Published:Updated:

அந்தப்புரம் - 12

அந்தப்புரம் - 12

அந்தப்புரம் - 12

அந்தப்புரம் - 12

Published:Updated:

டி.நாராயணரெட்டி
பாலியல் மருத்துவர்

அந்தப்புரம் - 12

ல்யாண நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மணமகன்களுக்கு வரும் சந்தேகங்கள் எப்போதுமே விநோதமானவை. வீட்டில் திருமணப் பேச்சு எடுத்ததில் இருந்து, அஸ்வினுக்கும் இதுபோன்ற சந்தேகங்கள், பயங்கள் வரத் தொடங்கின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலுவலகத் தோழன் சக்ரவர்த்தியிடம் சொன்னபோது, வாழ்த்துகள் கூறியவன், தாம்பத்திய உறவு பற்றி பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, பேச்சுவாக்கில் அதிர்ச்சிகரமான சந்தேகத்தைக் கிளப்பினான், சக்ரவர்த்தி. ‘சின்ன வயதில் அம்மைபோட்டிருந்தால், அவர்களுக்குக் குழந்தை பிறக்காது’ என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. இதைக் கேட்ட அஸ்வினுக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம், அஸ்வினுக்குச் சின்ன வயதில் அம்மை போட்டிருந்ததுதான். சக்ரவர்த்தியோ, அவன் உறவினர் ஒருவருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை. என்னென்னவோ டெஸ்ட், ட்ரீட்மென்ட் எடுத்தும் குழந்தை பிறக்கவில்லை. கடைசியில் அவனுக்குச் சின்ன வயதில் அம்மை போட்டதுதான் காரணம் என்று தெரியவந்தது என்றான்.

அம்மாவும் அப்பாவும் வந்துகுவிந்த பெண் வீட்டு ஜாதகங்களை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தபோது, அஸ்வின், ‘தனக்கு வாரிசு உருவாகாமல் போய்விடுமோ’ என்ற அச்சத்தில் தவித்துக்கொண்டிருந்தான். இது உண்மைதானா?

அந்தப்புரம் - 12

ஏன்? எதற்கு? எப்படி?

சிறுவயதில் அம்மைபோட்டால் குழந்தை பிறக்காது என்பது, முற்றிலும் தவறான கருத்து. இளம்வயதில் ஓர் ஆண், பொன்னுக்கு வீங்கி (இதைச் புட்டாலம்மை என்றும் சொல்வர்) என்ற அம்மையினால் தாக்கப்படும்போது அது விரையைப் பாதிப்பது உண்டு.

பொன்னுக்கு வீங்கி வைரஸ், விதைகளைப் பாதிக்கும் தன்மைகொண்டவை. விந்துவை உற்பத்திசெய்யும் செமினிஃபெரஸ் ட்யூபிள்ஸ்களை அது நிரந்தரமாகப் பழுதடையச் செய்துவிடும். இது பொன்னுக்கு வீங்கி வந்த எல்லோருக்கும் நிகழ்வது இல்லை.

 குழந்தைப் பருவத்தில் பொன்னுக்கு வீங்கி ஏற்பட்டிருந்தால், அப்போது விந்து உற்பத்தியாகும் பகுதிகள் வளர்ச்சி அடைந்திருக்காது. அதனால், அவை பாதிக்கவும் வாய்ப்பு இல்லை. அஸ்வின் திருமணத்துக்குத் தயாராகும் வயதுக்கு முன்னதாகவே சின்னம்மையால் பாதிக்கப்பட்டிருந்தான். அதனால், அவன் விதைகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இதை எண்ணி தனக்கு வாரிசு உருவாகாது எனக் கவலை அடைய வேண்டியதே இல்லை.

டாக்டர் ஒரு டவுட்...

“ஆணுறுப்பை நீளமாக்குவதற்கு வழி உள்ளதா?”

ஒரு வாசகர், தாமரைப்பாக்கம்.

“உங்கள் வயதைக் குறிப்பிடாததால் பிரச்னையை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. வளர் இளம் பருவத்தில்தான் ஆணுறுப்பு முழுமையாக வளர்ச்சி அடையும். அதாவது 18 முதல் 20 வயதில். அதன் பிறகு, அதை நீளமாக்குவதற்கு எந்தப் பயிற்சியும் இல்லை. ஒரு வேளை உங்களுக்கு ஹார்மோன் சரிவிகிதத்தில் இல்லாத காரணத்தால், ஆண்குறி சின்னதாகக் காணப்பட்டால், போலி டாக்டர்களிடம் செல்லாமல், நல்ல டாக்டரை அணுகவும். ஹார்மோன் சரிவிகிதமாவதற்கு மருந்துகள் தருவார். இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், பிரச்னையில் இருந்து விடுபடலாம்.”

 “வேக்கம் பம்ப் எனும் கருவி ஆண்குறியைப் பெரிதாக்க உதவும் என்கிறார்களே?”

ஒரு வாசகர், நாமக்கல்.

“தவறு. வேக்கம் பம்பு, விரைப்புத் தன்மைக்கானவையே தவிர, ஆண்குறியை நீளமாக்குவது அல்ல.”

 “என் ஆண்குறியின் தலைப்பகுதியில் தோல் ஒட்டி உள்ளது. நான் ஆண் உறுப்பை சுத்தமாகத்தான் பராமரிக்கிறேன். ஆனால், உடலுறவு கொள்ளும்போது, தோல் பின்பக்கமாக நகர்ந்து, வலியை ஏற்படுத்துகிறது. இதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?”

ஒரு வாசகர், சென்னை-45.

“தோல் பகுதி இப்படித் தலைப்பகுதியோடு ஒட்டி இருப்பதை ‘ஃபைமோஸிஸ்’ என்பார்கள். சிலருக்குப் பிறவிக் குறைபாட்டால் அப்படி அமைந்திருக்கும். ‘சர்கம்சிஸன்’ எனப்படும் சிறிய அறுவைசிகிச்சை செய்தால் சரியாகிவிடும்.”

- ரகசியம் பகிர்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism