Published:Updated:

தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

Published:Updated:
தித்திக்கும் தீபாவளி!

தீபாவளி... பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் எனக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை ஒவ்வொருவரையும் உற்சாகம்கொள்ள வைக்கும் கலர்ஃபுல் பண்டிகை. ஆனந்தம் பொங்கும் தீபாவளியை ஆரோக்கியமாக, பாதுகாப்பாகக் கொண்டாடி, நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம் வாருங்கள்...

பாதுகாப்பான கொண்டாட்டத்துக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடிமனான பருத்தி ஆடைகளை அணியலாம். இதில் எளிதில் தீ பற்றாது. பட்டாசு வெடிக்கும்போது, விளக்குகளை ஏற்றும்போது ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அணிந்திருப்பது நல்லது. தழையத் தழைய ஆடைகளை அணியக் கூடாது. நீண்ட ஸ்கர்ட், லூஸ் பைஜமா, வேட்டி போன்றவற்றையும் நைலான், சின்தட்டிக் ரக ஆடைகளையும் அணியக் கூடாது.

குழந்தைகள், பெரியவர்கள் துணையுடன் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுக்கு நேராக முகத்தை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருக்கும்போது திடீரென வெடித்தால், முகத்தில்தான் முதலில் காயங்கள் ஏற்படும். இதனால், கண்கள் போன்ற முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்படும்.

தித்திக்கும் தீபாவளி!

பட்டாசுகளை வெடிக்க, நீண்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்தலாம். சாதாரண ஊதுபத்தி, மெழுகுவத்தியைப் பயன்படுத்தக் கூடாது.

பட்டாசு கொளுத்தும்போது, காலணிகளை அணிந்திருக்க வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

வாண வேடிக்கை, ராக்கெட் போன்றவற்றைத் திறந்தவெளியில் வெடிக்கலாம். மண்ணில் புதைத்து வெடிப்பது, பட்டாசுகளை பாக்கெட்டில் வைத்திருப்பது, கைகளில் வைத்து வெடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

பட்டாசு வெடிக்காமல் புகை மட்டும் வந்துகொண்டிருந்தால், அவற்றைத் தொடக் கூடாது. மேலே தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். எரிந்துவிட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகள் போன்றவற்றை நீர் நிறைந்த பக்கெட்டில் போட வேண்டும். கீழே எறிவதால் எவரேனும் மிதித்துவிட வாய்ப்பு உள்ளது. பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஓரமாக, வாளியில் நீர் வைத்திருக்கவும். தரையில் தீபங்களை ஏற்றக் கூடாது. ஓடி வரும்போது தீப்பற்ற வாய்ப்பு உள்ளது.

தனியாக வெடிப்பதைவிட குழுக்களாகச் சேர்ந்து, பெரியவர்கள் துணையுடன் வெடித்துக் கொண்டாடினால், பட்டாசுகளின் எண்ணிக்கையும் குறையும்; சுற்றுச்சூழல் மாசடைவதையும் ஓரளவுக்குக் குறைக்க முடியும்.

தீக்காயம் ஏற்பட்டவுடன் செய்ய வேண்டிய முதலுதவி!

தீக்காயம் பட்ட இடத்தில் உடனே சுத்தமான நீரை ஊற்ற வேண்டும். கொப்புளம் வரும் என நினைத்து, சிலர் சாக்குப்பையைக்கொண்டு அணைப்பர். இது தவறு. நீர் ஊற்றுவதால் கொப்புளம் வருவது இல்லை. அது நமது சருமத்துக்கு ஏற்படுத்தும் ஒரு பாதுகாப்புப் போர்வை. கொப்புளம் ஏற்பட்டால், காயம் ஆழமாகப் போகவில்லை என்று அர்த்தம். தண்ணீர் ஊற்றிய பிறகு சுத்தமான வெள்ளைப் பருத்தித் துணியால் காயத்தை மூடிக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். சுயமருத்துவம் செய்யவே கூடாது. பேனா மை(Ink) தடவுதல், சாக்கைப்போட்டு தீயை அணைத்தல், வாழைச் சாறு தடவுதல், ஐஸ் ஒத்தடம் வைத்தல், மஞ்சள் தேய்த்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால், காயம் மிகவும் மோசமாகிவிட வாய்ப்பு உள்ளது. மேலும், காயங்கள்் ஆற நீண்ட காலமும் ஆகும்.

தித்திக்கும் தீபாவளி!

ல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே...

நெஞ்சு எரிச்சலுக்கு...

சீரகம், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, நீரில் கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.

புதினா இலைகள், சீரகம், இந்து உப்பு போட்டு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு குடித்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிவிடும்.

தித்திக்கும் தீபாவளி!

பலகாரங்களைச் சாப்பிட்ட பின்...

சுண்டை வற்றல் - 1 கைப்பிடி, சிறிதளவு கறிவேப்பிலை, ஓமம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன் ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, உப்பு சேர்த்து, மோருடன் குடித்தால், அசௌகரிய உணர்வு நீங்கும். வயிற்றுப்போக்கும் நிற்கும்.

வாயுத் தொல்லைக்கு...

மிளகு, சீரகம், சுக்கு, ஓமம், கருஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்கவிட்டு இந்துப்பு கலந்து அருந்தலாம்.

- மினு, படங்கள்: ஜெ.விக்னேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism