Published:Updated:

அந்தப்புரம் - 8

அந்தப்புரம் - 8

அந்தப்புரம் - 8

"டி.நாராயண ரெட்டி"
பாலியல் மருத்துவர்

அந்தப்புரம் - 8

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்வினால் சுயஇன்பம் அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை. அதே சமயம், அது தவறு என்றும் மனது உறுத்தியது. தவிர்க்க முடியாத இத்தகைய  தவறுகள் அனிதாவுக்கு இருந்தது போலவே, அஸ்வினுக்கும் இருந்தது. தனிமையான தருணங்களில், தன் ஆணுறுப்பைத் தொட்டுப் பார்ப்பதிலும் தடவிப் பார்ப்பதிலும் அலாதி சுகம்.

இச்சையைத் தூண்டும் சினிமா காட்சிகளும் அரைகுறை ஆடைகளில் இருக்கும் பெண்களின் படங்களும், அவனுக்குக் கிளுகிளுப்பை ஊட்டின. தனிமையான இரவுகளில், அந்தப்  படங்களைப் பார்த்தாலோ, நினைத்தாலோ போதும், அவனுக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஆண்குறி விரைக்கும். அதில் இருந்து பிசுபிசுப்பான திரவம் சுரக்கும். கை, தானாக ஆண் உறுப்பை அசைத்துக்கொடுக்கும். இது தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிட்டது. உலகில் இதுபோன்ற ஆனந்தத்தை அவன் அனுபவித்தது இல்லை. ஆனந்தத்தைத் தொடர்ந்து, கூடவே பயமும் வரும்.
 
ஒவ்வொரு சொட்டு விந்து உருவாவதற்கும், நூறு சொட்டு ரத்தம் தேவை என்று, சைக்கிள் கடை சுந்தரம் சொல்லியிருந்தான். ஒவ்வொரு முறை விந்து வெளியேறும்போதும் கிளுகிளுப்புடன் பயமும் ஏற்படுவது வாடிக்கை ஆனது.  திருமணம் நடப்பதற்குள் தன்னுடைய எல்லா விந்தும் வீணாகிவிடுமோ என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது.

அந்தப்புரம் - 8

ஏன்? எதற்கு? எப்படி?

முன்பே சொன்னது போல திருமண வயது (பாலியல் தேவை) என்பது 18 வயதிலேயே தொடங்கிவிடுகிறது. ஆனால், அந்த வயதில் திருமணங்கள் நடப்பது இல்லை. படிக்க வேண்டும், நல்ல வேலை வேண்டும் எனக் காலம் நம்மை விரட்டுகிறது. சமூகச் சூழல் நம்மை இந்த நிலைக்குத் தள்ளியிருப்பது, நம் உடலுக்குத்  தெரியாது.  அது இனப் பெருக்கத்துக்குத் தயாராகி நிற்கிறது. இதுதான் இன்றைய பிரச்னை.

இதற்கு ஒரே வடிகாலாக இருப்பது, சுய இன்பம் மட்டும்தான். இதைத்தான் டீன்ஏஜ் இளைஞர்கள் செய்கிறார்கள். சுய இன்பம் என்பது, ஒரு சமுதாயக் காரணம். ஒரு காலத்தில், வயதுக்கு வருவதற்கு முன்பே, திருமணம் செய்துவிடும் நிலைமை இருந்தது. கால மாற்றத்தில் அந்த வழக்கமும் மாறிப்போனது.

இந்த நிலைமை நீடிக்கும் வரை சுய இன்பத்தைத் தடுக்க முடியாது. அதனால், விந்து மொத்தமும் காலி ஆகிவிடும் என்று அஞ்ச வேண்டியது இல்லை. இளமை இருக்கும்போதே திருமண வாழ்வில் ஈடுபட்டு இன்பம் அனுபவிப்பதுதான் இதற்கு ஒரே வழி.

டவுட் கார்னர்

“சுய இன்பம் அனுபவிப்பது தவறா?”

- ஜெயபாண்டி, மதுரை-2.

“தவறு இல்லை. பசியைப் போல பாலுணர்வுத் தூண்டலும் இயற்கையானதுதான். அதைத் தீர்த்துக்கொள்ள அறிமுகம் இல்லாத பெண்களை நாடிச் செல்லும்போது, பால்வினை நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு, வாழ்க்கையைத் தொலைப்பதற்குப் பதிலாக, சுய இன்பத்தின் மூலம், அந்த வேட்கையைத் தணித்துக்கொள்வதில் தவறு இல்லை. நாமாக சுய இன்பத்தில் ஈடுபடவில்லை என்றாலும், உறங்கும்போது தானாகவே விந்து வெளியேற்றம் நடந்திடவும் வாய்ப்பு உள்ளது.”

“ஒரு சொட்டு விந்து உருவாக நூறு சொட்டு ரத்தம் தேவை என்பது உண்மையா?”

- கே.சி.சேகர், வில்லிவாக்கம்.

“100 சொட்டு ரத்தம் சேர்ந்து, ஒரு சொட்டு விந்துவாக உருவாகும் என, சில லேகிய விற்பனையாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அதில் உண்மை இல்லை. நாம் சாப்பிடும் உணவுகள் சிறு மூலக்கூறுகளாக மாறி செரிமானம் ஆகின்றன. இந்த மூலக்கூறுகள் ரத்த நாளங்கள் வழியாக உடலின் பல பாகங்களுக்கும் சென்று, சக்தியை அளிக்கின்றன. சரியாக சக்தி கிடைத்த உறுப்புகள், ஒழுங்காகச் செயல்படும். அப்படி விதைப்பைகளுக்குக் கிடைக்கும் சக்தியானது, அங்குள்ள சுரப்பிகளைச் செயல்படவைக்கிறது. விந்து சுரப்பதும் இப்படித்தான். இதற்கும் ரத்தத்தின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்காகத் தனியாக உணவு உண்ண வேண்டியதும் இல்லை.”

“சில நாட்களில் உறங்கும்போது தானாகவே விந்து வெளியேறுகிறது. விந்து வெளியேற்றத்தால் சோர்ந்துபோய்விடுகிறேன். என்னை அதிலிருந்து மீட்க ஒரு வழி சொல்லுங்கள்?”

- கி.தாமோதரன், புதுச்சேரி.

“இது ஒரு சாதாரண உடற்கூறு நிகழ்வுதான். ஓர் இளைஞர் உடலுறவின் மூலமாகவோ, சுய இன்பத்தின் மூலமாகவோ விந்துவை வெளியேற்
றவில்லை என்றால், உறக்கத்தில் தானாகவே அது வெளியேறத்தான் செய்யும். உதாரணத்துக்கு, ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரம்பிய பிறகும் குழாயை மூடவில்லை எனில், என்ன நடக்கும். தண்ணீர் நிரம்பிக் கீழே வழியும். அதுபோலவே இதுவும். இதில் இருந்து உங்களை மீட்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.”

- ரகசியம் பகிர்வோம்