Published:Updated:

அந்தப்புரம் - 21

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 21

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 21

ளைப்பாக இருந்தது அனிதாவுக்கு. அலுவலக வேலை கொஞ்சம் அதிகம். வேலை எட்டு மணி நேரம்தான். ஆனால், தனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடிக்க, 10 மணி நேரம் போதவில்லை என்பதுதான் அவளுடைய புலம்பல்.

ஆனால், அன்று வழக்கத்தைவிட களைப்பாக இருந்தது. அலுவலகத்தில் இருந்து வந்ததுமே கட்டிலில் சுருண்டு படுத்துவிட்டாள். சாப்பிடவும் பிடிக்கவில்லை. அஷ்வினுக்கு மட்டும் என்னவாம்... வழக்கமாகவே 12 மணி நேர வேலை. அவனுக்கு இருந்த களைப்பில், ‘‘என்ன சாப்பிடலையா?’’ என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி கேட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள் காலை விழித்தபோதும் அனிதா அப்படியே படுத்திருக்கவே, “என்ன ஆச்சு உடம்புக்கு?” என்றான். “காய்ச்சல்போல இருக்கு... சோர்வா இருக்கு. இன்னிக்கு லீவ் சொல்லிடப்போறேன்” என்றாள்.

‘‘சரி. ரெஸ்ட் எடுத்துக்கோ. ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன். டாக்டரைப் போய்ப் பார்ப்போம்.’’

அந்தப்புரம் - 21

சொன்னபடி சீக்கிரமே வந்தான். டாக்டரைப் பார்த்து, உடல்நிலை குறித்துச் சொன்னார்கள். டாக்டர் ஷீலா, அஷ்வினை வெளியே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு சில சோதனைகளைச் செய்தார்.

மீண்டும் அனிதா, அஷ்வின் இருவரும் டாக்டரின் முன்னாள் அமர்ந்தனர்.

“கங்கிராட்ஸ்... நீங்கள் அப்பா ஆகப்போகிறீர்கள்’’ என்றார் டாக்டர்.

அஷ்வினுக்கு சந்தோஷம் தாளவில்லை. அனிதாவுக்கு அந்த நேரமே ஓர் அன்பு முத்தம் கொடுக்க வேண்டும் என்று உதடுகள் பரபரத்தன. கூடவே சில சந்தேகங்கள்... ‘நாளை முதல் உடலுறவில் ஈடுபடலாமா... அனிதா இனி என்னென்ன சாப்பிடலாம்... என்னென்ன சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்..?’ஒரு நீண்ட சந்தேகப் பட்டியல் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்தது.

ஏன்... எதற்கு... எப்படி?

கருத்தரித்தலில் தொடங்கி, பிரசவம் வரையிலான காலத்தை கர்ப்பகாலம் என்கிறோம். ஆணின் விந்தணு பெண்ணின் முட்டையைச் சென்று அடைந்ததும் கருத்தரித்தல் தொடங்குகிறது. கருத்தரித்து, கரு வளர்ச்சியடைந்து, முழு வடிவம் பெற்று உலகத்தைக் காண தோராயமாக 280 நாட்கள் ஆகும். இந்தக் காலத்தைத்தான் ‘கர்ப்ப காலம்’ என்கிறோம். குழந்தை முற்றிலுமாக வளர்ச்சியடைந்ததும், கர்ப்பப்பையில் இருந்து பெண்ணின் வெஜைனா அல்லது பெண் உறுப்பு (Genital track) வழியாகக் குழந்தை வெளியே தள்ளப்படுவதை, பிரசவம் அல்லது குழந்தைப் பிறப்பு என்கிறோம்.

கர்ப்பத்தின் முதல் அடையாளம், மாதவிலக்கு ஏற்படுவது தடைபடுவதுதான். பொதுவாக, மாதவிலக்கு சுழற்சி என்பது 28 நாட்கள். ஒருவருக்கு 40 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகியும் மாதவிலக்கு ஏற்படவில்லை எனில், கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்பு உள்ளது. கர்ப்பம் தரித்திருப்பதை சாதாரண சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறியலாம். கிட்டத்தட்ட, கருத்தரித்து 25 முதல் 30 மணி நேரத்தில் பெண்ணின் முட்டை இரண்டு செல்லாகப் பிரிகிறது. அடுத்த 50 மணி நேரத்தில் அது நான்கு செல், பின்னர் எட்டு செல்... இப்படிப் பிரிந்துகொண்டே இருக்கும். செல் பிரிதல் நிகழ்வு, அடுத்த சில மாதங்களில் முழுக் குழந்தையாக மாறுகிறது.

டவுட் கார்னர்

“கர்ப்பம் அடைந்திருப்பதை எப்படி உறுதிப்படுத்துவது டாக்டர்? வீட்டிலேயே இந்த டெஸ்ட் செய்ய முடியுமா?”

வி.சித்ரா, வேலூர்.

“கர்ப்பம் தரித்திருப்பதன் முதல் அறிகுறியே,  மாதவிலக்கைத் தவறவிடுவதுதான். ஆனால், மாதவிலக்கு வரவில்லை என்பதற்கு, வேறு பல காரணங்களும் இருக்கலாம். எனவே, கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்ய, சிறுநீர் பரிசோதனை செய்வதுதான் சிறந்தது. இதற்கு, மருந்துக் கடைகளிலேயே ப்ரெக்னென்ஸி ஸ்ட்ரிப் கிடைக்கிறது. ப்ரிக் கலர் (Preg color), விலாசிட் (Velocit)போன்ற பல ஹோம் டெஸ்ட் கிட்கள் உள்ளன. இதில், இரண்டு கோடுகள் இருக்கும். காலையில் சிறுநீர்ப் பரிசோதனை செய்யும்போது, கர்ப்பமாக இருந்தால், நிறம் மாறும். பிரெக்னென்ஸி ஸ்ட்ரிப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானால், தாமதிக்காமல், உங்கள் குடும்ப டாக்டர் மற்றும் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.”

“எனக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. நான் கர்ப்ப காலத்தில் எத்தனை முறை டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டியிருக்கும்?”

எஸ்.பிரியங்கா, பெங்களூரு.

“வாழ்த்துக்கள் பிரியங்கா. எத்தனை முறை டாக்டரைச் சந்திக்க வேண்டும் என்பது, கர்ப்பிணியின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. உங்களைப் பரிசோதிக்கும் டாக்டர்தான் நீங்கள் எத்தனை முறை பரிசோதனைக்கு வர வேண்டும் என்பதை முடிவுசெய்ய சரியான நபர். பொதுவாக, ‘ஏழு மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது’ எனச் சொல்வார்கள். ஏழு முதல் ஒன்பதாம் மாதம் வரை மாதத்துக்கு இரு முறையும், ஒன்பதாவது மாதத்தில் வாரத்துக்கு ஒரு முறையும் டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.”

- ரகசியம் பகிர்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism