ஸ்ப்ரௌவ்ட் கோதுமை பராத்தா

தேவையானவை

கோதுமை மாவு - 2 கப்

வேகவைத்த முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப்

மிளகாய் பொடி, சீரகப் பொடி, தனியா பொடி, எலுமிச்சைச் சாறு - தலா 1 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை ஸ்பூன்

தண்ணீர், உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, முளைகட்டிய பயறைப் போட்டு, வதக்கவும். இதனுடன், உப்பு, மிளகாய் பொடி, சீரகப் பொடி, தனியா பொடி, கரம் மசாலா கலந்து கிளறவும். இரண்டு துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி போட்டுக் கிளறவும். கோதுமை மாவை உப்பு சேர்த்துப் பிசைய வேண்டும். சப்பாத்தியாகத் திரட்டிய மாவின் நடுவில் முளைவிட்ட பயறு கலவையைப் போட்டு, அதன் மேல் இன்னொரு சாப்பாத்தியை வைத்து திரட்டிக்கொள்ள வேண்டும். இதை தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

இதில் புரதச்சத்துக்கள் அதிகம் என்பதால், உடலுக்கு நல்லது.

மாணவர்களுக்கு காலை வேளையை ஆரோக்கியமாகத் தொடங்க சரியான உணவு. ஒரு நாளுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும். மதியம் வரை பசிக்காது.

பராத்தாவை ஆரோக்கியமாகச் சாப்பிடும் பழக்கத்துக்கு மாறலாம். சமச்சீரான சத்துக்கள் இந்த பராத்தாவில் கிடைத்துவிடும்.

குதிரைவாலி கட்லெட்

தேவையானவை

குதிரைவாலி - 2 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

தண்ணீர் - 5 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 மூடி

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

துவரம் பருப்பை மிக்ஸியில், கொரகொரவென ரவைப் பதத்துக்கு அரைக்கவும். 5 கப் அளவு தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். அதில், எண்ணெய், உப்பு போட்டு பொடித்துவைத்த துவரம் பருப்பையும், குதிரைவாலியையும் போட்டுக் கிளற வேண்டும். வெந்த பிறகு இறக்கும் சமயத்தில் தேங்காய்த் துருவலைச் சேர்க்க வேண்டும். ஆறிய பிறகு, இந்த உப்புமா போன்ற கலவையை உருண்டையாகப் பிடித்து, தோசைக்கல்லில் தட்டி, லேசாக எண்ணெய் விட்டு சுட்டெடுக்க வேண்டும். இதற்கு, வெங்காயச் சட்னி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் கட்லெட் இது.

புரதச்சத்து, மாவுச்சத்து, நல்ல கொழுப்பு சம அளவில் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒமேகா 3 நிறைந்தது.

- ப்ரீத்தி

படங்கள்: எம்.உசேன்