Published:Updated:

அந்தப்புரம் - 10

அந்தப்புரம் - 10

அந்தப்புரம் - 10

அந்தப்புரம் - 10

Published:Updated:

டி.நாராயண ரெட்டி
பாலியல் மருத்துவர்

அந்தப்புரம் - 10

ல்லூரியில் மிக நாகரிகமான இளைஞன் மதன். சிவந்த நிறம், சற்றே நீலம் பாய்ந்த கண்கள். அதுவே அவனுக்கு அதீத ஈர்ப்பைக் கொடுத்தது. பணக்கார வீட்டுப் பையன். படிக்கும் காலத்திலேயே காரில்தான் வருவான். படிப்பு முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அஸ்வினின் அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து, சற்றே பதற்றத்தோடு வந்தவன், முக்கியமான விஷயம் பேச வேண்டும் என அவசரமாக இழுத்துக்கொண்டு காபி ஷாப்புக்குப் போனான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப்புரம் - 10

“வீட்டிலேயே பேசியிருக்கலாமேடா?”

“இந்த விஷயத்தை வீட்டில்வைத்துப் பேச முடியாது’’ என்றான் மதன்.

“அப்படி என்னடா ரகசியம்?’’

மதன் குரல் தாழ்த்திச் சொன்னான். “என் வாழ்க்கைப் பிரச்னைடா!’’

“சரி சொல்லு.’’

“எனக்குக் கல்யாணம் பண்ண நாள் குறிச்சுட்டாங்கடா.’’

“கங்கிராட்ஸ்... அதை ஏன் இவ்ளோ அதிர்ச்சியா சொல்றே?’’

மதன் அமைதியாக ஜன்னல் வழியே வெளியே வெறித்தான். பின், தன் கையை உயர்த்திக் காட்டினான். “தெரியுதா?’’ என்றான். அஸ்வினுக்கு மதனுடைய நடவடிக்கை சுத்தமாகப் புரியவில்லை. அவன் கையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“நடுங்கறது தெரியுதுல்ல?’’ என்றான் மதன்.

அடுத்து அவனே தொடங்கட்டும் என காத்திருந்தான் அஸ்வின்.

“என் நரம்புகள் தளர்ந்துபோச்சுடா. என் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தணும். நான் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதுல ‘நரம்புத் தளர்ச்சியா... பிரச்னை இல்லை’னு போட்டிருந்தாங்க. அந்த டாக்டரைப் போய்பார்த்தேன். என்னுடைய நரம்புகள் எல்லாம் பழுதாகிப்போச்சு, சரிபண்றது ரொம்ப கஷ்டம். 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்னு சொல்லியிருக்கார். ஒரு லேகியம் ரெடி பண்ணி கொடுக்கறதாகச் சொன்னார். எனக்கென்னவோ நம்பிக்கையே இல்லை’’ என்றான். 

இதற்கு எல்லாம், அறியாத வயதில் செய்த சுய இன்பம்தான் காரணம் என்று அவன் உறுதியாக நம்பினான்.

“இப்ப எப்படிடா கல்யாணத்தை நிறுத்தறது? அநியாயமா ஒரு பெண்ணோட வாழ்க்கையைப் பாழாக்க விரும்பலைடா... இப்ப நான் என்ன பண்றது?’’ கவலையோடு கேட்டான்.

அம்மா, அப்பாவிடம் தன் பிரச்னையை எடுத்துச் சொல்வதற்கும் சங்கடம். வேறு ஒரு டாக்டரிடம் பேசி, கல்யாணத்துக்கான தகுதி தனக்கு இருக்கிறதா என்பதை உறுதிசெய்யவும் தயக்கம். மீண்டும் மீண்டும் தான் ஆண்மையற்றவன் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அவன் தயார் இல்லை. மதனுடைய மனம் கோழைத்தனமும் தன்னிரக்கமும் செயல்படும் உள்ளமாக இருந்தது. அவன் தற்கொலைக்கும் தயாராகியிருந்தான்.

ஏன்? எதற்கு? எப்படி?

முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது மதனின் நரம்புகள் பழுதாகிவிட்டனவா? திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், அவன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத்தான்.

சுயஇன்பம் என்ற ஆங்கில வார்த்தையை ‘மாஸ்ட்டர்பேஷன்’ என்பர். சுயஇன்பம் என்பது செக்ஸ் ஆர்கனைத் தூண்டி, மகிழ்ச்சியை அனுபவிப்பது. பாலியல் தொடர்பான பெரும்பாலான தகவல்கள், செவி வழிச் செய்திகளால் தவறான வக்கிர உணர்வைத் தூண்டும் புத்தகங்களால், மூட நம்பிக்கைகளால் ஆனவை. உலகில் இல்லாத பாவத்தைச் செய்துவிட்டது போல் சம்பந்தப்பட்ட ஆணையும் பெண்ணையும் குற்ற உணர்வில் ஆழ்த்துவதற்கு அதுதான் காரணம்.

‘உலகில் 95 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தான். மீதம் ஐந்து சதவிகிதம் பேர் பொய் சொல்கிறார்கள்’ என்று புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. ஏறத்தாழ எல்லோரும் சுய இன்பப் பிரியர்கள்தான்.

மதன் பயப்படுவதைப் பார்த்தால், உலகில் உள்ள அனைவரும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். அதனால், மதன் தன் சுயஇன்பத்தால் நரம்புகள் தளர்ந்துவிட்டதாகப் பயப்படத் தேவை இல்லை. கண்ட கண்ட புத்தகங்களைப் படித்துவிட்டு, போலி டாக்டர்களின் அறிவுரை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

 டாக்டர் ஒரு டவுட்...

“என் நண்பனின் கைகள் நடுங்குகின்றன. சுய இன்பம் அனுபவிப்பதுதான் இதற்குக் காரணமா?”

துஷ்யந்த், விராலிமலை.

“உங்கள் நண்பருக்கு கை நடுக்கம் ஏற்படுவதற்கு கால்சியம் பற்றாக்குறை, மனநோய், நரம்பியல் நோய்கள் போன்றவை காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சுய இன்பம் அனுபவிப்பது காரணம் அல்ல.”

 “அதிகப்படியான சுய இன்பம் தீங்கு விளைவிக்குமா?”

 ஆர்.ஜேம்ஸ், திருவனந்தபுரம்.

“அதிகப்படியான என்பதற்கு என்ன அளவு எனத் தெரியவில்லை. சுய இன்பம் அனுபவிப்பதில் அதிகப்படி என்ன இருக்கிறது? வாரத்தில் ஒரு தடவையா, ஒரு நாளுக்கு ஒருதடவையா? இதை அதிகப்படி என அளப்பதற்கு கருவி ஒன்றும் இல்லை. இதில், விரும்பி இன்பம் அனுபவிப்பது அல்லது பழக்கம் காரணமாக ஈடுபடுவது என இரண்டு வகை உண்டு. எதுவாக இருப்பினும் தீங்கு விளைவது இல்லை.”

 “பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பார்களா?”
 

கணேசன், பெரியபாளையம்.

“பெண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். கிளிடோரியஸைத் தேய்த்துக்கொடுப்பது, சில பெண்கள் தொடைகளுக்கு இடையே துணிகளையோ, தலையணையையோ வைத்து தேய்த்துக்கொள்வர். வெகு சிலர் வைபரேட்டர், டில்டோ போன்ற பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.”

“திருமணத்துக்கு முன் சுய இன்பம் அனுபவித்த பெண்கள், திருமணத்துக்குப் பிறகு இல்லற இன்பத்தில் மகிழ்ச்சி அடைவார்களா?”


 
வி.ராஜன், வண்ணாரப்பேட்டை.

“ஆம்... இல்லை என இரண்டு பதில்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. திருமணத்துக்கு முன் சுயஇன்பத்தால் உச்சநிலையை எட்டி இன்பம் துய்த்த பெண்கள், தங்கள் இணையுடன் அந்த சுகத்தை அடைய முடியாமல் ஏமாறுவது உண்டு. இணையுடன் இன்பம் துய்ப்பது என்பது சம்பந்தப்பட்ட இருவரின் மனநிலை, செக்ஸ் முன் விளையாட்டு போன்றவற்றோடு் தொடர்புடையது.”

- ரகசியம் பகிர்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism