Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 3

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 3

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 3

நேர்முகத் தேர்வுக்கு வந்தவர், மேனேஜர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், கேள்வி கேட்பவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? நண்பர் ஒருவர் ஜோக் சொல்கிறார்... மற்றவர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால், நமக்குப் புரியவில்லை என்றால் எப்படி இருக்கும்? மூளையின் முன் சுவரில் பாதிப்பு ஏற்பட்டால், இதெல்லாம்தான் நடக்கும்.

நம்முடைய எல்லா அறிவாற்றல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பு, பெருமூளையின் முன்மடல்தான். இதுதான், மனிதனின் உணர்ச்சிகளின் மையம், ஆளுமையின் இருப்பிடம். முன்மடலில் ஏற்படும் ஒரு சிறிய புண் கூட அவனது நடத்தையில் மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்திவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனிதனின் இயக்க செயல்பாடு, பிரச்னைக்குத் தீர்வு காணுதல், தன்னிச்சை இயக்கம், நினைவாற்றல், மொழி, விருப்பம், முடிவெடுத்தல், சமூக மற்றும் செக்ஸ் செயல்பாடு என அனைத்தும் இங்கேதான் நடக்கின்றன.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 3

முன்மடலை இரண்டாகப் பிரிக்கலாம். வலது முன்மடல், இடது முன்மடல். வலது முன்மடல் உடலின் இடது பக்கத்தையும், இடது முன்மடல் உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

இடது முன்மடல் மொழி தொடர்பான செயல்பாடுகளையும், வலது முன்மடல் மொழியற்ற, இதர தொடர்புகளையும் கட்டுப்படுத்துகின்றன.

முன்மடலில் ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் என்ற பகுதி உள்ளது. இங்குதான், நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் தகவல்கள் மற்றும் நினைவுகள் கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன. இந்தத் தகவல் அடிப்படையில்தான், நாம் மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பேச வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.  முன்மடல் மட்டும் இல்லை என்றால், மற்றவர்களைப் பற்றி புரிந்துகொள்ளக்கூட நம்மால் முடியாது. எந்தச் சூழ்நிலையில், எந்த மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்றுகூட தெரியாமல் வெறும் பொருளாகத்தான் இருந்திருப்போம்.

ஒருவர், கால்பந்தை உங்களை நோக்கி அடிக்கிறார் என்றால், பந்து நம் மீது படாமல் இருக்க உடனே

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 3

நகர்வோம் அல்லது அதை எதிர்த்து அடிப்போம். இதைச் செய்வது பெருமூளையின் முன்மடல்தான். அதாவது,  நாம் எங்கே இருக்கிறோம், நம் உடல் எந்த பொசிஷனில் இருக்கிறது, நமக்கும் மற்ற பொருள்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்ன என்பன எல்லாம் இங்கேதான் கணக்கிடப்பட்டு, துரிதமாக முடிவெடுக்கிறது முன்மடல்.

சாலை விபத்து, தவறி விழுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைக்காயங்களில் அதிக அளவில் பாதிக்கப்படுவது முன்மடல்தான். முன்மடல் பாதிக்கப்படும்போது, அந்த நபரின் ஆளுமை மாறுகிறது. இடது முன்மடல் பாதிக்கப்படும்போது, மொழித்திறன் பாதிக்கப்படுவதால், சரியாகப் பேச முடிவது இல்லை. வலது முன்மடல் பாதிக்கப்படும்போது, மொழியைத் தவிர மற்ற சைகை உள்ளிட்ட தொடர்புகொள்ளும் திறன் பாதிக்கப்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன.

இவர்கள் முகத்தில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். மிகக் குறைவாகத்தான் பேசுவார்கள். சமூகச் சூழலில் இணைந்து வாழ மிகவும் கஷ்டப்படுவார்கள். மொத்தத்தில், இவர்களின் சமூகச் செயல்பாடே மாறிப்போய்விடும். முன்மடல் சுற்றுவட்டப் பகுதிகள் பாதிக்கப்படும்போது, செக்ஸ் ஆர்வம் மிகத் தீவிரமானதாக இருக்கும். பின்பகுதியில் பாதிப்பு ஏற்படும்போது, செக்ஸ் மீதான ஆர்வம் குறைந்துவிடும்.

- அலசுவோம்!

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 3

சாந்த சொரூபி... முன்கோபி ஆனார்!

மெரிக்காவில், 1840-களில் ரயில் பாதை அமைப்பு வேலை செய்துகொண்டிருந்தவர் பீனியஸ் கேஜ். 1848-ம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மிகப் பெரிய இரும்பு கம்பி ஒன்று அவர் மண்டையில் பாய்ந்தது. இதில், மூளையின் இடது முன்மடல் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. நல்ல வேளையாக அவரை மருத்துவர்கள் காப்பாற்றினர். அதன் பிறகு, பீனியஸின் செயல்பாடே மாறிப்போனது. மிகவும் மென்மையானவராக, கடின உழைப்பாளியாக இருந்த பீனியஸ், கோபக்காரராக, சோம்பேறியாக மாறிவிட்டார். அவர் இறக்கும் வரையில், மற்றவர்களிடம் மிகவும் கடுமையான நபராகவே இருந்தார். இந்தச் செயலுக்குப் பிறகு, மனநல மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும், முன்மடலின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாட்டை ஆராய ஆரம்பித்தனர். மூளை நரம்பியல் மருத்துவத் துறை வரலாற்றில் மிக முக்கியமான நோயாளியாக பீனியஸ் கேஜ் மாறிவிட்டார். இவருக்கு நேர்ந்த விபத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்புகள், மாற்றங்கள் தொடர்பாக இன்றும் ஆய்வுகள் நடந்துவருகின்றன.