Published:Updated:

நோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

நோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
நோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 2, பேரிக்காய் - 2, கேரட் (நடுத்தர சைஸ்) - 1, புதினா - சிறிதளவு, தேன், தண்ணீர் -  தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய், கேரட்  ஆகியவற்றை  தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலைகளை உதிர்த்து, நறுக்கிய துண்டுகளோடு சேர்த்து, தேன், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி, அருந்த வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

பலன்கள்

• வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளதால், கண்களுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• கலோரி நிறைந்தது. எனவே, இந்த ஜூஸை ஓர் உணவு வேளைக்கும், மற்றோர் உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் குடித்துவந்தால், உணவு அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்க முடியும்.

• இதில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலு சேர்க்கும்.  எனவே, பள்ளி்க்குச் செல்லும் குழந்தைகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது.

• உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

• அல்சைமர், பார்கின்சன் நோய் போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிளுக்கு உண்டு. கேரட், ஆப்பிள், பேரிக்காய் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். எனவே, உடல் பருமனாக இருப்பவர்கள், தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

• இரிட்டபி்ள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னை, மலச்சிக்கல், பித்தப்பை கற்கள், போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிள், பேரிக்காய்க்கு உண்டு.

• மன அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஜூஸ் குடிக்கலாம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால் தேகம் பொலிவு பெறும்.

- பு.விவேக் ஆனந்த்

படம்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு