Published:Updated:

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?
News
தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

Published:Updated:

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?
News
தொப்புள் கொடி தாயத்து, கடுக்காய் காப்பு, விளக்கெண்ணெய் கண்மை... பாரம்பர்ய மருத்துவ அறிவை எப்படி மீட்பது?

டலும் மனமும் திடமாக இருப்பதே உண்மையான அழகு. நம் முன்னோர்கள், ஒரு தாய் கருவுற்றிருக்கும் போதே சிசுவிற்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். வியப்பில் ஆழ்த்தும் எண்ணற்ற அஞ்சறைப் பெட்டிப் பொருள்களை நாட்டு வைத்தியமாகக் கடைபிடித்திருக்கின்றனர். அதிலும் பெண் குழந்தைகள் என்று கருதினால் அழகிற்கும் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னெச்சரிக்கையாக கை வைத்தியங்கள் செய்திருக்கின்றனர். பெண் தாய்மையடைந்த நேரத்தில் மருந்து கொடுப்பது தொடங்கி, சாத்திரங்கள், சடங்குகள் எனப் பல்வேறு முறைகளாக வைத்திருந்தனர். அவற்றை மூடநம்பிக்கைகள் எனப் புறக்கணித்தாலும் அதற்குள் இருக்கும் மருத்துவ உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.

குழந்தை பிறந்த சில நாள்களில் காய்ந்து விழுந்த தொப்புள் கொடியைத் தாயத்தில் வைத்து கழுத்தில் அணிவித்திருக்கிறார்கள். ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான காலகட்டத்தில் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்று உலக அளவில் நடக்கின்றன. இதை நம் மூத்தகுடிகள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். 

இன்றைக்கும் கிராமங்களில் கடுக்காய், வசம்பு இவற்றைக் கொண்ட காப்பினை கைகளில் அணிகின்றனர். செரிமானக் கோளாறு, சுறுசுறுப்பின்மையால் மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு உரைத்து பாலாடையில் கொடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நாம் மறந்துபோன ஒரு மரப்பாச்சி பொம்மை. மருத்துவக் குணம் கொண்ட சந்தனம், செம்மரம், ஈட்டி மரத்தினால் செய்யப்படுவது. குழந்தைகள் கடித்து விளையாடினாலும் தோல்களில் பட்டாலும் சந்தனத்தின் தன்மையால் தோல் அழற்சி, சிறு சிறு வேனல் கட்டிகள் நீங்கும் எனக் கூறுகின்றனர். உடல் சூட்டைத் தணிக்க காப்பரினால் ஆன காப்பு அணிவதும், இயற்கையாக வீட்டிலேயே செய்த கண்மையினை விளக்கெண்ணெய் கலந்து கண்கள், கன்னங்கள், பாதங்களில் இட்டிருக்கின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக பச்சைப்பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர்  கலந்த நலங்கு மாவு வீட்டிலேயே தயார் செய்யப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் முறையற்ற துரித உணவுகளாலும், பரபரப்பான வாழ்க்கை சூழல் மற்றும் மனஉளைச்சலாலும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் பெருகிவிட்டன. குறிப்பாக நீர்க்கட்டிகள் (PCOS). இதனால் முகம் முழுவதும் பருக்களும், கருப்புத் திட்டுகளும் உருவாகின்றன. மீசை போல முடிகள் அதிகம் வளர்வதும் நிகழ்கிறது. இன்று எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் வந்து விட்டன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எண்ணப்பாட்டிற்காக மட்டும் சொல்லிச் செல்லவில்லை. உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் தீங்கினை வெளிக்காட்டும் முதல் அறிகுறியாக செயல்படுவது தோல்.  அடிப்படை சிகிச்சை பெறாமல் இறக்குமதி செய்யப்பட்ட பவுடர்களால் மறைத்து அழகாக காட்டிக் கொள்வது ஆபத்தானது.  இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மிஷா பெப்சி விரிவாகப் பேசுகிறார். 

"நவீன உலகில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவைகளை எதிர்த்துப் போராடுவதிலேயே தங்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இயற்கையான காய்கறிகள், பழங்கள், தானியவகைகள் இவற்றோடு உடற்பயிற்சியும்  உடல் சுத்தமும் பேணிக்காத்தால் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம். பொதுவாகவே பெண்கள் பூப்படைந்தபின் மாதவிலக்கில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரும்புச் சத்து மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உதிரப்போக்குகள் ஏற்படக்கூடும். அதற்கு வெல்லம், பேரீச்சம்பழம், மாதுளம்பழம்  போன்றவற்றை உண்ண வேண்டும். ஆட்டு ஈரல் போன்ற இறைச்சி வகைகளும் நலம் பயக்கும். 

சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ, முகத்தில் அழுக்கு சேர்ந்தாலோ ஹார்மோன்  சுரப்பிகள் சரியான அளவில் சுரக்காமல் இருந்தாலோ முகத்தில் நிறைய பருக்கள் வர வாய்ப்புள்ளன. வெள்ளைப்படுதல், புற்றுநோய், நோய்த்தொற்று, உடல்பருமன், வயிற்று வலி, முடிகொட்டுதல் எனப் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஒருபுறம், பெரும் வளர்ச்சி கண்ட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் புதிது புதிகாக நோய்கள் உருவாகின்றன. மறுபுறம், அதற்கான தடுப்புமுறை ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. நோய் வராமல் காப்பதும், நோய் வந்தபின் தகுந்த சிகிச்சை மூலம் உடலைப் பேணிக்காப்பதுமே சிறந்தது எனக் கூறினார்.

சமீபத்திய நோய்களின் பெருக்கம் அச்சமாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு பெண் பூப்படைந்தால், கருமுட்டை வளர்ச்சிக்கும், இடுப்பு எலும்பின் வலுவுக்கும் நல்லது என வீட்டுப் பெரியவர்கள் முளைக் கீரை விதைகளை உண்ணக் கொடுத்தனர், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் நாட்டுக் கோழி முட்டை கலந்தும், தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் நல்லெண்ணெய் குழைத்தும் கழி செய்து கொடுத்தனர். 

பூப்பு நீராட்டுவிழாவாக கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் விழா எடுக்கப்பட்டது. வளைகாப்பிற்கான ஏழு வகை சோறும், சடங்கு நாள் அன்றைக்கான பருப்பு சோறும், தாய்மாமன் வீட்டு புட்டும் செய்வதற்கான பொருட்களெல்லாம் இன்றும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன.அதன் மகத்துவம் அறியாமல் நாம்தான் அலுப்புடன் அலட்சியப்படுத்துகிறோம். சிந்தித்துப் பார்த்தால், பாரம்பரியம் நிறைந்த நம் மண்பானை வாழ்வியலில், அளப்பரிய பெரும் மருத்துவ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நாகரிகம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தொலைத்து, ரசாயனங்களுக்கு அடிமையாகிவிட்டோம். 

இப்போதொன்றும் காலம் கடந்து விடவில்லை. எழுதப்படாத நம் மூதாதையரின் அறிவியல் அறிவை, பெண்களாகிய நாம் நடைமுறையில் மீட்டெடுக்க மீள் முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கிய வாழ்க்கையை சாத்தியப்படுத்த வேண்டும்.