Published:Updated:

டீடாக்ஸ் முள்ளங்கிக் கீரை

டீடாக்ஸ் முள்ளங்கிக் கீரை

டீடாக்ஸ் முள்ளங்கிக் கீரை

டீடாக்ஸ் முள்ளங்கிக் கீரை

Published:Updated:
டீடாக்ஸ் முள்ளங்கிக் கீரை

சிவப்பு மற்றும் வெள்ளை முள்ளங்கி நமக்கு தாராளமாகக் கிடைக்கின்றன. இவற்றில் வெள்ளை முள்ளங்கியைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். நாம் முள்ளங்கி வாங்கும்போது செய்யும் தவறு என்ன தெரியுமா? முள்ளங்கியோடு இருக்கும் அதன் இலைகளை வாங்காமல் வந்துவிடுகிறோம் அல்லது வீட்டுக்கு வந்தவுடன் இலையை நீக்கிவிட்டு, முள்ளங்கியைப் பயன்படுத்துகிறோம். நாம் வெட்டிவீசும் முள்ளங்கிக் கீரையில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.

• முள்ளங்கிக் கீரைக்கு `முள்ளாங்கி’, `மூலகம்’ போன்ற வேறு பெயர்களும் உள்ளன. முள்ளங்கிக் கீரையைச் சாதத்துடன் சேர்த்து, பிசைந்து சாப்பிடுவது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• இதில், வைட்டமின் ஏ, அஸ்காரிக் அமிலம், புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.

• முள்ளங்கிக் கீரை, நார்ச்சத்து மிகுந்தது. செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலைத் தடுக்கும். மூலநோயைப் போக்கும்.

டீடாக்ஸ் முள்ளங்கிக் கீரை

• முள்ளங்கிக் கீரையைச் சாறு எடுத்து, தினமும் ஒரு குவளை அருந்திவர, நீர்க்கடுப்பு நீங்கும். சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால், அவை கரையும்.

• முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, இருமல், ஜலதோஷம் முதலான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

• ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

• முள்ளங்கி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, காலை, மாலை ஒரு மேசைக்கரண்டி அளவுக்குச் சாப்பிட்டுவர, இரும்புச்சத்து உடலில் சேரும். களைப்பு, சோர்வு நீங்கும். சுறுசுறுப்பு கூடும்.

• முள்ளங்கியுடன், அதன் கீரையையும் சேர்த்துச் சாறாக்கி அருந்திவர, தலைமுடி உதிர்வது நிற்கும். பொடுகு நீங்கும்.

- பு.விவேக்ஆனந்த்