Published:Updated:

ஒவ்வொரு 2 நி்மிடத்துக்கும் 1 குழந்தையின் உயிரைப் பறிக்கும் நிமோனியா - அலர்ட் ரிப்போர்ட்! #DataStory

ஒவ்வொரு 2 நி்மிடத்துக்கும் 1 குழந்தையின் உயிரைப் பறிக்கும் நிமோனியா - அலர்ட் ரிப்போர்ட்! #DataStory
News
ஒவ்வொரு 2 நி்மிடத்துக்கும் 1 குழந்தையின் உயிரைப் பறிக்கும் நிமோனியா - அலர்ட் ரிப்போர்ட்! #DataStory

ஒவ்வொரு 2 நி்மிடத்துக்கும் 1 குழந்தையின் உயிரைப் பறிக்கும் நிமோனியா - அலர்ட் ரிப்போர்ட்! #DataStory

நிமோனியா! இந்த வார்த்தையை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதன் கொடூரத்தை அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்பது கேள்விக்குறியே!

கேன்சர், ஹெச்ஐவி போன்ற உயிர்க்கொல்லி நோய்களைக் காட்டிலும், நிமோனியா காரணமாகத்தான் உலக அளவில் அதிகக் குழந்தைகள் மரணமடைகிறார்கள். உலகில் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் இதற்குப் பலியாகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 'இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை (5 வயதுக்குட்பட்ட) நிமோனியா காரணமாக மரணமடைகிறது' என்று அதிர வைக்கிறது ‘இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’. இதுவரை நிமோனியாவால் இறந்த குழந்தைகளுள் 98 சதவிகித குழந்தைகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்தவை.

''நிமோனியா'' என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இருபதில் மூன்று குழந்தைகளுக்கு 'ஸ்ட்ரெப்‌டொகாகஸ் நிமோனியே பாக்டீரியா' தொற்று ஏற்படுகிறது. ஆயிரம் குழந்தைகளில் முப்பது பேர் நிமோனியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். தடுப்பூசிகள் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறை மூலம் நிமோனியா தாக்குதலைத் தடுக்கலாம்'' எனச் சொல்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். கூடவே, ''தடுப்பூசிகளையெல்லாம் தாண்டி, பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்''  என்பதையும் வலியுறுத்துகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உண்மையில் பார்க்கப்போனால், வளரும் நாடுகளில் தாய்ப்பால் கொடுப்பது என்பது சர்வசாதாரண விஷயமே. ஆம், பெரும்பாலும் பால் கொடுப்பதற்குத் தயங்காத சமூகமாகத்தான் வளரும் நாடுகள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள நாடுகளின் சமூகங்கள் இருக்கும். ஆனால், வளரும் நாடுகளில் பட்டியலில் இடம்பெற்ற நாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக மேலை நாட்டுக் கலாசார மோகத்தில் வீழ்வதால், தாய்ப்பால் கொடுப்பது என்பது குறைய ஆரம்பித்திருக்கிறது. இதைத்தான் ஆய்வுமுடிவுகளும் காட்டுகின்றன. இப்படித் தாய்ப்பால் கொடுப்பது குறைய ஆரம்பித்திருப்பதும் வளரும் நாடுகளில் இந்த நிமோனியா தாக்குதல் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் தடுப்பூசிகளும் பிரபலமாகிக் கொண்டுள்ளன.

எல்லாம் சரி, இந்தத் தடுப்பூசிகளைப் போடுவது என்பது அத்தனை பேருக்குமே சாத்தியமான ஒன்றா. 15 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று தடவை போடப்படும் இந்தத் தடுப்பூசியின் விலை 3,600 ரூபாய் என்கிறார்கள். இந்த நிமோனியா தடுப்பூசியை, குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசித் திட்டங்களில் இணைத்துள்ளது இந்திய அரசாங்கம். ஆனால், சில மாநிலங்களில் மட்டுமே இது நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு வரவில்லை.