Published:Updated:

பணம், உங்கள் பலம்!

அவசியம் எடுத்தாக வேண்டும்... ஆரோக்கிய காப்பீடு!

பணம், உங்கள் பலம்!

அவசியம் எடுத்தாக வேண்டும்... ஆரோக்கிய காப்பீடு!

Published:Updated:

ஸ்தூரி, மேகலா இருவரும் அலுவலகத் தோழிகள். சென்னை, தாம்பரத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்கள். மறைமலைநகரில் இருக்கும் உடல் நலமில்லாத தோழி வேணியைப் பார்க்க கால்டாக்ஸியில் சென்றுகொண்டிருந்தார்கள்.

பணம், உங்கள் பலம்!

‘‘வாடகை நாளுக்கு நாள் ஏறிட்டிருக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டிலேயே காலம் தள்ளு வது..?” என்றார்  கஸ்தூரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருக் கேன். படப்பை பக்கத்துல மனை வாங்கிப் போடலாம்னு இருக்கேன்..!” என்று மேகலா பதில் சொல்லும்போது, தட்... தடார்! முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென வேகத்தைக் குறைக்க, கால் டாக்ஸியின் வேகத்தை உடனடியாக டிரைவரால் குறைக்க முடியா மல் போக... விபத்து. கஸ்தூரி, மேகலா இரு வருக்கும் படுகாயம். தோழி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையிலே இவர் களும் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனை செலவு 5 லட்ச ரூபாய்! ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி (ஆரோக்கிய காப்பீடு) எடுத்து இருந்ததால், கஸ்தூரிக்கு மருத்துவமனைச் செலவு இல்லை. இந்த பாலிசிக்கு அவர் கட்டியிருந்த பிரீமியம் 10,000 ரூபாய்தான்!

ஆனால், பிரீமியச் செலவை எண்ணி ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை மேகலா. இதனால், மனை வாங்க வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் கரைந்து போனது!

இனி என்றைக்கு காசு சேர்த்து மனை வாங்குவது, வீடு கட்டுவது என்ற கவலையில் மேகலா மெலிந்து போனார். அவர் வாழ்க்கை, பழைய நிலைக்குத் திரும்ப பல ஆண்டுகள் ஆனது. இப்போது மேகலாவும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன?

திடீர் விபத்து, காயம் ஏற்பட்டால் அல்லது உடல் நலக்குறைவு போன்றவற்றால் ஏற்படும் மருத்துவச் செலவை சமாளிக்க உதவும் நிதி பாதுகாப்புதான், ஹெல்த் இன்ஷூரன்ஸ். இந்த விவரங்களைப் பாருங்கள்... கடந்த 2000-ம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோய்க்கான மருத்துவச் செலவு சுமார் ரூ.1.75 லட்சமாக இருந்தது. அது 2015-ல் ஏறக்குறைய ரூ. 5 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இதேபோல், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை செலவு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக அதிகரித் துள்ளது. இவை சின்ன உதரணங்கள்தான்.
இப்படி மருத்துவச் செலவு நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டிருக்கும் நிலையில் ஏதாவது நோய் வந்தால், அதற்கான மருத்துவச் செலவை பெரும்பாலானவர்களால் சமாளிக்க முடியாது. அதேநேரத்தில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் இது போன்ற செலவுகளை சுலபமாக சமாளித்துவிடலாம்.

ஆயிரங்களில் பிரீமியம் கட்டி,  லட்சங்களை மிச்சப்படுத்தும் ஆரோக்கிய காப்பீடு  அவசியம்தானே?!

பணம், உங்கள் பலம்!

பிரீமியம் எவ்வளவு?

வேலை பார்க்கும் 28 வயதான பெண், அவரின் கணவர் (30 வயது) மற்றும் 5 வயது பிள்ளைக்கு 5 லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் ஆண்டு தோராய பிரீமியம்..

சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism