Published:Updated:

கலோரி கைடு

கலோரி கைடு

கலோரி கைடு

கலோரி கைடு

Published:Updated:

ம்முடைய உடல் எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கணக்கிட உதவுகிறது கலோரி. ஒரு லட்டு சாப்பிடுகிறோம். `அதில், 180-ல் இருந்து 200 கலோரி இருக்கிறது’ என உணவு நிபுணர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் அது என்ன என்ற சந்தேகம் இருக்கும். லட்டை உட்கொண்டால், உடலில் எந்த அளவுக்கு ஆற்றல் கிடைக்கும் என்பதன் அளவே கலோரி. நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளான மூச்சுவிடுதல், இதயம் துடித்தல் போன்ற செயல்பாடுகளின்போதுகூட, கலோரி எரிக்கப்படுகிறது. ஆம், நாம் தூங்கும்போதுகூட கலோரி செலவாகிறது.

கலோரி கைடு

கலோரி எங்கிருந்து கிடைக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் உட்கொள்ளும் உணவுப் பொருளில் இருந்து கலோரி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துதான் நம் உடல் பயன்படுத்தத் தேவையான எரிபொருளாக மாற்றப்படுகிறது.

கலோரி கைடு

கார்போஹைட்ரேட்

நம்முடைய உடலின் பிரதான எனர்ஜி ஆதாரம். இதை நம்முடைய உடல் மிக எளிமையாகக் கையாண்டு ஆற்றலாக மாற்றிக்கொள்ளும்.

எப்படிப் பயன்படுகிறது?

கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக (சர்க்கரை) உடைக்கப்படுகிறது. இந்த குளுக்கோஸ்தான் உடலின் முக்கிய எரிபொருள். இது நம்முடைய தசைகள், கல்லீரல் போன்றவற்றிலும் சேமித்துவைக்கப்படுகிறது. நம்முடைய நரம்புமண்டலம், சிறுநீரகம், மூளை, தசைகள் உள்ளிட்ட ஒவ்வோர் உறுப்பின் செயல்பாட்டுக்கும் மிக அவசியமாக இருக்கிறது.

எதில் இருந்து கிடைக்கிறது?

அரிசி உள்ளிட்ட தானியங்கள், பழங்கள், பால்.

கலோரி கைடு

புரதம்

திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுநீக்கத்துக்கு அவசியமாகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவுகிறது. தசைகளைப் பாதுகாக்கிறது. உணவு செரிமானத்துக்கான என்ஸைம்கள் மற்றும் ஹார்மோன்கள் சுரக்க அவசியமாகிறது.

எப்படிப் பயன்படுகிறது?

கார்போஹைட்ரேட் இல்லாதபோது, நம்முடைய உடல், புரதத்தை ஆற்றலாக மாற்றிப் பயன்படுத்துகிறது.

எதில் இருந்து கிடைக்கிறது?

இறைச்சி, மீன், பால் பொருட்கள், நட்ஸ், பயறுகள்.

கலோரி கைடு

கொழுப்பு

உடலில் உள்ள செல்கள், நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியம். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கரோட்டினாய்டுகளை கிரகிக்க அவசியம்.

எப்படிப் பயன்படுகிறது?

மிக அடர்த்தியான கொழுப்பு, உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்குகிறது. நாம் உட்கொண்ட கொழுப்பு, உடலில் திசுக்கள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை எனில், அவை பிற்காலப் பயன்பாட்டுக்காக உடலில் கொழுப்பு செல்களாக சேமித்து வைக்கப்படுகின்றன.

எதில் இருந்து கிடைக்கிறது?

எண்ணெய் வகைகள், நட்ஸ், எண்ணெய் சத்துள்ள மீன்கள். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பில் இருந்து உடலுக்குப் பயன்படும்போது கலோரிகள் கிடைத்தாலும், அனைத்து கலோரிகளும் ஒன்று அல்ல. ஒவ்வொன்றும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, உடலின் செயல்திறன் ஆரோக்கியமாக இருக்க, அனைத்து வகையான உணவும் போதுமான அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கலோரி கைடு

உடல் எடை கூட அல்லது குறைய கலோரியை எப்படிப் பயன்படுத்துவது?

என்ன சாப்பிட வேண்டும், எதை அருந்த வேண்டும் என்று முடிவு செய்யும்போது, அனைத்தும்

கலோரி கைடு

சரிவிகிதத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், அதிக கலோரிக்குப் பதில், போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

உடல் எடையைப் பராமரிக்க, எவ்வளவு கலோரியை எடுத்துக்கொள்கிறோமோ, அதே அளவு கலோரியைச் செலவுசெய்ய வேண்டும். அன்றாடச் செயல்பாடுகள் மூலம், ஓரளவுக்குத்தான் கலோரி செலவாகும். உடற்பயிற்சி, உடல் உழைப்பு மேற்கொள்வதன் மூலம் மட்டுமே அதிக அளவில் கலோரிகளைச் செலவிட முடியும்.

எவ்வளவு கலோரியை எடுத்துக்கொண்டோமோ, அதைவிட அதிக கலோரியை எரித்தோம் என்றால், உடல் எடை குறையும். எவ்வளவு எரிக்கிறோமோ, அதைவிட அதிக அளவில் கலோரியை எடுத்துக்கொண்டோம் என்றால், எடை அதிகரிக்கும். இதை உணர்ந்தாலே, உடல் எடை கூடுவது, குறைவதைக் கட்டுக்குள்வைக்கலாம்.

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism