Published:Updated:

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert
ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

ண்மையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு வந்திருந்த அக்குபிரஷர் டாக்டர் சங்கர், ``ஜெயலலிதா இறந்ததற்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மரணம் வரை ஒருவரைக் கொண்டுபோய் விட்டுவிடும் தன்மை கொண்டவையா ஸ்டீராய்டு மருந்துகள்... ஸ்டீராய்டு என்றால் என்ன, அதன் விளைவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

ஆங்கில மருத்துவத்தில், 'ஸ்டீராய்டுகள்' என்னும் வீக்கத்தை குறைக்கும் (Anti-inflammatory) மருந்துகள் மிகவும் முக்கியமானவை. `நாள்பட்ட நோய்களைக் குணமாக்குவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளில் இதன் பங்கு முதன்மையானது’ என்று மருத்துவர்களால் ஒருபக்கம் கொண்டாடப்படுகிறது ஸ்டீராய்டு. மற்றொரு பக்கம், `சர்க்கரைநோய், எலும்பு வலிமை இழப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு ஸ்டீராய்டு பயன்பாடுதான் காரணமாகின்றன’ என்ற வாதம் பலராலும் முன்வைக்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

இப்படி, இவ்வகை மருந்துகள் பற்றி இருவேறுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில், ``ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் ஜெயலலிதாவுக்கு கொடுத்தது அவருக்குச் சிகிச்சையில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம்" என ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜரான அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் பேட்டியளித்திருக்கிறார். இதனால், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்ளும் பலருக்கும் அது குறித்த சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தக் கருத்து, மீண்டும், 'ஸ்டீராய்டு மருந்துகள்' பற்றிய விவாதத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

உண்மையில், ஸ்டீராய்டு மருந்துகள் அவசியமானவைதானா... மருத்துவத்தில் அதன் பயன்பாடுகள் என்னென்ன... அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா... என்பவற்றையெல்லாம் குறித்து பொதுநல மருத்துவர் விஜய் சக்கரவர்த்தியிடம் பேசினோம்.

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

ஸ்டீராய்டு என்பது நம் உடலில் உள்ள அட்ரினல் சுரப்பில் சுரக்கும் ஒரு வகை ஹார்மோன். இந்த ஹார்மோன் உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் அளவைச் சீராக பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல வீக்கத்தைக் குறைப்பது (Anti-inflammatory ) இதன் முக்கியப் பணி. இது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.

இந்த ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படும்போதோ அல்லது வேறு மருத்துவ காரணங்களுக்காகவோ இவை வெளியில் இருந்து கொடுக்கப்படுகிறது. உதராணமாக, உடல்நலம் குன்றியவர்களுக்கும், மனஅழுத்த நோயுடன் இருப்பவர்களுக்கும் நம் உடலுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு தேவைப்படும். அதேபோல, ஒரு நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது, உடலில் சுரக்கும் ஸ்டீராய்டு போதுமானதா என்பதை ஆராய்ந்து, பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் தேவையான ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்.

இப்படி வெளியிருந்து கொடுக்கப்படும் ஸ்டீராய்ட்களில் `அனாபாலிக் ஸ்டீராய்டு' (Anabolic steroids), 'கார்டிகோ ஸ்டீராய்டு' (Corticosteroid) என இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன. முதல் வகை, பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு தசைகளுக்கு வலுவையும் ஆற்றலையும் தரக் கூடியது. மற்றொன்று, மருத்துவத் துறையில் பயன்படக்கூடியது. ஊசி, மாத்திரை, களிம்பு, இன்ஹேலர், ஸ்பிரே, திரவ மருந்து... எனப் பல்வேறு வகைகளில் ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக, அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டுவலி பாதிப்புள்ளவர்கள், நரம்பு தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு இவை உடனடி நிவாரணம் தருபவை. `முடக்குவாதம்’ எனப்படும் ருமாட்டாய்டு ஆர்த்ரிட்டீஸ் (Rheumatoid arthritis) போன்ற ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கும் ஸ்டீராய்டு மருந்து பெரிதும் பயன்படுகிறது. வலி, வேதனை, வீக்கம் குறைக்க ஸ்டீராய்டு மருந்துகளே உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதேபோல உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு, இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி தீவிரமாகச் செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியின் வேகத்தைத் தணித்து, ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை. சரும நோய்களுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. இப்படி ஸ்டீராய்டின் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

பொதுவாக, ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைந்த அளவில், குறைந்த நாள்களுக்கு எடுத்துக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படுவதில்லை. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு எடை அதிகரிக்கும், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும், முகத்தில் வீக்கம் ஏற்படும், எளிதில் எலும்பு முறிவு ஏற்படும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும் எல்லோருக்குமே இந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதில்லை. வாய்வழி உட்கொள்ளப்படும், மாத்திரைகளால்தான் அதிகமான பக்கவிளைவுகள் ஏற்படும். அதே நேரத்தில், அந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான மாத்திரைகளும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒருவர் உட்கொள்ளக்கூடிய ஸ்டீராய்டு மருந்துகளால் எலும்புகள் பலவீனமடையும் என்று தெரிந்தால், அந்த மருந்துகளுடன் கால்சியம் மாத்திரைகளும் வழங்கப்படும்.

எப்போது ஆபத்து?

சிலர் தங்களுடைய உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதுதான் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நோய்களின் பாதிப்புக்கு ஏற்ப ஸ்டீராய்டு மருந்துகளை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மருத்துவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே, எந்த ஓர் அவசரமாக இருந்தாலும், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இவ்வகை மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் ஸ்டீராய்டு மருந்துகளா... மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

அதேபோல, விளையாட்டுத்துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன்படுத்திவிடுகிறார்கள். ஆனால், இது சட்ட விரோதமானது. அதோடு, உயிருக்கு ஆபத்தானதும்கூட என்பதை நினைவில்கொள்ள வேண்டும். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, ஹார்மோன் கோளாறு, மன அழுத்தம் உண்டாவது போன்ற பல பிரச்னைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்’’ என்றும் எச்சரிக்கிறார் மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி.