நம் உடலுக்கு ரசாயனத் தகவல்களை அனுப்பும் கருவிகள் ஹார்மோன்களே. தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தத்தின் வழியாக ஹார்மோன் பயணிக்கிறது. மனிதனின் வளர்ச்சி மற்றும் உயரம், வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதும் ஹார்மோன்கள்தான். ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, அதைச் சரிசெய்ய மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்யும். ஹார்மோன்களைக் கட்டுக்குள்வைக்கும் உணவு, ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

தேங்காய்

தேங்காயில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய் எண்ணெயைச் சமைக்கப் பழகாதவர்கள், தேங்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும். ஹார்மோன்கள் சீராகச் சுரக்க, தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் உதவும். தைராய்டு இயக்கத்தைச் சீர்படுத்தும். தேங்காயில் உள்ள ‘ட்ரைகிளிசரைட்ஸ்’ (Triglycerides) என்ற கொழுப்பு, சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவும். வளர்சிதை மாற்றங்கள் சீராகும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைச் சமையலில் சேர்ப்பதே சிறந்தது. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கொதிக்கவிட்டுத் தயாரிக்கப்படுவதால், தேவையான சத்துக்கள் இருக்காது. தேங்காய்ப்பால், தேங்காய் சட்னி, தேங்காய் எண்ணெய்... என தேங்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கஃபைன்

அதிகமான கஃபைன் தூக்கத்தைக்கெடுக்கும். தூக்கமின்மையால் உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, தைராய்டு ஹார்மோனின் அளவு குறைகிறது. எனவே, காபிக்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு கப் என்ற அளவில் குடிக்கலாம்.

கேரட்

உடலில் அதிகமாக இயங்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் குறைக்க உதவுவது கேரட். இருபாலினருக்கும் ஈஸ்ட்ரோஜனின் இயக்கம் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்துவது கடினம். கேரட்டில் உள்ள நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும். இளசாக இருக்கும் கேரட்களை, பச்சையாகச் சாப்பிட ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கட்டுக்குள் வரும்.

துத்தநாகம்

‘டெஸ்டோஸ்டிரான்’ என்ற ஹார்மோன் சுரக்கவும் செல்கள் பிரிவதற்கும் துத்தநாகச் சத்து உதவுகிறது. இது ஆற்றல்மிக்க ஆன்டிஆக்ஸிடன்ட். புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. உடலில் போதுமான துத்தநாகச் சத்து இருந்தால், செல் சிதைவுகளும் ஏற்படாது. கடல் உணவுகள், இறைச்சி, நிலக்கடலை, சுண்டல், டார்க் சாக்லெட் போன்றவற்றில் துத்தநாகம் நிறைவாக உள்ளது.

நார்ச்சத்து

டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்களின் சமநிலைக்கும் நார்ச்சத்துக்கும் தொடர்பு உள்ளது. நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தவிர்ப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையைக் காக்கிறது. முழுத் தானியங்கள், பச்சை நிறக் காய்கறிகள், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், அத்தி ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் ஹார்மோன்களின் இயக்கத்துக்கு உதவும். ஹார்மோன் அனுப்பவேண்டிய தகவல்களை சரியான இடத்துக்குக் கொண்டுசெல்லும். உடலுக்குள் நடக்கும் தகவல் பரிமாற்றம் சிறப்பாக நடந்தேறும். இதற்கு, வால்நட், முட்டை, மீன், ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவறைச் சாப்பிடலாம்.

மக்னீசியம்

உடலில் சில நூற்றுக்கும் மேற்பட்ட செயல்பாடுகள் நடப்பதற்கு மக்னீசியம் அவசியம். இது நீண்ட நேர ஆரோக்கியமான தூக்கத்தை அளிக்கும். உடலுக்கு சக்தி அளித்து, ஹார்மோன்களை இயக்கவைக்க உதவுகிறது. செரட்டோனின் இயக்கத்தைச் சீர்்படுத்தி, மகிழ்ச்சியாக இருக்க உதவும். கீரைகள், நட்ஸ், விதைகள், மீன், வாழை, உலர்பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே நல்ல உணர்வுகளைப் பெறலாம். வாக்கிங், ஜாகிங் போன்ற பயிற்சிகள் இதயம் தொடர்பானவை என்பதால், இதயம் பலப்படும். பயிற்சி செய்யும்போது, ரத்தத்தின் வழியே செல்லும் ஹார்மோன்களின் வேதித் தகவல்கள் மேம்படும். இதனால், மன அழுத்தம், சோர்வு போன்றவை சரியாகும். நீச்சல், நடை, ஜாகிங், சைக்கிளிங் போன்றவை கார்டியோ இயக்கங்களைச் சீராக்கும்.

- ப்ரீத்தி