந்தால் டென்ஷன் வரும்தான்’’ சிரித்தபடியே சொல்கிறார் தேவபிரசாத்.

அப்போது உள்ளே வந்தது டாக்டர் தேவபிரசாத்தின் தம்பிகள் குடும்பம். டாக்டர் சாபு, கேஸ்ட்ராலஜி சர்ஜன். அவரது மனைவி பீனா, ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் படித்திருப்பதால், மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்துவருகிறார். டாக்டர் ரஞ்சித், பொதுமருத்துவர் மற்றும் ரேடியாலஜிஸ்ட். இவரது மகள் தீபிகாவும் இதே மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.

‘‘ரெகுலராக வாக்கிங் போவேன். பாட்டிலில் அடைக்கப்பட்ட அயிட்டங்கள், பேக்கரி உணவுகள் சுத்தமாக எடுத்துக்கிறது இல்லை. என் அண்ணன் தேவபிரசாத், எங்களுக்குக் குடும்ப டாக்டர். சின்ன பிரச்னைனாலும் அவர்கிட்டதான் போவேன். அண்ணன் பரிசோதிச்சுப் பார்த்துட்டு, தேவைப்பட்டால் மருத்துவரைப் பரிந்துரைப்பார். அதன்படி சிகிச்சை எடுத்துக்குவேன். தவிர, ரிலாக்ஸ் பண்ணிக்கணும்னு தோணினால், என்னோட நிலத்துல இறங்கி, இயற்கை விவசாயம் செய்வேன். அப்ப உடலுக்குக் கிடைக்கிற புத்துணர்வை அனுபவித்தால்தான் புரியும். இது தவிர, குடும்பத்துடன் இயற்கை சூழ்ந்த இடங்களுக்குப் போவோம். சுத்தமான காற்று, மனதையும் உடலையும் தெம்பாக்கிவிடும்’’ என்று கூலாகப் பேசுகிறார் டாக்டர் பாபு.

‘‘எங்கப்பாதான் நாங்க டாக்டர் ஆகறதுக்கு இன்ஸ்பிரேஷன். சின்ன வயசிலிருந்தே அப்பா, அம்மா எங்களை சுதந்திரமான சிந்தனையோடு பழக்கினாங்க. எல்லோர் இடத்திலயும் அன்பைப் பொழியும் பழக்கம் அம்மாகிட்ட இருந்து வந்தது. கோபம், ஆத்திரம்னு நெகட்டிவ் விஷயங்கள், நம்மோட உடலுக்கும் மனசுக்கும் பெரிய எதிரின்னு அம்மா சொல்வாங்க. அதை எப்பவும் மனசிலவெச்சிருப்பேன். நான் சின்ன வயசில் ஆணழகன் போட்டிகளில் கலந்துக்கிட்டு சில பரிசுகளையும் வாங்கிருக்கேன். இப்போதும், குமரி மாவட்ட பாடி பில்டிங் அசோசியேஷனில் பொறுப்பில் இருக்கிறேன்.

அதனால், உணவு விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். காலை உணவில் கட்டாயம் பழம் இருக்கும். வாரத்தில் ரெண்டு நாள் அவல், சம்பா உப்புமா. சிறுபயறு கஞ்சியும் பிரேக்ஃபாஸ்ட் மெனுவில் அடிக்கடி இடம்பிடிக்கும். மதியம், கொஞ்சம் சாதம். நிறைய காய்கறிகள். ராத்திரியில் லைட்டான உணவு மட்டுமே. இடையிடையே ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ். உடம்பைக் கட்டுக்கோப்பாகவைக்க, காலையில் உடற்பயிற்சி அவசியம். டென்னிஸ் விளையாடுவேன். வாக்கிங் போவேன். தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவுக்கு, இருக்கவே இருக்கு அண்ணனின் அட்வைஸும், அவர் தரும் மருந்துகளும்’’ - உற்சாகமாக முடித்தார் டாக்டர் ரஞ்சித்.

- ஆண்டனிராஜ் படங்கள்: ரா.ராம்குமார்

டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்

எண்ணெய்ப் பலகாரங்கள், அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்தாலே குடல் பிரச்னை வராது.

செரிமானப் பிரச்னை இருப்பவர்கள் சிறிது சிறிதாக அடிக்கடி உணவு எடுத்துக் கொள்வது நல்லது. இரவில் சீக்கிரமே சாப்பிட்டு விடவேண்டும்.

டாக்டரின் அனுமதி இல்லாமல், வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

திடீரென எடை குறைவு ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். தீராத வயிற்று வலி, வாந்தி, மலத்தில் ரத்தம் அல்லது கருப்பு நிறத்தில் போனாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மஞ்சள் காமாலை வந்தாலோ அல்லது அதிக விருப்பமான உணவின் மீது திடீரென வெறுப்பு ஏற்பட்டாலோ, குடலில் பிரச்னை தொடங்கிவிட்டது என புரிந்து கொள்ள வேண்டும்.

40 வயதைக் கடந்தவர்களுக்கு அஜீரணம் ஏற்பட்டு வாயுத் தொல்லை ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.