Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

பாலமுருகன், திண்டிவனம்.

“நான் கல்லூரி மாணவன். என்னுடைய கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் படிப்பில் கவனம் செலுத்த எனக்குத் தீர்வு சொல்லுங்களேன்...”

டாக்டர் பி.பி. கண்ணன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கன்சல்ட்டிங் ரூம்

மனநல மருத்துவர், சென்னை.

“பொதுவாக, இரு மனங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வதுதான் காதல். உங்கள் காதல் ஒருதலைக்காதலா, இருவரும் காதலிக்கிறீர்களா, வீட்டில் பிரச்னையா, காதலி இப்போது மறுக்கிறாரா, எதனால் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் காதல் ஒருதலையாக இருந்தால், உங்கள் மனதிலேயே போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், அந்தப் பெண்ணிடம் பேசி, தீர்வு காண்பது நல்லது. இருவரும் காதலித்து, உங்கள் காதலை வீட்டில் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அதுபற்றி உங்கள் பெற்றோரிடத்தில் பேசுவது நல்லது.

ஒருவேளை, உங்கள் காதலை நீங்கள் காதலிக்கும் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவரை விட்டு விலகுவதுதான் சரி.

நீங்கள் காதலிக்கலாம், காதலிக்காமலும் இருக்கலாம். நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த, ஆழ்மனதில் ஒரு புரிதல், சரியான தெளிவு இருக்க வேண்டும். இந்த வயதில் காதல் வருவது இயல்பான ஒன்று. இதற்கு எந்தவிதமான மாத்திரைகளும் தீர்வைத் தராது. நீங்கள் நினைத்தால் மட்டுமே, இதில் இருந்து விடுபடுதல் சாத்தியம். கல்லூரிப் படிப்பில் வரும் காதலைவிடவும், 25 வயதுக்கு மேல், வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல் ஏற்பட்டதும் வரும் காதல் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது.”

கன்சல்ட்டிங் ரூம்

சரவணன், திருவண்ணாமலை.

“மடியில் லேப்டாப் பயன்படுத்துவது, நீண்ட நேரம் செல்போன் பேசுவது, போனை இடுப்புப் பகுதியில் வைப்பது போன்றவற்றால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை வரும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா? என்னென்ன பிரச்னைகள் வரலாம், எப்படித் தடுப்பது?”

டாக்டர் ராஜ்குமார், பொது மருத்துவர், தேனி.

கன்சல்ட்டிங் ரூம்

“மொபைல் போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை  ஆண்கள் தங்கள் மடியிலோ அல்லது பேன்ட் பாக்கெட்டுகளிலோ வைத்துப் பயன்படுத்தும்போது, அதிலிருந்து ஏற்படும் வெப்பத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள தோலின் நிறம் மாறிப்போகக்கூடும். இதனை, ‘எரிதிமோ அப் இக்னே’ (Erythema Ab Igne) என அழைக்கிறோம். ‘இப்படித் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது’ எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆண்களுக்கு லேப்டாப் பயன்படுத்துவதால், விந்தணுக்களின் உற்பத்தி குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தடுக்க ஒரே வழி, லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மொபைல் போன்களை பாக்கெட்டில் வைக்கும்போது, இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. தளர்வான ஆடைகளை அணிவது முக்கியம். முடிந்த வரை மொபைல் போன்களை இயர்போன் பயன்படுத்திப் பேசலாம். அதுபோல, லேப்டாப்பை டேபிளில் வைத்தோ, லேப்டாப்புக்கு உரிய ஸ்டாண்டுகளில் வைத்தோ பயன்படுத்துவது நல்லது.”

அ.அஷ்ரப் அலி, ஒட்டன்சத்திரம்.

“எனக்கு 32 வயதாகிறது. தினமும் இரண்டு வேளை பல் துலக்குகிறேன். ஆனாலும், என் வாயில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. வெளியில் பேசவோ பழகவோ கூச்சமாக இருக்கிறது. இந்த துர்நாற்றத்தை எப்படிப் போக்குவது?”

டாக்டர் சி.கருணாகரன்,

கன்சல்ட்டிங் ரூம்

பொது மருத்துவர், பெரம்பலூர்.

“வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு ‘அனரோபிக்’ என்ற தொற்றுநோய்க் கிருமிதான் காரணம். பல் தொடர்பான பிரச்னை, மூக்கு, தொண்டை மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்னை, இரைப்பை மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னை ஆகியவற்றால், வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும். பற்களின் இடையில் உணவுத் துகள்கள் மாட்டிக்கொண்டு, நீண்ட நேரம் வாயில் இருந்தால், கிருமித் தொற்றை ஏற்படுத்தும். இதனாலும், பல் ஈறுகளில் புண் அல்லது சீழ் கோர்த்து இருந்தாலும், சொத்தைப் பற்கள் இருந்தாலும், மூக்குப் பகுதியில் தசை வளரும்போதும், அவற்றில் நீர் சுரக்கும் தன்மை இல்லாமல் இருக்கும்போதும், வாயில் துர்நாற்றம் ஏற்படும். இரைப்பையிலும், நுரையீரலிலும் சீழ் கோத்து இருந்தாலோ, அல்சர் நோய் இருந்தாலோ, தொற்றுக் கிருமிகளால் துர்நாற்றம் ஏற்படும். துர்நாற்றம் ஏற்பட்டால், தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். துர்நாற்றம் வருவதற்கான காரணங்களை, பொது மற்றும் பல் மருத்துவர்கள் உதவியுடன் கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.”

ஜானகிராமன், தென்காசி.

“என் வயது 35. எனக்குத் தலைமுடி நரைக்கவில்லை. ஆனால், என் தாடியில் நரை உள்ளது. மருதாணி இலையை மிக்ஸியில் அரைத்து, தாடியில் பூசிக்கொள்வேன். சுமார் 15 நாட்கள் வரை நிறம் இருக்கும். ஆனால், முடி வலு இழந்து வருகிறது. முரட்டுத்தன்மையுடன் கடினமாக உள்ளது. முடி மென்மையாக, கருமையாக இருக்க ரசாயனக் கலப்பு இல்லாத வழி சொல்லுங்களேன்... மருதாணி இலையுடன் வேறு ஏதாவது கலந்து, அரைத்துப் பூசினால் மென்மை கிடைக்குமா?”

டாக்டர் மகேஸ்வரி,

கன்சல்ட்டிங் ரூம்

சித்த மருத்துவர், சென்னை.

“பொதுவாக பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கு, இதுபோல தாடியில் மட்டும் நரை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஹார்மோன் பிரச்னைகள் காரணமாகவும் தாடியில் மட்டும் நரை ஏற்படலாம். நீங்கள் முடிந்த அளவுக்கு காபி, டீ குடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. உணவில் கீரைகள், கறிவேப்பிலை, பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தக்காரணத்தைக்கொண்டும், கடைகளில் விற்கும் டை, கலரிங் பொருட்களை வாங்கி, அடிக்க வேண்டாம். இயற்கையான முறையில் கருமை நிறம் இருக்க, மஞ்சள் கரிசலாங் கண்ணியையும், அவுரி இலையையும் சம அளவு எடுத்து, சாறாக்கி, அதைத் தாடியில் தடவ, தாடி கறுப்பாகும். கடினத்தன்மையுடன் இருக்கும் முடியும் நாளடைவில் மிருதுவாகும். இந்தக் கலவை இயற்கையானது என்பதால், பின்விளைவுகள் இருக்காது.”

கன்சல்ட்டிங் ரூம்

ங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை - 600002. doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.