Published:Updated:

'தன்னம்பிக்கையே கோவிட்-19-க்கான சிறந்த மருந்து!'... நிரூபித்த 113 வயது ஸ்பெயின் பாட்டி

கோவிட் 19
கோவிட் 19

அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மத்தியில், 113 வயது பாட்டி ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்றை வென்றிருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

கோவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 113 வயது பாட்டி மரியா பிரான்யஸ் குணமாகியிருப்பது, உலகம் முழுக்க பாசிட்டிவிட்டியைக் கொடுத்துள்ளது. பொதுவாக, கொரோனா வைரஸ் பாதிப்பு முதியவர்களுக்குத் தீவிரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், கோவிட்-19 உடன் தனது 113 வயதில் போரிட்டு வென்றுள்ளார் மரியா.

corona
corona

பிறப்பால் அமெரிக்கரான மரியாவுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் கொரானா தொற்று ஏற்பட்டது. ஓலோட் நகரில் தன் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரை கவனித்துக்கொள்ளவும், உடல்நலனைக் கண்காணிக்கவும் ஒருவர் மட்டும் அவரது அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

`தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates

இரண்டு உலகப்போர்கள், ஸ்பெயின் உள்நாட்டு போர், ஃப்ளு தாக்கம் எனத் தன் ஆயுளில் பல பேரிடர்களைக் கடந்தவர் மரியா. உலகின் மிகவும் மூத்த பெண்ணான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கென் டனாக்காவைவிட, மரியா நான்கு வயதே குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரியாவின் மகள் ரோஸ், 'என் அம்மா மனவலிமை கொண்டவர், நேர்மறை எண்ணங்கள் நிறைந்தவர். அதனால்தான் அவர் குணம்பெற்றுவிட்டார். அம்மா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அதே சமயத்தில், சிறுநீர் தொற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தார். என்றாலும், இப்போது எல்லாம் சரியாகி அவர் இயல்புக்கே திரும்பிவிட்டார்' என்றிருக்கிறார் மகிழ்ச்சியுடன்.

கொரனா வைரஸால் ஸ்பெயின் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிட்டத்தட்ட 27,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Corona
Corona
pixabay

இப்படி அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மத்தியில், 113 வயது பாட்டி ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்றை வென்றிருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 'தன்னம்பிக்கை, கோவிட்-19-க்கான சிறந்த மருந்து' என்று நிரூபித்துள்ளார் மரியா பிரான்யஸ்.

அடுத்த கட்டுரைக்கு