முதுமையில் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

87 சதவிகிதம் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு இப்படி தடுமாறி விழுவதுதான் காரணம்.

55 சதவிகிதத்துக்கு மேற்பட்ட சம்பவங்கள் வீடுகளிலேயே நிகழ்கின்றன.

உடலின் சமநிலையை உறுதிபடுத்தும் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும். இது உடலுக்கு சமநிலையையும், வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கிறது. பிசியோதெரப்பிஸ்டை அணுகி, அவரவருக்கான பயிற்சியைப் பெற வேண்டும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் எனப் பல நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை இருக்கும். இதனால், மயக்கம், தடுமாற்றம் ஏற்படலாம். எனவே, குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை அணுகி மருந்து மாத்திரையில் மாற்றம் ஏதேனும் தேவையா என ஆலோசனை செய்து அதன்படி நடக்க வேண்டும்.

முதுமையில் பார்வைக் குறைபாடு ஏற்படுவது இயல்பு. குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களைப் பரிசோதனை செய்து, கண்ணாடி அணிய வேண்டும். கண்களும் காதும் நாம் தரையில் சரியாக நடக்க முக்கியமானத் துணைகள். அதை, அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

குளியல் அறை, படுக்கை அறை போன்றவை வழுக்கி விழாத வகையில் இருப்பது அவசியம். குளியல் அறை, கழிப்பறை, மாடிப்படிக்கட்டு, வாசல் படிக்கட்டு போன்ற இடங்களில், பிடிமானத்துக்காகக் கைப்பிடி அமைத்துக்கொள்வது நல்லது. அறைகளில் போதுமான விளக்கு வெளிச்சம் இருப்பது அவசியம்.