Published:Updated:

அந்தப்புரம் - 13

அந்தப்புரம் - 13

அந்தப்புரம் - 13

அந்தப்புரம் - 13

Published:Updated:
அந்தப்புரம் - 13

ஷ்வினுக்குப் பல இடங்களில் பெண்பார்க்கும் படலமும், அனிதாவுக்கு வரன் தேடும் படலமும் தொடர்ந்தது. நம்முடைய வாசகர்கள் சிலர் எதிர்பார்த்தபடி அல்லது சிலர் எதிர்பார்க்காதபடி இருவரும் இணைந்து இல்லற வாழ்வைத் துவங்கினர்.  

அந்தப்புரம் - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஷ்வினுக்கும் அனிதாவுக்கும் திருமணமானதும் புதிய அனுபவங்களும், பரவசங்களும், தடுமாற்றங்களும் மனதை நிறைத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.  பார்க்கிற பெரிசுகள் எல்லாம் இன்னும் 10 மாதங்களில் குட்டி அனிதாவோ, அஷ்வினோ பெற்றுக் கொடுக்கும்படி வலியுறுத்
தினார்கள்.

சிறுவயதில் இருந்தே கடின உழைப்பாளி என்று பெயர் எடுத்தவள் அனிதா. அம்மா செய்யும் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள். துணிகளைத் துவைப்பது, அடுக்கிவைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது என அனைத்தும் அவளுக்கு அத்துப்படி. மாமியார், மாமனாருக்கு நல்ல மருமகள் கிடைத்துவிட்ட திருப்தி. ஆனால், அஷ்வினுக்குத்தான் சிக்கல்.எப்போதும் வியர்வை வீச்சம், தலையை வாரி, பவுடர் போட்டு,  பூ வைத்து அலங்கரித்துக்கொள்வதில் அனிதாவுக்கு ஆர்வமோ நேரமோ இல்லை. கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள் அவளது வசீகரம் கலைந்துபோனது.  மெள்ள ஆரம்பித்தது அந்த விலகல். கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும் போல அவனுக்குள் ஒரு மனத்தடை. கல்யாணமான இளசுகள் மத்தியில் ஒரு நெருக்கத்தைக் காணோமே என்று சிலர் பேச ஆரம்பித்தனர்.

ஏன்? எதற்கு? எப்படி?

உடல் துர்நாற்றம் உறவையே பாதிக்குமா?  தனிமனித சுத்தம் என்பது செக்ஸ் வாழ்வோடு தொடர்புடையதா?

ஆம். நமக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது பல சமயங்களில் தர்மசங்கடத்தை உருவாக்கும். குறிப்பாக, நம் வாழ்வின் சரிபாதியாக அமையும் நம் வாழ்க்கைத் துணைக்கு. நம்முடைய இனப்பெருக்க உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் இணையோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

நம் உடலானது,  இயல்பாகவே தன்னைச் சுத்தம் செய்துகொள்ளும் தன்மை உடையது. பெண்ணுக்கு யோனியே சில திரவங்களைச் சுரக்கச்செய்து, அசுத்தங்களை வெளியேற்றி அதைக் குழைவுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்தத் திரவமானது யோனியைச் சுத்தமாக வைத்திருக்க உதவுவதுடன், உடல் உறவின்போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

ஆனால், இந்தத் திரவம் காற்றில் பட்டு வினையாற்றும்போதுதான் கெட்ட வாசத்தை உருவாக்கிவிடுகிறது. கிருமிகள் உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.தினமும் குளிக்கும்போது, ஆணும் பெண்ணும் பாலுறுப்புகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விளக்கம்.

குளிக்கும்போது யோனியின் இதழ்கள், கிளிட்டோரியஸ் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். யோனித்திறப்பு, சிறுநீர் வெளியேறும் துளைத்திறப்பு ஆகியவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். சாதாரணக் குளியல் சோப்பே போதுமானது. வேறு வேதியல் பொருட்களை உறுப்புகளின் உள்ளே சுத்தப்படுத்தப் பயன்படுத்த தேவையிருப்பின், டாக்டரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே செய்ய வேண்டும். சில வீரியமிக்க கெமிக்கல்கள், உறுப்புகளில் எரிச்சலையும் புண்களையும் ஏற்படுத்திவிடக்கூடும்.

ஒரு டவுட்!

“என் கணவர் என் யோனியில் இருந்து கெட்ட வாடை வீசுவதாகச் சொல்கிறார். அவர் என்னைவிட்டு விலகிச் செல்வதாகத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?”

பெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி, கோவை.

“நம் உடலின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொரு விதமான வீச்சங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் உண்மை. பெண் உறுப்பின் வீச்சம் சற்று அதிகமாகவே இருக்கும்.  இது, உங்கள் செக்ஸ் வாழ்க்கையையே பாதிக்கும்படி விட்டுவிடக் கூடாது. தினமும், குளிக்கும்போது மற்ற பகுதிகளுக்கு எடுத்துக்கொள்ளும் அக்கறையோடு இதையும் சுத்தப்படுத்துங்கள். இந்த வீச்சம் அதிகரிக்கும்போது, அந்தப் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு இன்ஃபெக்‌ஷனையும் உருவாக்கும். அத்தகைய தருணங்களில் டாக்டரை அணுகுவது நல்லது.”

“விந்து சுரப்பிதான் ஓர் ஆணுக்கு முக்கியமானதா?”

ராஜசிம்மன், காரைக்குடி.

“இல்லை. அது ஆண் உடம்பில் உள்ள சுரப்பிகளில் ஒன்று. அது கருத்தரிப்புக்குப் பயன்படக்கூடியது. மற்றபடி வேறு ஒரு பயனும் அளிப்பது இல்லை.”

- ரகசியம் பகிர்வோம்

ஓவியம்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism