பஞ்சபூதங்களில் ஒன்றான நிலம்தான் நம் தாய்மடி. உணவும் உடையும் உறைவிடமும் நமக்குத் தரும் பேரியற்கை. உடலுக்குத் தேவையான தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் மண்ணில் இருந்தே கிடைக்கின்றன. மனித உடலின் பல பகுதிகள் நிலத்தின் தன்மை கொண்டவை. திடமும் வளர்ச்சியும் நிலத்தின் பண்புகள். அதுபோல நம்மைத் திடப்படுத்தவும், வளர்ச்சி அடையவைக்கவும் மண் முத்திரை உதவுகிறது.

மூலாதாரச் சக்கரத்தை வலுப்படுத்துவதால், இதற்கு ‘மூலாதார முத்திரை’ என்றும் ‘ப்ருத்வி முத்திரை’ என்றும் பெயர்கள் உள்ளன. இந்த முத்திரை நம் உடலில் நிலத்தின் பண்புகளைச் சமன்படுத்த உதவுகிறது.

எப்படிச் செய்வது?

மோதிர விரல் நுனியுடன் கட்டை விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டி இருக்க வேண்டும்.

கட்டளைகள்

தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம்.

காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம்.

ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம்.

பலன்கள்

வயோதிகத்தில் ஏற்பட்ட உடல் சோர்வு, உடல் மெலிதல், பசியின்மை, நாட்பட்ட நோய்களால் ஏற்படும் வலிகள் படிப்படியாகக் குறையும்.

எடை குறைவாக இருக்கும் குழந்தைகள், வளர்ச்சிக் குறைபாடு, கை கால் சூம்பி இருத்தல் போன்ற பிரச்னை உள்ளோர், இரு வேளை 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த முத்திரையை அவசியம் செய்ய வேண்டும். இதனுடன், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.

குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சத்து மாத்திரைகளைச் சாப்பிட முடியாமல் நிறுத்தியவர்கள், மேற்கொண்டு இந்த முத்திரையைச் செய்துவர நல்ல பலன் தெரியும்.

டைஃபாய்டு காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் உடல்சோர்வு, உடல்வலி, எடைக் குறைவு பிரச்னைகள் உள்ளோர், இந்த முத்திரையை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவர, பிரச்னைகள் சரியாகும்.

மூலாதாரச் சக்தியைத் தூண்டுவதால், பருவமடையத் தாமதமாகும் பெண்கள், இந்த முத்திரையைத் தினமும் இரண்டு வேளையும் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

அரிப்பு, தடிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், இதைச் செய்துவர படிப்படியாகப் பிரச்னைகள் குறையும்.

போலியோ, பக்கவாதம் இருப்போர் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, அன்றாட வேலைகளை இயல்பாகச் செய்யும் அளவுக்கு உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

ஆண்கள் வீரிய விருத்திக்குத் தினமும் செய்யலாம்.

40 வயதுக்கு மேல், இரு வேளையும் முறையே 20 நிமிடங்கள் செய்துவரலாம்.

வறண்ட சருமம், நகம் அடிக்கடி உடைதல், பற்கூச்சம், முடி உதிர்தல், நுனி முடிப் பிளவுபடுதல், செம்பட்டை முடி, இளநரை இருப்பவர்கள், இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்க சிகிச்சை எடுப்பவர்கள், ஓய்வு நேரத்தில் இந்த முத்திரையை ஐந்தாறு முறையாகப் பிரித்து, 20 நிமிடங்கள் வரை செய்ய, எலும்புகள் விரைவாகக் கூடுவதற்கு உதவியாக இருக்கும்.

பெண்களின் ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்ய, இந்த முத்திரையைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.

- ப்ரீத்தி

படங்கள்: மா.பி.சித்தார்த்

மாடல்: ஜாய் சாரா