Election bannerElection banner
Published:Updated:

சருமப் பொலிவுக்கு வெள்ளரி-ஆரஞ்சு ஜூஸ்

சருமப் பொலிவுக்கு வெள்ளரி-ஆரஞ்சு ஜூஸ்

சருமப் பொலிவுக்கு வெள்ளரி-ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை: கமலா ஆரஞ்சு - 4, நடுத்தர அளவு வெள்ளரி - 1, செலரி - சிறிதளவு, இஞ்சி - நறுக்கியது சிறிதளவு, பனங்கற்கண்டு அல்லது பனஞ்சர்க்கரை - தேவையான அளவு. 

செய்முறை: ஆரஞ்சு மற்றும் வெள்ளரியைத் தோல் உரித்து, செலரி, இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிப் பருக வேண்டும். தேவை எனில், சிறிது ஐஸ் கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

சருமப் பொலிவுக்கு வெள்ளரி-ஆரஞ்சு ஜூஸ்

பலன்கள்:

• ஆரஞ்சு, செலரி, வெள்ளரி, இஞ்சி ஆகியவை கலோரி குறைந்தவை. ஆரஞ்சுப்பழத்தில் இருக்கும் பெக்டின் என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

• வெள்ளரி நீர்ச்சத்து நிறைந்தது, உடலுக்குக் குளிர்ச்சி தரும். செலரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. செலரிக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லி சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

• இஞ்சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இஞ்சி குறைவாகத்தான் ஜூ்ஸில் சேர்க்க வேண்டும், அதிகம் சேர்க்கக் கூடாது. இஞ்சி செரிமான சக்தியை மேம்படுத்தும். குமட்டலைத் தடுக்கும்.

• வாரம் ஒரு முறை இந்த ஜூஸ் பருகிவந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். நுரையீரலைச் சுத்தமாகும்.

• சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு ஏற்ற ஜூஸ் இது.

• உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த ஜூஸுக்கு உண்டு. வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால், சருமம் பொலிவு பெறும்.

• உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும், உடல் பருமன் கொண்டவர்கள், பனங்கற்கண்டு குறைவாகச் சேர்த்துப் பருகினால், கூடுதல் பலன் கிடைக்கும்.

• ‘ஃப்ளேவனால்’ என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் இதில் இருக்கிறது.

• நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உதவி புரியும். நினைவாற்றலைப் பெருக்கும். பொட்டாசியம் இந்த ஜூஸில் அதிக அளவு இருக்கிறது. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

- பு.விவேக் ஆனந்த்

படம்: தே.தீட்ஷித்

உதவி: சங்கம் ஹோட்டல், திருச்சி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு