Published:Updated:

அந்தப்புரம் - 18

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 18

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 18

குடும்பம் / உறவுகள்... பலம்!

பாலியல் தொடர்பான வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடலுறவின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் நான்கு நிலைகள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். செக்ஸ் மற்றும் செக்ஸ் பற்றிய சிந்தனையில் நீண்ட நேரம் இருந்திருக்கலாம்... ஆனால், அந்த நேரத்தில் உடலின் மற்ற பாகங்களில் என்ன நடக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

75 சதவிகிதப் பெண்களுக்கும் 25 சதவிகித ஆண்களுக்கும் வயிறு, தொண்டை, மார்புப் பகுதிகளில் சிவப்புத் திட்டுகள் (Reddish spots) ஏற்படும். அதை ‘செக்ஸ் ஃப்ளஷ்’ என்போம். அது அடுத்த ஐந்து நிமிடங்களில் மறைந்துபோகும். மார்புக் காம்புகள் விரைத்தல், தொடை இறுக்கம், முதுகு வளைதல், மூச்சிறைப்பு ஆகியவை ஏற்படும். உச்சநிலைக்குப் பிறகான ஐந்து நிமிடங்களில் இவை இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்.

ஆர்கஸத்துக்குப் பின் முழு உடம்பிலும் மெல்லிய ஈர உணர்வு ஏற்படும். இருபாலருக்கும் இதயத் துடிப்பு, மூச்சு நிலை, ரத்த அழுத்தம் ஆகியவை முதல் மூன்று நிலைகளின்போது அதிகரிக்கும். நான்காவது நிலைக்குப் பிறகு, இயல்பு நிலைக்குத் திரும்பும்.

“ஒவ்வொரு பெண்ணுக்கும் இனப்பெருக்க உறுப்பில் குழைவுத்தன்மை மாறுபடுமா?”

- குணாளன், மதுரை.

“ஆமாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் யோனியின் குழைவுத்தன்மை மாறுபடும். ஒரே பெண்ணுக்குக்குக்கூட ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி குழைவுத்தன்மை இருக்கும். அது அவர்களின் செக்ஸ் தூண்டலைப் பொறுத்தது. செக்ஸ் ஆர்வம், யோனியில் ஏற்பட்ட நோய்த்தொற்று, ஹார்மோன் குறைபாடு ஆகியவற்றைப் பொறுத்து குழைவுச் சுரப்பி வேலை செய்யும்.”

அந்தப்புரம் - 18

“ஆண்களைப்போல, விந்து பீய்ச்சும் செயல் பெண்களுக்கும் நடக்குமா?”

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

“இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு விந்துசுரப்பி இல்லை. அவர்களுக்குப் பீய்ச்சுவதற்கான ப்ராஸ்டேட் சுரப்பி, செமினல் வெஸிகிள் ஆகியவை இல்லை.”

“ஆர்கஸம் என்றால் என்ன? ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா?”

- பெயர் சொல்ல விரும்பாத வாசகர், விருத்தாசலம்.

“மும்பையில் உள்ள ‘எம்.எஸ் மருத்துவக் கல்லூரியின்’ செக்ஸுவல் மெடிசின் துறை பேராசிரியர் டாக்டர் பிரகாஷ் கோத்தாரி இதற்கு நல்ல விளக்கம் தந்திருக்கிறார். ‘ஆர்கஸம் என்பது தும்மலைப் போன்றது. அந்த உணர்வை அனுபவிக்க மட்டுமே முடியும். விவரிப்பது கடினம். பொதுவாக, செக்ஸ் பார்ட்னருடன் ஒரே அலைவரிசையில் இயங்கும்போது, கிடைக்கும் கிளர்ச்சியும் அதைத் தொடர்ந்த விந்து வெளியேற்றமும் இன்பத்தின் உச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதைத் தொடர்ந்து ஓர் ஆயாசம் ஏற்படும். அதுவே ஆர்கஸம்’ என்கிறார்.”

“உச்சநிலை அடைவதற்கு ஏதேனும் உடல்ரீதியான அறிகுறி உண்டா?”

- ஆர்.ஜான்சன், திருநெல்வேலி.

“உச்சநிலையை அடையும்போது தறிகெட்ட நிலையில் இருந்து அடங்கும்நிலை ஏற்படுகிறது அல்லது உடல் இயக்கம் ஒரு தொங்கல் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று சொல்லலாம். யோனியின் சுருங்கும் நிலையும் விந்து வெளியேற்றமும் ஒரே சேர நிகழும். அதன் பிறகு, ஓர் அமைதியும் திருப்தியும் ஏற்படும். ஆர்கஸம் என்பது நொடிப்பொழுதில் நிகழக்கூடியது. மேலும், அதைப் பற்றித் தெரிந்துகொள்ள சிறந்த வழி உங்கள் பார்ட்னரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுதான்.”

“ஆணுறுப்பின் மூலம்தான் பெண்ணுக்கு ஆர்கஸம் ஏற்படுத்த முடியுமா?”

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

“இல்லை. ஆணுறுப்பின் மூலம்தான் ஆர்கஸம் ஏற்படுத்த முடியும் என்பது இல்லை. சில பெண்களுக்கு மார்புக் காம்புகளைத் தொடுவதன் மூலமே ஆர்கஸம் ஏற்பட்டுவிடும். வைப்ரேட்டர் கருவி மற்றும் சுய இன்பம் மூலமாகவும் ஆர்கஸம் ஏற்படும்.”

“எவ்வளவு நேர இடைவெளியில் உடல் உறவுகொள்ள வேண்டும்?”

- கே.ராஜசேகர், ஈரோடு.

“அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடலுறவு என்பது ஒரு முடிவுநிலை. அந்த முடிவு இன்பமானதாக இருக்கிறது. தம்பதிகள் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து எத்தனை முறை விரும்புகிறார்களோ, அத்தனை முறை ஈடுபடலாம். அது சம்பந்தப்பட்ட இருவரின் மகிழ்ச்சிப் பரிமாறல்... கணக்குப்போட்டுப் பார்க்கும் விஷயம் இல்லை. ‘அடிக்கடி’, ‘நார்மல்’ என்பது எல்லாம் அந்த தனிப்பட்ட இருவரைப் பொறுத்ததுதான். ஆகவே, எண்ணிக்கை விளையாட்டை விட்டுவிட்டு, பரஸ்பரம் இருவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வரை உடலுறவில் ஈடுபடலாம்.”

“பெண்களைவிட ஆண்கள் செக்ஸ் ஈடுபாடு உடையவர்களா?”

- ராஜ.மகேஷ், வேலூர்.

“ஆண், பெண் என்ற வேறுபாடு இதில் இல்லை. செக்ஸ் தாகம் தனிப்பட்ட மனிதரின் உடல் அமைப்பு, சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. அதை பொதுமைப்படுத்த முடியாது.”

- ரகசியம் பகிர்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism