Published:Updated:

சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?

சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?
News
சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?

சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?

Published:Updated:

சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?

சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?

சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?
News
சரியான தூக்கம் இல்லையா... நீரிழிவு சிக்கல் பரிசோதிக்கலாமா?

``வாழ்க்கையில் வெற்றிகரமாகச் செயல்பட, தூக்கம் அவசியம்'' என்கிறார் அமெரிக்காவின் தெரபிக் சொசைட்டியின் மூத்த உறுப்பினர் ஹென்றி டுமிலில்தோ. ``நீண்ட நேரம் விழித்திருப்பது, நீரிழிவு நோயை நாமே அழைப்பதற்குச் சமம்'' என்கிறார். 

``தற்போது, மாலை நேரத்திலிருந்து நள்ளிரவு நேரம் வரை அதிக அளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதையும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதையும் வழக்கமாகவைத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இதனால் ஆழ்ந்த தூக்கத்தை இழந்து, நீண்டகாலப் பிரச்னைக்கு வழிவகுத்துக்கொள்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்" என்கிறார், தூக்கம் குறித்து விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதல் அறிக்கையைத் தயாரித்துவரும் ஹென்றி டுமிலில்தோ. 

``மூச்சுத் திணறலோடு தூங்குபவர்கள்தான் தற்போது அதிகம். இதனால், உடல் பருமனாகிறார்கள். இவர்களை, மறைமுக நீரிழிவுநோய் ஆட்கொள்ளும். இவர்கள் உடனே உடல் எடையைக் குறைக்கும்போது மட்டுமே நீரிழிவு நோயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும். நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு நல்ல தூக்கம் அவசியம். எதையுமே செய்யாமல் தூங்காமல் இருப்பது நோயை வரவேற்பதுபோல்தான். எவ்வளவு நேரம் உழைக்கிறீர்களோ அதற்கு இணையான நேரம் தூங்க வேண்டும். இதனால், அடுத்தடுத்த நாள்களின் வேலைத்திறன் அதிகரிக்கும். தூக்கத்துக்கு மதிப்புக்கொடுத்தாலேயே உங்களுடைய வேலையிலும் குடும்பத்திலும் அதிக கவனம் செலுத்த முடியும். நீங்கள் ஏழு மணி நேரம் தூங்குவதாக நினைத்தால், ஆறு முதல் ஆறரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறீர்கள் எனக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். 

நீங்கள் தூங்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளும்போது, உங்களுடைய உடல் வளர்சிதை விஷயங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்குப் பசி உணர்வு அதிகரிக்கும். இதன்மூலம் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்வீர்கள். உடல் எடை கூடும். அப்போது நீரிழிவு அபாயம் உங்களைச் சூழும். ஆகவே, ஆபத்து சூழ்வதற்கு முன்பே நீங்கள் தப்பித்துக்கொள்வது நல்லது" என்று எச்சரிக்கிறார். 

மற்றொரு ஆய்வில் `உறக்கமின்மை தொடர்ந்தால் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்' எனக்

கண்டறிந்திருக்கிறார்கள். தூக்கம் குறையும்போது மனநிலையிலும், உணர்வுகளைப் பிரதிபலிப்பதிலும், வேலையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உறங்கும்போது அடிக்கடி எழுந்தும், கண்களைத் திறந்து மூடினாலேயே களைப்பும் சோர்வும் ஏற்படும். இதனால் சக நண்பர்களிடையே முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துவார்கள்' என்கிறார்கள் தூக்கம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் ரோட்டர்டேம் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள். 

இவர்கள், தூக்கத்துக்கும் பணியாளரின் நடத்தைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் லாலூர் ஜிய்ஜி (Lauar Giurge) ``முந்தைய இரவு நீங்கள் தூங்கிய நேரத்தையும், அடுத்த நாள் நீங்கள் செய்த பணியையும் உற்றுநோக்கினால், நீங்களே தூக்கத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு உற்றுநோக்கும்போது மதிய உணவு இடைவெளிக்கு முன்பும் மதிய இடைவெளிக்குப் பிறகும் வேலையின் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என இரண்டாகப் பிரித்து மதிப்பெண் கொடுத்துப்பாருங்கள். சகபணியாளர்களுடன் பழகுவதில் கடுமையான போக்கும், வேலையில் பொறுப்பின்மையும் கூடும். எங்களுடைய ஆராய்ச்சி முடிவின்படி தூக்கமின்மை, எதிர்மறையான தாக்கத்தையும், களைப்பு, கடுமையான தன்மைகொண்டவராகவும் மாற்றும்.

நீங்கள் வேலையில் திறமையானவராகவும் மேம்பட்டவராகவும் பிரச்னையைத் தீர்க்கக்கூடியவராகவும் ஆகவேண்டுமென்றால், உங்களுடைய தூக்க நேரம் போதுமானதாக இருக்க வேண்டும்" என்கிறார் ஆராய்ச்சியாளர் லாலூர் ஜிய்ஜி.