Published:Updated:

சர்க்கரை நோய் நாடி!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

சர்க்கரை நோய் நாடி!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

Published:Updated:

மாறிவரும் வாழ்க்கை முறை, மருத்துவமனைக்குச் செலுத்த பணத்தைச் சேமிப்பது அத்தியாவசியம்

சர்க்கரை நோய் நாடி!
சர்க்கரை நோய் நாடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்கிறது. அந்தளவுக்கு தவிர்க்க முடியாமல் பெருகிக் கிடக்கின்றன நோய்கள். நோய் எனும்போது, அதைப் பற்றிய அச்சத்தைவிட, விழிப்பு உணர்வே முதல் தேவை! இதுவே நோயை வெல்வதற்கான முதல்படி... வராமல் தடுப்பதற்கான வழியும்கூட! இப்படி ஒவ்வோர் இதழிலும் ஒரு நோய் பற்றி அலசும் தொடர்... ``நோய் நாடி'!

இந்த இதழில் சர்க்கரை நோய் பற்றிய முழுமையான அலசல்!

சர்க்கரை நோய் நாடி!

சர்க்கரை நோய்... ஏன், எதனால், எப்படி..?!

‘எங்க தாத்தாவுக்கு சுகர்’ என்றது முந்தைய தலைமுறை. ‘எங்கப்பாவுக்கு சுகர்’ என்றது நேற்றைய தலைமுறை. `எனக்கும் சுகர்' என்கிறது இளையதலைமுறை. வயோதிகர்களின் நோயாக இருந்த சர்க்கரை நோய், இன்று நடுத்தர வயதில் இருந்தே எதிர்பார்க்கப்படும் நோயாக பரிணாம வளர்ச்சி (!) அடைந்துள்ளது. ``உங்க வீட்டுக்கு பேப்பர் வந்துடுச்சா?’ என்று விசாரிப்பது போல, ‘எனக்கு சுகர் வந்துருச்சு... உங்களுக்கு?’ என்று மக்கள் ஒருவரை ஒருவர் சாதாரணமாக விசாரித்துக்கொள்ளும் அளவுக்குப் பெருகிவிட்டது சர்க்கரை நோய்.

சர்க்கரை நோய் நாடி!

சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே ‘சர்க்கரை நோய்’ என்கிறோம். இதை நோய் என்பதைவிட குறைபாடு என்று கூறுவதே சரி! ஆம், இது சரிசெய்துகொள்ள கூடிய குறைபாடே!  உணவுக் கட்டுப்பாடு மூலமாக சரிசெய்துவிடலாம். ஆனால், கட்டுப்பாடு இல்லாவிட்டால், அது குணப்படுத்தமுடியாத நிலைக்குக் கொண்டுசென்று, ஆளையே காலி செய்துவிடும்.

பெருகி வரும் சர்க்கரை நோய் பற்றிய தகவல்களையும், எச்சரிக்கைகளையும் இங்கே தருகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

சர்க்கரை நோய் வகைகள்!

சர்க்கரை நோய் நாடி!

முதலில் பேசுகிறார் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணர் தர்மராஜன். ‘‘சர்க்கரை நோயில் மூன்று வகை உண்டு. வயது அதிகமாவதாலும், உடல் எடை அதிகமாவதாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். அது அளவுக்கு மீறிப் போகும்போது சர்க்கரை நோயாக மாறுகிறது. இது `டைப் 2 டயாபீடீஸ்' என்றழைக்கப்படு கிறது. உலக அளவில் காணப்படும் 90 சத விகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்த வர்கள்தான். இவர் களுக்கு உடலில் இன்சுலின் இருக்கும், ஆனால், வேலை செய்யாது அல்லது குறைபாடு இருக்கும். அதைச் சரிசெய்ய அவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அப்படி மாத்திரை சாப்பிட ஆரம்பித்த 5 முதல் 10 வருடங்கள் வரை சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். அதற்கு மேல் இன்சுலின் சுரப்பு குறைந்துவிடும். பிறகு, இவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகி விடும்.

பிறந்த குழந்தை முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு ஏற்படுவது, `டைப் 1' டயாபீடீஸ் எனப்படுகிறது. மரபு

சர்க்கரை நோய் நாடி!

உட்பட இதற்கான காரணங்கள் பல. இவர்கள் உடலில் சுத்தமாக பீட்டா செல்கள் இருக்காது. அதனால் இன்சுலின் சுரப்பும் இல்லாமல் போகும். எனவே, ஊசி மூலம் இன்சு லின் செலுத்துவதுதான் இவர்களுக்கான ஒரே மருந்து. சுவாசப் பிரச்னைகள் ஏற் படும். உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணம் வரை கொண்டு செல்லும்.

மூன்றாவது வகை கர்ப்பக் கால சர்க்கரை  நோய்.  பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இவர்களில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்து தேவைப்படுகிறது. இந்த நோய், பிரசவத்துக்குப் பிறகு தானாக மறைந்துவிடும். ஆனால், பின்னாளில் இதே நோய் தாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. குழந்தையானது சில உடல்நல குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. எனவே, கர்ப்பகாலத்தில் கூடுதல் கவனம் தேவை.

இவற்றைத் தவிர, ‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’ என்று சொல்லக்கூடிய ‘ப்ரீ டயாபீடிஸ்’ வகையும் உள்ளது. அதாவது சுகர் மெள்ள எட்டிப்பார்க்கும் நிலை.

இந்த நான்கு நிலையிலும் இருப்பவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடுகளுடன் மருந்து, மாத்திரைகள் தேவைப் படலாம். நான்காவது நிலையிலிருப்பவர்கள், உணவுப்பழக்கம் மூலமாகவே கட்டுப்படுத்தலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்து கள், இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை!'' என்று சொன்னார் டாக்டர் தர்மராஜ்.

மரபு வழி நோயா?

சர்க்கரை நோய் நாடி!

ர்க்கரை நோய் பற்றி பேசிய சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதி,  ``பெற்றோரில் யாருக்காவது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வர 40% வாய்ப்புள்ளது. பெற்றோர் இருவருக்கும் இருந்தால், 90% வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயைக் கவனிக்காமல் விட்டால்... 80 - 90 சதவிகிதம் இதயம், சிறுநீரகம், கண் பாதிக்கப்பட்ட பின்புதான் விஷயமே நமக்குத் தெரிய வரும். கண் பார்வை பாதிப்பு, காலில் புண், வீக்கம், மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அதையும் தாண்டும்போது கை, கால், கண் போன்றவற்றை அகற்றும் நிலை ஏற்படும்.

இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரண மாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், ‘சைலன்ட் கில்லர்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

ஸ்வீட்டே தேவையில்லை!

பொதுவாக, ‘ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக் கூடாது’ என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்று தனியாக ஒன்று தேவையே இல்லை. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க் கரையை எடுத்துக்கொள்ள தேவையில்லை’’ என்று அக்கறை பொங்கச் சொல் கிறார் கருணாநிதி.

சர்க்கரை நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கை கள், பரிசோதனைகள், உணவுப்பழக்கம், உடற் பயிற்சி, சுகர்ஃப்ரீ விஷயங் கள்,  மருந்து - மாத்திரைகள், சித்தமருத்துவம் சொல்லும் வழிமுறைகள் உள்ளிட்ட பல தகவல்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

- நோய்நாடி வெல்வோம்...

சா.வடிவரசு, கே.அபிநயா படங்கள்:க.சதீஷ்குமார், தி.குமரகுருபன்

நான்கு வகை சர்க்கரை நோய்!

சர்க்கரை நோய் நாடி!

1. டைப்-1: பெரும்பாலும் குழந்தை களுக்கே இது ஏற்படுகிறது.

2. டைப்-2: 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள் இந்த வகையினரே!

3. கர்ப்ப கால சர்க்கரை நோய்

4. ப்ரீ டயாபீடீஸ் (சர்க்கரை நோய் வர ஆரம்பிக்கும் நிலை)

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

சர்க்கரை நோய் நாடி!

டல் சோர்வு, பிறப்புறுப்பில் அரிப்பு, அதீத பசி, உடல் வறட்சி, நாக்கு வறட்சி, உடல் மெலிதல், அதிகமாகச் சிறுநீர் கழித்தல். பாதி பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாமல்கூட இருக்கும். 

பரிசோதனைகள் பலவிதம்!

சர்க்கரை நோய் நாடி!

டலில் சர்க்கரை பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து

கொள்ள... ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் முக்கியம். இதில் பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை தான் எடுக்கப்படுகிறது.

1 ரேண்டம் டெஸ்ட்  எனும் சாதாரண ரத்தப் பரிசோனை மூலமாகவே கண்டறிய முடியும். என்றாலும், முழுமையாக உறுதிபடுத்திக்கொள்ள ஜி.டி.டி பரி சோதனை (Glucose tolerance test), ஹெச்.பி.ஏ.1 சி பரிசோதனை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

2. ஃபாஸ்டிங்

3 ஜி.டி.டி டெஸ்ட்

4 குளுக்கோ மீட்டர் டெஸ்ட்: பரிசோதனை நிலையத்துக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே கைக்கு அடக்கமாக கிடைக்கும் ‘குளுக்கோ மீட்டர்’ கருவி மூலமாக பரிசோதிக்கலாம். நாமே நம் விரலில் இருந்து 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, சர்க்கரையின் அளவைத் தெரிந்துகொள்ளலாம். இக்கருவி 1,500 ரூபாய் விலையிலிருந்து கிடைக்கிறது. இது 10 முதல் 15 சதவிகிதம் சர்க்கரையின் அளவை துல்லியமாக காட்டுவதில்லை என்பது இதன் குறைபாடு. பரிசோதனை நிலைய சோதனைகளுக்கும் இதற்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கும்.

சிறுநீர், ரத்த பரிசோதனை என்பது..!

சர்க்கரை நோய் நாடி!

டலில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சிறுநீரைக்கொண்டே பரிசோதனை செய்துவந்தனர். அவ்வாறு செய்யும்போது இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை சர்க்கரையின் அளவு மாறக்கூடும் என்பதால், ரத்தம் கொண்டு பரிசோதனை செய்யத் தொடங்கி... அது அப்படியே தொடர்ந்து இப்போது உள்ள மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக மிக துல்லியமாக உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறிய முடிகிறது. இப்போது யாரும் சிறுநீரைக் கொண்டு சர்க்கரை பரிசோதனை செய்வது கிடையாது. மாறாக, மிக எளிதாக... எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்ட ரத்தப் பரிசோதனையே முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. 

ரத்தப் பரி சோதனையை பொறுத்தவரையில்.. காலையில் வெறும் வயிற்றில் (தண்ணீர் மட்டும் குடிக்கலாம். காபி, டீ போன்றவை ஒருபோதும் கூடாது) ஒரு மில்லி முதல் 2 மில்லி அளவுக்கு உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு.. ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்து குறைந்தது ஒரு மணி நேரத்தில் முடிவைக் கண்டறியலாம். ரத்தம் மூலமாக சர்க்கரை அளவு மட்டுமல்லாமல்.. கொலஸ்ட்ரால் போன்றவற்றின் அளவையும் துல்லியமாக கண்டறிய முடியும்.

சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் ஒரு தடவையும், மற்றவர்கள் ஆண்டுக்கு ஒருதடவையும் தவறாமல் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகமிக நல்லது.

30 வயதுக்கு மேல் அனைவரும் சுகர் டெஸ்ட் செய்துகொள்வது அவசியம்.

லோ சுகர்!

சர்க்கரை நோய் நாடி!

ர்க்கரையின் அளவு 70 என்கிற அளவுக்குக் கீழ் போகும்போது அது லோ சுகர் என்கிற பிரச்னையை ஏற்படுத்தும். ஹை சுகர் நோயாளிகள், நேரத்துக்கு சாப்பிடாமல் விடும் போதும், சரியாக சாப்பிடாமல் விடும்போதும் லோ சுகர் என்கிற நிலை ஏற்படும். சுகருக்கான மருந்து, மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போதும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கிட்னி, லிவர் போன்றவற்றில் எதாவது பிரச்னை என்றாலும் லோ சுகர் ஏற்படும். மிக மிக அரிதாக சிலருக்கு உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவும் லோ சுகர் வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism