Published:Updated:

அந்தப்புரம் - 20

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 20

ருத்தரித்தல் சம்பந்தமாகக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். நிறையக் கேள்விகளும் அது சம்பந்தமாகவேவந்திருந்தன. ஜெனிபருக்கு ஒரு தடவை உடலுறவு வைத்துக்கொண்டதும் கருத்தரித்தது. சிலருக்கோ கருத்தரித்தல் திருமணம் ஆனவுடனே நிகழ்ந்துவிடுவது இல்லை. கருத்தரித்தல் எப்படி நிகழ்கிறது என்று சொன்னேன், லட்சக்கணக்கான விந்து அணுக்களில் சில ஆயிரங்கள் மட்டும் முட்டை இருக்கும் இடத்தை எப்படி அடைகின்றன, அதில் ஒன்றே ஒன்று மட்டும் எப்படி முட்டைக்குள் ஊடுருவிக் கருத்தரிக்
கிறது என்று சொல்லியிருந்தேன்.

அந்தப்புரம் - 20

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“எனக்குத் திருமணம் முடிந்து  எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கருத்தரிக்கவில்லை. உடலுறவுகொள்வதில் ஏதும் தவறு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. எந்த நிலையில் உடலுறவுகொள்வது கருத்தரிப்புக்கு ஏற்றது?”

- ஒரு கன்னியாகுமரி வாசகி.

“பொதுவாக, பெண் கீழேயும் ஆண் மேலேயும் இருந்து உடலுறவுகொள்வதே போதுமானது. யோனி, படுக்கைவசத்தில் இருப்பதைவிடவும் சற்றே மேல் நோக்கி, சாய்ந்த நிலையில் இருப்பது கருத்தரிப்பு வாய்ப்பை அதிகரிக்கிறது. அதற்குப் பெண்கள் செய்ய வேண்டியது இதுதான். பெண் மல்லாந்து படுத்த நிலையில், அவளுடைய கால்களை கணவனின் கழுத்தின் மேல் போட்டு தோள்களைப் பின்னிக்கொள்ளலாம். அவளுடைய பின்புறத்தில் ஒரு சிறிய தலையணையை முட்டுக்கொடுப்பதன்
மூலம் யோனி சற்றே உயர்ந்தும் சாய் நிலையிலும் இருக்கும். இந்த நிலையில் ஆணுறுப்பு முழுமையாக உள்ளே செல்ல வசதியாக இருக்கும்.  உடலுறவின் முடிவில் வெளியாகும் விந்து முழுமையாக கர்ப்பப்பைவாயில் சேகரம் ஆகும். உடலுறவு முடிந்த பிறகு, 20 நிமிடங்களுக்குப் பெண்  மல்லாந்து படுத்திருப்பது நல்லது. விந்து உள்ளே பயணிக்க அது உதவும்.”

“கருத்தரித்திருப்பது தெரிந்து கொள்வது போல பிறக்கப்போவது, ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமா?”

எஸ்.சங்கீதா, தாம்பரம்.

“தெரிந்துகொள்ள முடியும். ஆம்னியோசென்டஸிஸ், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் டெஸ்ட்டுகள் மூலம் பாலினத்தை அறிய முடியம். ஆனால் இந்தச் சோதனைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டவை. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஆணோ, பெண்ணோ... அது உங்களுடைய குழந்தை. உங்களுடைய சந்தோஷம். முழுமனதோடு அந்தக் குழந்தையை நேசிப்பதுதான் மகிழ்ச்சி.”

“எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துவிட்டன. ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுத் தருமாறு என் மாமியார் வீட்டில் சொல்கிறார்கள். எனக்கு ஆண் குழந்தை பிறக்க வழி சொல்லுங்கள் சார்?”

ஜெ.ஷர்மிளா, தேவக்கோட்டை.

“உங்கள் மாமியார் வீட்டில் இப்படி எதிர்பார்ப்பது தவறு. உங்களைப் பழிப்பது பொருத்தம் இல்லாததும்கூட. அப்படியே பழித்தாலும் உங்கள் கணவரைத்தான் பழிக்க வேண்டும். உங்களை அல்ல.

ஒவ்வொரு மனிதரின் உடல் செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. உடல் வளர்ச்சியின் பொருட்டு ஒரு செல் இரண்டாகப் பிரியும்போது, புதிய செல்லும் புதிய 23 ஜோடி குரோமோசோம்களைக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் செல் பிரிதல் நிகழ்வு நடக்கிறது.

ஆனால், ஆணுடைய விந்தணுவும் பெண்ணின் முட்டையும் வேறு விதமானவை. இந்த செக்ஸ் செல்கள் 23 குரோமோசோம்கள் மட்டுமே உடையவை. இவை ஜோடி செல்கள் அல்ல. இதுதான் என்ன பாலினத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கான காரணியாக அமைகின்றன.

பெண்களுக்கான இந்த 23 குரோமசோம்களில் 22 குரோமசோம்கள் நம்முடைய பரம்பரை அடையாளங்களைச் சுமந்து இருப்பவை. மீதம் உள்ள ஒரு குரோமோசோம் எக்ஸ்எக்ஸ் (XX) எனப்படுகிறது. அதே போல ஆண்களுக்கான 22 குரோமோசோம்கள் அவருடைய பாரம்பர்ய அடையாளங்களைச் சுமந்து இருக்கிறது. மீதி ஒரு குரோமோசோம் எக்ஸ்ஒய் (XY) எனப்படும். ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த 23-வது குரோமசோம்தான் பிறக்கப்போகும் குழந்தை என்ன பாலினம் என்பதைத் தீர்மானிக்கும். முட்டையானது விந்தணுவில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் இணைந்து கருத்தரித்தால், அது பெண் குழந்தை. முட்டையானது ஆணுடைய விந்தணுவின் ஒய் குரோமோசோமுடன் இணைந்து கருத்தரித்தால், அது ஆண் குழந்தை.

இப்போது சொல்லுங்கள்... பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை ஆணுடைய விந்தணுதானே தீர்மானிக்கிறது?”

- ரகசியம் பகிர்வோம்