Published:Updated:

அந்தப்புரம் - 15

அந்தப்புரம் - 15

அந்தப்புரம் - 15

அந்தப்புரம் - 15

Published:Updated:
அந்தப்புரம் - 15

வாசனை அல்லது நாற்றம் எப்படி செக்ஸோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பது பற்றி கடந்த இரண்டு இதழ்களில் சொல்லியிருந்தேன். அனிதா, அஸ்வினுக்கு மட்டுமல்ல... பொதுவாக பலருக்கும் துர்நாற்றத்தால் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது. நிறையப் பேர் போனிலும் கடிதம் மூலமாகவும் இதுபற்றி விளக்கம் கேட்டார்கள்.

இந்தத் தொடரில் அஸ்வினும் அனிதாவும் சாம்பிள்கள். பல லட்சம் பேரின் பிரதிநிதிகள். சொல்லத்தயங்குகிற சின்னச்சின்னப் பிரச்னைகள் எப்படிப் பூதாகரமாக மாறுகின்றன. குடும்பமே சிதைவதற்குக் காரணமாகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப்புரம் - 15

என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கே பதில் சொல்லிவிடலாம் என நினைக்கிறேன்.

ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் கேட்ட கேள்வி

'நான் ஒரு செயின் ஸ்மோக்கர். என்னுடைய மனைவி நான் புகைப்பதை எதிர்ப்பது இல்லை. ஆனால், நான் முத்தமிட முயற்சிக்கும்போதெல்லாம் மறுத்துவிடுகிறார். எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் சிகரெட்டைவிட முடியவில்லை. நான் என்ன செய்வது?'

'நீங்கள் சிகரெட்டை விடவேண்டும் என நினைத்தால் நான் 100 சதவிகிதம் உதவத் தயார். மன உறுதி ஒன்றுதான் அதற்குத் தேவை. அது நிச்சயம் உங்களிடம் உண்டு. அதைக் கண்டுபிடியுங்கள். மேலே கொண்டுவாருங்கள். அப்படி முடியவே இல்லை என்று நினைத்தால், உளவியல் நிபுணர்களை அணுகுங்கள். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள்.

நாற்றத்தில் இருந்து வாயைக் காப்பாற்றுவது எப்படி எனக் கேட்டால், அதற்குச் சில வழிமுறைகளைக் கூற முடியும்.

மனைவியை அணுகுவதற்கு முன் பல் துலக்க வேண்டும்.  

உங்களுடைய வாய் துர்நாற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை என்றால், மவுத் வாஷ் பயன்படுத்துவது சிறப்பு. உணவுத் துகள்கள், புகையிலைப் பொருட்கள், ஜூஸ் எல்லாம் கலந்த மசாலாவாக வாடை இருக்கக்கூடும். ஈறுகள், பல் எனாமல் போன்றவைகளில் பாதிப்பு இருந்தால், டாக்டரின் உதவியுடன் அதைச் சரி செய்துகொள்ளவும்.

கிராம்பு, பெப்பர் மின்ட் போன்றவற்றைச் சுவைப்பதும் வாயின் துர்நாற்றத்தை மறைக்கும்.'

ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் கேட்டார்.

'என்னுடைய சுவாசம் துர்நாற்றமாக இருக்கிறது. என் மனைவி அப்படித்தான் சொல்கிறாள். என்னை நெருங்கவே தயங்குகிறாள். எனக்காகவும் அவளுக்காகவும் இதை உடனே சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?'

'கெட்ட சுவாசத்தை 'ஹாலிடோசிஸ்’ என்பார்கள். அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. உணவுக் குழாயில் நோய்த் தொற்று, ஈறு வீக்கம், பல் சொத்தை, ஈரல் பாதிப்பு, சிகரெட் பழக்கம், சர்க்கரை நோய், அஜீரணக் கோளாறு, மூக்கில் நோய்த் தொற்று, மூக்கில் சதை வளர்தல், சைனஸ் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பல காரணங்களால் சுவாசத்தில் நாற்றம் வரலாம். உரிய டாக்டரை அணுகி மருத்துவம் பார்த்தால், இவை சரியாகும்.

இவை தவிர, சரியாகப் பல் துலக்காததும், பூண்டு வெங்காயம் அதிகம் சாப்பிடுவதும் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.  சாப்பிடும் உணவு, வாய் சுத்தம் போன்றவற்றில் கவனம்கொண்டால், இவை சரியாகும். பொதுவாக, மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.'

ஒரு வாசகி மிகமிகத் தயக்கத்துடன் கேட்ட கேள்வி

'அக்குள், பெண் உறுப்பில் இருக்கும் முடியை அகற்றுவது அவசியமா?'

'அது அவரவர் விருப்பம். பெண் உறுப்பைச் சுற்றியிருக்கும் முடி சுத்தமாக இருக்கும்பட்சத்தில், அதை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால், உடலுறவின்போது முடியானது க்ளிட்டோரியஸைத் தூண்டுவதற்கு உதவுகிறது. விந்துச் சுரப்பிகள் முடியில் படியும் வாய்ப்பு இருப்பதால், முடியைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். இல்லை எனில் பாக்டீரியா படை எடுக்க வாய்ப்பு உண்டு. சுத்தமாக வைத்திருக்க வாய்ப்பு இல்லாதவர்கள் முடியை அகற்றுவது பற்றியோ, ட்ரிம் செய்வது பற்றியோ யோசிக்கலாம். அக்குள் முடி, அதிகம் வியர்க்கும் இடத்தில் இருப்பதால், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதி. குளிக்கும்போது சுத்தம் செய்வதும், பவுடர் ஒத்தடம் கொடுப்பதும் அவசியம். ஸ்லீவ்லெஸ் பனியன், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிபவர்கள் அவசியம் அக்குள் முடியை அகற்றிவிட வேண்டும்.'

ரகசியம் பகிர்வோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism