Published:Updated:

அந்தப்புரம் - 7

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 7

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

பாலியல் தொடர்பான வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

டி.நாராயண ரெட்டி பாலியல் மருத்துவர்


பூக்களின் மகரந்தச் சேர்க்கை, மனிதக் கருமுட்டையின் குறுக்குவெட்டுத் தோற்றம் என்றெல்லாம் படிக்கும்போது, அனிதாவுக்கு ஒரு கேள்வி மனதுக்குள் படபடக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப்புரம் - 7

பூ எப்படிக் காயாகிறது என்று சொல்கிறார்கள். மனிதக் கரு எந்த மாதங்களில் எப்படி வளர்கிறது என்கிறார்கள். ஆனால், ஒருவருக்குக் குழந்தை எப்படி உண்டாகிறது என்பதைச் சொல்லித்தருவதே இல்லையே... ஹீரோவும் ஹீரோயினும் பாடுகிறார்கள். சினிமாவில் பூவும் பூவும் உரசுகின்றன. விளக்கு அணைகிறது. அடுத்த காட்சியில் தொட்டிலில் குழந்தை இருக்கிறது.

இருட்டு, அவளுக்குள் இனம்புரியாத நினைவுகளை, கற்பனைகளை வளர்த்தது.  தன் பாலுறுப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், தன் அவற்றின் மீது, அவளுக்குள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தின. இரவின் தனிமையில் ஏற்படும் குறுகுறுப்பில், தன் பெண் உறுப்பைத் தொட்டுப்பார்த்தும் தடவிக்கொடுத்தும் இன்பம் அடைந்தாள்.  
 

அந்தப்புரம் - 7

சினிமா ஹீரோக்கள் மனதுக்குள் அணிவகுத்தார்கள். ஆணும் பெண்ணும் அணைத்துக் கொள்வதும் உரசிக்கொள்வதும் அவளுக்குத் தலையணைகளின் துணையோடு சாத்தியம் ஆயின. பெண் உறுப்பைத் தடவிக்கொடுப்பது தவறு என்பதான உறுத்தலும் அவளுக்கு இருந்தது. அதைத் தவிர்க்க முடியாத அளவுக்குத் தவிப்பும் இருந்தது. தேய்த்துக்கொடுப்பதால் தன் பெண் உறுப்பு கறுத்துப்போய்விட்டதோ என நினைத்தாள். இனி, நம்மை யார் மணப்பார்கள் என்ற குற்ற உணர்வு அவளை அலைக்கழித்தது.

அந்தப்புரம் - 7

எந்தத் தனிமையும், இரவும் அவளுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்ததோ, அதே இரவு அவளைக் குற்ற உணர்விலும் அழுத்தியது.

 - ரகசியம் பகிர்வோம்

 டவுட் கார்னர்

 உடலுறவின்போது கிளிடோரியஸின் பங்கு என்ன? என்.ஜெயபால், கோவை-1.

 கிளிடோரியஸ் என்பது ஆணுடைய பாலுறுப்பின் ‘மினியேச்சர் வடிவம்’ என்று சொல்லலாம். அதில் நிறைய உணர்வு நரம்புகள் உள்ளன. அது இன்பத் தூண்டலைக் கடத்துகிறது. உடலுறவுகொள்ளும்போது, கிளிடோரியஸ் பகுதி, தேய்த்துக் கொடுக்கப்படுகிறது. யோனிக்குள் ஆணுறுப்பு நுழைந்து மேலும் கீழுமாக அசைந்து அழுத்தும் சமயத்தில், சீராக உச்சநிலையை எட்டுவதற்கு உதவி செய்கிறது.

 உடலுறவின்போது கிளிடோரியஸைத் தனிப்பட்ட முறையில் தூண்டிவிடுவது அவசியமா? எஸ்.ராஜசேகர், நுங்கம்பாக்கம்.

நேரடியாக கிளிடோரியஸைத் தூண்டிவிடுவது அவசியம் இல்லை. உடலுறவின்போது, ஆணுறுப்பு நேரடியாக கிளிடோரியஸைத் தொடுவது இல்லை. யோனியின் உட்புற உதடுகளான லேபியா மைனோராவை ஆணுறுப்பு இழைந்துகொடுப்பதே போதுமானதாக இருக்கிறது.

சில இனக் குழுக்களில் பெண்களின் கிளிடோரியஸை அகற்றிவிடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நிஜமா? பொன்.ராஜேந்திரன், சென்னை-18.

சில ஆப்பிரிக்க மக்கள் குழுக்களிடமும் அபிசினியாவிலும் பெண்கள் பூப்படையும் நேரத்தில் கிளிடோரியஸை அகற்றிவிடும் பழக்கம் இருக்கிறது. பெண்களின் செக்ஸ் மோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இதை, ‘கிளிடோரிடெக்டமி’ என்கிறோம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெண்களின் சுய இன்ப இச்சையைத் தண்டிக்கும் விதமாக, கிளிடோரியஸை அகற்றும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நான் சில போர்னோ புத்தகங்களை, சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அதில் பெண் உறுப்புகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. என்னுடைய பெண் உறுப்பு வேறு மாதிரியாக இருப்பதாகக் குழப்பம் அடைகிறேன்.  நான் என்ன செய்வது? ஷாலினி, மதுரை.

நீங்கள் குழப்பம் அடைய வேண்டியதே இல்லை. இயற்கை பல வேறுபாடுகளைக்கொண்டதுதான். இரண்டு நபர்கள் ஒரே மாதிரி இருப்பது இல்லை.  உங்களுக்குப் பெரும் வேறுபாடு இருப்பதுபோல தோன்றினால் ‘கைனகாலஜி’ மருத்துவரை அணுகிக் குழப்பத்தைப் போக்கிக்கொள்ளுங்கள்.

நான் சிவப்பாக இருக்கிறேன். ஆனால், பெண் உறுப்பு கறுப்பாக இருக்கிறது. அது ஏன்? ராஜி, வண்ணாரப்பேட்டை. பெண் உறுப்பைச் சுற்றி தோல் நிறமிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம். வேறு தோல் நோயாக இருக்கக்கூடும் என, நீங்கள் நினைத்தால் தோல் மருத்துவரை அணுகவும்.
 

அந்தப்புரம் - 7
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism