Published:Updated:

இனி, பாட்டு கேட்டபடியே ஸ்கேன் செய்து கொள்ளலாம்!

இனி, பாட்டு கேட்டபடியே ஸ்கேன் செய்து கொள்ளலாம்!

இனி, பாட்டு கேட்டபடியே ஸ்கேன் செய்து கொள்ளலாம்!

தீராத தலைவலி, தலையில் காயம், முதுகெலும்புப் பிரச்னை போன்ற காரணங்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றால், சில நேரங்களில் எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்குப் பரிந்துரைப்பார்கள். எம்.ஆர்.ஐ என்றதும் பலருக்கும் பயம் ஏற்படும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்ள பலரும் மறுப்பதற்கு முக்கியக் காரணம், அந்த இயந்திரத்தில் இருந்து வெளிவரும், செவிகளால் தாங்க முடியாத அளவு சத்தம். நம் காதுகள் இயல்பாகத் தாங்கும் சத்தத்தைவிட அதிகமான `120 டெசிபெல்’ சத்தம் இந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறுகிறது. இதற்கான தீர்வை சென்னையைச் சேர்ந்த ‘ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனம் தந்துள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்பவர்கள் இனி தாங்கள் விரும்பும் இசையைக் கேட்டபடியே ஸ்கேன் செய்துகொள்ளலாம். அந்த அளவுக்கு மிகக்குறைந்த சத்தத்தை வெளியேற்றும், சத்தமின்றி இயங்கும் எம்.ஆர்.ஐ இயந்திரத்தை (Silent Suite 1.5T Signa Explorer MRI scanner) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது மையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம்.

இனி, பாட்டு கேட்டபடியே ஸ்கேன் செய்து கொள்ளலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த சைலன்ட் எம்.ஆர்.ஐ பற்றி கதிரியக்க மருத்துவர் சீனிவாசராமன் கூறுகிறார்... “எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரத்தில் வெளிவரும் சத்ததைத் தாங்க முடியாமல், 10-ல் இரண்டு பேர் எம்.ஆர்.ஐ அறையைவிட்டு வெளியேறிவிடுகின்றனர். அவர்களில் ஒருவரைச் சமாளித்து
விடலாம். ஆனால், மற்றொருவருக்கு மயக்கமருந்து கொடுத்துத்தான் ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். மீதம் உள்ள எட்டுப் பேருக்கும்கூட, இந்தச் சத்தம், மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் கொடுக்கக்கூடியதுதான். குழந்தைகளின் நிலையோ இன்னும் மோசம். காந்த சக்தி அதிகமாக உள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறையில், அதற்கு ஏற்ற மயக்க மருந்தளிக்கும் இயந்திரத்தை எடுத்துச்சென்று, குழந்தைகள் மருத்துவர் உதவியுடன், அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, பிறகு ஸ்கேன் செய்கிறோம். இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், சத்தமின்றி இயங்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  ஜிஇ ஹெல்த்கேர் (GE Healthcare) எனும் உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எம்.ஆர்.ஐ இயந்திரம், சத்தத்தை நீக்கும் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி (Noise cancellation technology) எனும் தொழில்நுட்பத்தின்படி இயங்குகிறது. ஒரே திசையில் பயணம் செய்யும் ஒலி அலையை நீக்கும் வகையில், எதிர்த் திசையில் ஓர் அலை உருவாக்கப்படுகிறது. இந்த இரண்டு அலைகளும் சந்திக்கும்போது, அவற்றின் தீவிரம் குறையும். இதன் மூலமாக இயந்திரத்தில் இருந்து வெளியேறும் சத்தமும் குறையும். மேலும், இந்த இயந்திரத்தின் பல பாகங்கள் இந்தியாவில் உள்ள ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படுவதால், சாதாரண எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் விலைக்கே இது கிடைக்கிறது. இதனால், எப்போதும்போல் அதே விலையில் மக்களுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் சேவையை நாங்கள் வழங்குகிறோம்.

இந்தச் சோதனை முடிவுகளில், பழைய எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரத்தைக் காட்டிலும் பல முன்னேற்றங்கள் உள்ளன. இது பயன்பாட்டுக்கு வந்த ஒரே மாதத்தில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதில் ஸ்கேன் செய்துகொண்டதையும் அந்த அனுபவத்தையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதைப் பார்வையிட்ட மருத்துவர்கள் பலருக்கே, இது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி, இரைச்சல் பயமில்லாமல் யார் வேண்டுமானாலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொள்ளலாம்.”

- ஜெ.விக்னேஷ்