Published:Updated:

ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

Published:Updated:
ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

சிகையலங்காரம்... நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அம்சம். மாதத்துக்கு ஒரு முறை அல்லது இருமுறை, ஹேர் கட்டிங்குக்காகவோ, ஷேவிங் செய்யவோ சலூன் கடைக்குப் போகிறோம். அங்கிருக்கும் சுழல் நாற்காலியில் சரிந்து, சாய்ந்து அமரும் கணம் உண்மையில் கொஞ்சம் ரிலாக்ஸான நேரமே. இன்னும் கூடுதலாக, நாம் போன காரியம் முடியும் வரை மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தால் அது சுகானுபவம். பல சலூன் கடைகளில் சிகையலங்காரம் முடித்து, ஃபேஸ் மசாஜ் செய்வார்கள். சிலர் தலையில் மென்மையாகப் படபடவெனத் தட்டி, ஹெட் மசாஜ் செய்து, நம் மோவாயைப் பிடித்து, தலையை `படக் படக்’ எனத் திருப்பி சொடக்கெடுத்து விடுவார்கள். அது, பலருக்கும் ஒரு நிறைவைத்தரும் நல்ல அனுபவம். ஆனால், `சலூன் கடைகளில் ஹெட் மசாஜ் செய்துகொள்வது ஆபத்து’ என்றும் எச்சரிக்கிறார்கள் சில மருத்துவர்கள்.

"மசாஜ் என்பது சாதாரணமான விஷயமல்ல. விஷயம் தெரியாத ஒருவரிடமோ, அதில் நிபுணத்துவம் பெறாத ஒருவரிடமோ சென்று

ஹெட் மசாஜ் செய்துகொள்வது மற்றும் தலையில் சொடக்கெடுப்பது போன்ற சிகிச்சைகளைச் செய்துகொண்டால், நரம்பு விலகிக்கொள்ளும். இதன் காரணமாக, `பாரலிஸிஸ்’ எனப்படும் வாதம் ஏற்படக்கூட வாய்ப்புண்டு. சமீபத்தில் டெல்லியில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இன்றைக்கு மருத்துவ உலகம் சந்தித்துவரும் பிரச்னைகளில் இது முக்கியமானது" என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவனம்..!

``மசாஜ் செய்யும் நாள்களில் உடல் ஆரோக்கியமும் முக்கியமாகிறது. மசாஜ் செய்ய நன்கு கற்றவர்கள், புரொஃபஷனல் மசாஜ் சென்டர்களில் இருப்பவர்களும் மசாஜைப் பொறுத்தவரை சில விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு அவை தெரிந்திருக்காது. எனவே, மசாஜ் செய்யப்போகிறவர்கள் தங்கள் உடலில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சளி, இருமல் போன்ற ஜலதோஷ பாதிப்பு உள்ளவர்கள், சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள், அஜீரணம் மற்றும் செரிமானக் கோளாறு இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருப்பவர்கள் அதுபோன்ற நேரங்களில் மசாஜ் செய்துகொள்ளக் கூடாது. மேலும், கைகால்களில் நீவிவிடுதல், சுளுக்கெடுத்தல், உருவிவிடுதல் போன்ற நரம்பு சார்ந்த எந்தச் சிகிச்சையையும் அந்தச் சமயங்களில் மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற நேரங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும்கூட தவறு" என்று எச்சரிக்கிறார் பாலமுருகன். 

"ஹெட் மசாஜ் செய்யப் போகிறவர்கள் இதையெல்லாம் கருத்தில்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். கடந்த சில வருடங்களாக சலூன் கடைகளில், தாமாகவே முன்வந்து சிலர் ஹெட் மசாஜைப் பரிந்துரைக்கிறார்கள். மனஅழுத்தம் காரணமாக தலைவலி ஏற்பட்டிருப்பது, கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருப்பது, ரிலாக்சேஷனை விரும்புபவர்கள் எளிதில் மசாஜ் செய்ய ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள். சிலர், தாமாகவே சுயசிகிச்சை மாதிரி இவற்றைச் செய்துகொள்வதையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக வேலைக்கு நடுவே அவ்வப்போது கழுத்தில் நெட்டி முறிப்பது, கழுத்துக்கு எண்ணெய் தடவி நீவிவிடுவது போன்றவற்றைத் தாமாகவே சிலர் செய்துகொள்வார்கள். மசாஜ் குறித்த சரியான அறிமுகமில்லாத நபர்களிடம் அதனைச் செய்துகொள்ளும்போது, மோசமான விளைவுகள் உருவாகும். குறிப்பாகக் கழுத்துப் பகுதியில் எந்த ரிஸ்கையும் எடுக்க வேண்டாம். உடலையும் தலையையும் இணைக்கும் கழுத்து, பல்வேறு நரம்புகளையும் எலும்புகளையும் கொண்டது. எனவே, கழுத்தில் ஏற்படும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தேர்ந்த மருத்துவர்களை அணுகுவதுதான் சிறந்த தீர்வைத் தரும்’’ என்கிறார் நரம்பியல் நிபுணர் பாலமுருகன். 

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனோ "தலை, காது, பாதம்...  இந்த மூன்று பகுதிகளிலும் தினமும் இரவில் லேசாக எண்ணெயை வைத்துவிட்டு, காலையில் குளித்துவிட்டாலே போதும். கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். மசாஜ் எல்லாம் செய்யவேண்டிய அவசியமே இல்லை.  அதோடு, மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இது உதவும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். இரவுத் தூக்கம் சீராகும். இடுப்புவலி தீரும். ரத்த நாளங்கள் நன்கு இயங்கும். பாதவெடிப்பு தொடர்பான எந்தப் பிரச்னையும் வராது’’ என்கிறார்.

இது தொடர்பாக மருத்துவர் சமுதாயப் பேரவையின் மாநிலத் தலைவர் வே.பழனியிடம் பேசினோம் ``தமிழ்நாட்டில் இதுவரை ஹெட் மசாஜ் தொடர்பாக எந்தப் புகாரும் வந்தது இல்லை. சலூன் கடைகளில் மசாஜ் செய்பவர்கள் அனைவரும் முறையாகப் பயிற்சி எடுத்துதான் அதைச் செய்துவருகிறார்கள். எந்த இடத்தில் பிரஷர் கொடுக்கவேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் செய்கிறார்கள். பயிற்சி எடுக்காமல் ஹெட் மசாஜ் போன்ற  சிகிச்சைகளை எங்களில் யாரும் செய்வதில்லை. கிராமங்களில், ஊர்களிலிருந்து வருபவர்களில் சிலர்தான் சுளுக்கு எடுக்கிறார்கள். ஆனால், அவர்களும் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களே.  

இந்த விஷயத்தில் அவர்கள் பயிற்சி எடுத்தற்கான சான்றிதழ்கள் கடைகளிலேயே இருக்கும். சான்றிதழ்கள் பெற அதிகமான பணம் செழவழிக்க வேண்டும். அதனால் பயிற்சிகள் எடுத்தும் சிலர் சான்றிதழ் இல்லாமல் இருப்பார்கள். எங்கள் சங்கத்தின் மூலமாகவே வெளியிலிருந்து ஆள்களை வரவழைத்து இது தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறோம். 

அதுபோல, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே மசாஜ் செய்கிறோம். வாடிக்கையாளர்களை வற்புறுத்துவது இல்லை. விரும்பும் வாடிக்கையாளர்களிடமும் அவர்களின் உடல்நிலையைக் கேட்டறிந்த பின்னரே மசாஜ் செய்கிறோம். பணத்துக்காக வற்புறுத்தி யாரும் இதைச் செய்வதில்லை’’ என்கிறார் பழனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism