பி4 கொலீன்

கொலீன் வைட்டமின் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி குடும்பத்தைச் சேர்ந்தது, கொலீன் என்னும் வைட்டமின் பி4. உடலில் தினமும் நூற்றுக்கணக்கான வேதியல் செயல்பாடுகள் நடக்கின்றன. இதில் கொலீன் வைட்டமின் முக்கியப் பங்காற்றுகிறது.

நரம்பியல் மண்டலங்களின் இயக்கத்துக்கு கொலீன் வைட்டமின் தேவை. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் ஏற்படும் வீக்கம், அழற்சி (Inflammation) போன்றவற்றைக் குறைக்க, கொலீன் வைட்டமின் உதவுகிறது.

கல்லீரல் செயல்பாடுகளில் இந்த வைட்டமினின் பங்கு அளப்பரியது. கொலீனை ‘கல்லீரலுக்கான ஸ்பெஷல் வைட்டமின்’ என்றே அழைக்கலாம். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், கல்லீரல் சுருக்கம் (சிரோசிஸ்) போன்றவற்றைத் தடுப்பதில் கொலீன் பங்காற்றுகிறது.

மன அழுத்தம், ஞாபகமறதிப் பிரச்னை, டிமென்சியா, அல்சைமர் போன்ற நோய்களுக்கான மருந்துகளில்

கொலீன் பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைக்க, புற்றுநோயைத் தடுக்க, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க கொலீன் வைட்டமின் அவசியம் தேவை.

பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை மற்றும் தண்டுவட கோளாறுகள் (Nueral tube defect) வருவதைத் தடுக்க, கொலீன் வைட்டமின் நிறைந்த உணவுகளைக் கர்ப்பிணிகள் சாப்பிட வேன்டும்.

இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவந்தாலோ அல்லது மருத்துவர் அனுமதி இன்றி கொலீன் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலோ, பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

அலர்ஜி

கொலீன் வைட்டமின் நிறைந்த உணவுகள், ஒரு சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அழற்சி காரணமாக மீன், முட்டை, நட்ஸ், பட்டாணி, கீரை போன்றவற்றைத் தவிர்ப்பவர்கள், உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

பி5 பேன்டோதெனிக் அமிலம்

நம்ம ஊர் சந்தையில் ஷாம்பூ தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு பெயரே `பேன்டோதெனிக் அமிலம்’ என்பதில் இருந்துதான் உருவானது. தோல் மற்றும் தலைமுடிப் பாதுகாப்புக்கு இந்த வைட்டமின் அந்த அளவுக்கு அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உடலில் இருக்கும் செல்களுக்கு எனர்ஜி கிடைப்பதில் உதவுகிறது.

கொழுப்புச்சத்தைக் கிரகித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களை உற்பத்திசெய்கிறது.

ஆரோக்கியமான தோல் மற்றும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

பேன்டோதெனிக் அமிலம் உள்ள உணவுகளை, பதப்படுத்தி, பக்குவப்படுத்திச் சாப்பிடும்போது, பி5 சத்து குறைவாகவே உடலுக்குக் கிடைக்கும்.டீ, காபி, ஆல்கஹால் அருந்துவதன் காரணமாக இந்த வைட்டமினை உடலால் கிரகிக்க முடிவது இல்லை.

பேன்டோதெனிக் வைட்டமினை எப்படிப் பெறுவது?

கோழி மற்றும் மாட்டு இறைச்சி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், தக்காளி, முட்டையின் மஞ்சள் கரு, புரோகோலி, முழுதானியங்கள் போன்றவற்றில் இந்த வைட்டமின் நிறைந்துள்ளது. எனவே, இதில் ஏதாவது ஓர் உணவையாவது தினமும் சாப்பிட்டுவருவது நல்லது.

பேன்டோதெனிக் குறைபாடு

வைட்டமின் பி5 குறைபாடு ஏற்பட்டால், தசைப்பிடிப்பு, பாதத்தில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும், உடல் சோர்வு, பயம், பதற்றம், கவனக்குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

- பு.விவேக் ஆனந்த்