Published:Updated:

அந்தப்புரம் - 5

அந்தப்புரம் - 5

அந்தப்புரம் - 5

அந்தப்புரம் - 5

Published:Updated:

அப்போது அனிதா ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். பிரேயர் முடிந்து, எல்லோரும் வகுப்புக்கு வந்து அமர்ந்தபோது ஹரிணி சொன்னாள், “ஏய் உன் சுடிதார் பின்னாடி ரத்தம்!’’

அனிதாவுக்குக் கொஞ்ச நேரமாகவே இடுப்புக்குக் கீழே ஏதோ தொல்லையாகத்தான் இருந்தது. ரத்தம் என்றதும் பதறிப்போனாள். அவசரமாக பாத்ரூமுக்குப் போய் பார்த்தாள். உள்ளாடைகளில் ஒரே ரத்தம்.  அவளுடைய பிறப்பு உறுப்பில் இருந்துதான் ரத்தம் கசிந்தது. பயத்தில் முகம் வெளிறிப்போய் அழ ஆரம்பித்தாள். இன்னும் சில மாணவிகளுக்கும் விஷயம் தெரியவர, அனிதாவுக்கு அவமானமும் பயமும் சேர்ந்துகொண்டது. 

அழுகையின் சதவிகிதம் அதிகரித்தது.  ஹரிணி வேகமாக ஓடிப்போய் டீச்சரிடம் விஷயத்தைச் சொன்னாள். டீச்சரும் அதே வேகத்தில் வந்தார்.  “அனிதா  அழாதே! இதுக்குப் பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை. அம்மாவுக்கு போன் பண்ணியிருக்கேன். அவங்க வந்ததும் நீ வீட்டுக்குப் போகலாம்’’ என்றார் பரிவோடு.

தனக்கு என்ன நடந்தது என்பது அனிதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் அழுதுகொண்டே நின்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப்புரம் - 5

ஏன்? எதற்கு? எப்படி?

பெண்களின் முதல் மாதவிடாய் நிகழ்வைத்தான் பூப்படைதல் என்று சொல்கிறார்கள். மென்ஸுரேஷன்  என்பது அதற்கான மருத்துவ வார்த்தை.

மென்ஸுரேஷன்ஸ்  இயல்பான உடல் வளர்ச்சி நிலை. பூப்படையும் பெண்ணின் மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ், அதன் அருகில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டுகிறது. இந்த பியூட்டரி சுரப்பி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது.

ஒன்று எஃப்.எஸ்.ஹெச் (ஃபாலிகல் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH)). இன்னொன்று எல்.ஹெச் (லுயூட்டினைஸிங் ஹார்மோன்(LH)). இந்த இரண்டு ஹார்மோன்களும்தான், பெண்ணின் இனப்பெருக்க வாழ்வுக்கான, செக்ஸ் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் உடன், இன்னும் இரண்டு ஹார்மோன்களும் மாதவிடாய் சுழற்சிக்கு உதவுகின்றன. அவை, புரோஜெஸ்ட்ரான் மற்றும் ஆக்ஸிடோசின்.

இந்த ஹார்மோன்கள் பெண்ணின் 10 வயதில் இருந்து 14 வயது பருவத்தில் செயல்படத் தொடங்குகின்றன. முதல் மாதவிடாய் அல்லது பூப்படைதல் நிகழ்வது இதனால்தான். பொது
வாக 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. சிலருக்கு இது 28 நாட்களில் நடக்கும். சீரான இந்தச் சுழற்சி, மனஅழுத்தம், கடுமையான  பணிச்சுமை,  திடீர் அதிர்ச்சி ஆகியவற்றின் காரணமாகப் பாதிக்கப்படுவது உண்டு.

முதல் மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு, ஆரம்ப நாட்களில் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. ஹார்மோன் செயல் பாடு, ரத்தத்தில் அணுக்களின் அளவைப் பொறுத்து, சீரற்ற சுழற்சி ஏற்படும். 16 முதல் 18 வயதில் இந்தச் சுழற்சி சரியாகி, சீரான இடைவேளைகளில் ஏற்படத் தொடங்கும்.
 

டவுட் கார்னர்

மாதவிடாய் நேரத்தில் பெண்களை வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லுவது ஏன்?

மாதவிடாய் பற்றி சமூகத்தில் பலவிதமான கட்டுக்கதைகள், நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பலவும் நம்ப முடியாதவை. விஞ்ஞானப்பூர்வமற்றவை. ரத்தப் போக்கு இருப்பதால், அந்தப் பெண் சுத்தமாக இல்லை என நினைக்கிறார்கள். மாதவிடாய் நேரத்தில், நாப்கின்கள் அணிந்து சுத்தமாக இருந்தால், அவள் மற்றவர்களைப் போல சுத்தமானவள்தான்.

ரத்தப் போக்கின் காரணமாகப் பெண் பலவீனமடைகிறாளா?

உடல்சோர்வு ஏற்படுவது உண்டு. ஆனால் ரத்தப்போக்கு முடிந்ததும், ரத்தம் சுரந்து, பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். ரத்தம் வீணாகிவிட்டதே என்று பயப்பட வேண்டியது இல்லை.

மாதவிடாய் நேரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின்கள் மாற்ற வேண்டும்?

ரத்தப் போக்குக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடும். அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் 4, 5 மாற்றலாம். மற்றபடி ஒரு நாளைக்கு 2 நாப்கின்கள் மாற்றினால் போதும்.

- ரகசியம் பகிர்வோம்

அந்தப்புரம் - 5