Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 3

மருந்தில்லா மருத்துவம் - 3
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 3

ஹெல்த்ஸ்வாதிஷ்டானா சக்கரம்

மருந்தில்லா மருத்துவம் - 3

ஹெல்த்ஸ்வாதிஷ்டானா சக்கரம்

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 3
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 3
மருந்தில்லா மருத்துவம் - 3

டலில் உள்ள ஏழு சக்கரங்களில், இரண்டாவதாக இருப்பது ஸ்வாதிஷ்டானா. இது, முன் மற்றும் பின் பக்கம் என இரண்டு இடங்களில் உள்ளது. முன் ஸ்வாதிஷ்டானா, தொப்புளுக்கு கீழ்ப் பகுதியில் அடி வயிற்றில் மையமாகக்கொண்டுள்ளது. அதற்கு சரி நேராக, பின்புறத்தில் பின் ஸ்வாதிஷ்டானா அமைந்துள்ளது. ஆரஞ்சு நிறமுடைய இதழ்களைக் கொண்ட இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரைச் சார்ந்தது. குழந்தைக்கு 6-ல் இருந்து 18 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் இந்தச் சக்கரம் மலரும்.

இந்தப் பருவத்தில்தான், குழந்தை தவழ்ந்து, நின்று, நடை பழகும். தொடு உணர்ச்சிகளின் ஊக்கத்தில், சுற்றியுள்ள பொருட்களை கைகளால் பயமின்றித் தொட்டு பார்க்கும். நடை பழகும்போது விழுந்தால், தாயின் அரவணைப்பைத் தேடும். ஸ்பரிச உணர்வை வலி ஏற்பட்டாலும் மனது அறியும். ஆகையால், உடலும் மனமும் ஒருங்கிணைக்கும் பருவம் இது. தாயின் அரவணைப்போ, வெறுப்போ, குழந்தையின் மனதில் நிரந்தரமாகப் படியும் காலம் இது. தாயின் இந்த ஆதரவும் அரவணைப்பும்தான், அந்தக் குழந்தை வளர்ந்த பின் எதையும் எதிர்கொள்ளும் சக்தியை அளிக்கிறது. தாயின் அரவணைப்பின்றி வளரும் குழந்தை, பிற்காலத்தில், சமூகத்தைத் தவிர்த்து, தனித்து வாழும் குணத்துடன் இருக்கலாம். இதனால் ஸ்வாதிஷ்டானா சக்கரம் வளரும் பருவம், குழந்தையின் வாழ்வில் முக்கியமானது.

மருந்தில்லா மருத்துவம் - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்வாதிஷ்டானா சக்கரம் சார்ந்த வியாதிகள்...

பெண்களின், இனப்பெருக்கத்துக்கான உறுப்புக்களான கர்ப்பப்பை, சினைப்பை (Ovary), கருமுட்டை, மார்பகங்கள் ஸ்வாதிஷ்டானா சக்கரத்தின் கட்டுக்குள் அடங்கும். தவிர,  ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோனையும் சுரக்கும்.

ஈஸ்ட்ரோஜென் குறைவாகச் சுரந்தால், பெண்கள் பருவமடையும் காலம் தள்ளிப்போகும் அல்லது மாதவிடாய் காலத்தில் அதிகமான வலி, ரத்தப்போக்கு, குழந்தையின்மை, சினைப்பையில் நீர்க்கட்டி தோன்றும். அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சுரந்தால் சினைப்பை, கர்ப்பப்பை, மார்பகங்களில் புற்றுநோய் தோன்றலாம். கருக்குழாய் (Fallopian tube) அடைபட்டிருக்கும். இதனால் கர்ப்பம் தடைப்படும். கர்ப்பப்பையில் கட்டிகள், புற்றுநோய் உண்டாகும்.

இதேபோல் ஆண்களில் விந்து பாதிப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம், புற்றுநோய், விரை வீக்கம் ஆகிய பாதிப்புகள் தோன்றும்.

இந்தப் பிரச்னைகளுக்கு, ஸ்வாதிஷ்டானா சக்கரத்துடன், ஆக்ஞா, மூலாதாரா சக்கரங்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஸ்வாதிஷ்டானா சக்கரம் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்க வழி செய்யும். ஆனால், வெறுப்பு, பயம், விரக்தி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது, அந்த அழுத்தம் ஸ்வாதிஷ்டானா சக்கரத்தின் சக்தி ஓட்டத்தை தடைப்படுத்தும். அதனால் ஸ்வாதிஷ்டானா சக்கரத்திற்கு கொடுக்கும் சிகிச்சை, உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமன்றி, மன அழுத்தத்திலிருந்தும் விடுதலை அளிக்கும்.

- தொடரும்

பின்பக்கமுள்ள ஸ்வாதிஷ்டானா சக்கரத்தின் பாதிப்பால் வரும் வியாதிகள்...

மருந்தில்லா மருத்துவம் - 3

முதுகின் அடிப்பக்க வலி, இடுப்பு வலி, கால்வலி, சியாடிக்கா, அடிபட்டாலோ அல்லது தண்டு வடத்திலிருந்து வெளி வந்து கால்களுக்கு செல்லும் நரம்புகள் பிசகினாலோ, முதுகு, கால்வலி வரும். 

குருத்தெலும்பு வெளி வந்து எல்4, எஸ்1 என்னும் இடத்தில் வலி ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு, பின் ஸ்வாதிஷ்டானா சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளித்து சக்தி ஓட்டத்தை சீர்செய்தால், நிவாரணம் கிடைக்கும்.

கால்வலி, முழங்கால் வலி போன்றவற்றுக்கும் ஸ்வாதிஷ்டானா சக்கரத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீர்வு:

தற்போது பெண்களுக்கு மெனோபாஸ் எனும் நிகழ்வை, ஒரு வியாதிபோல நினைத்து பலர் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். மெனோபாஸ் என்பது கருத்தரிக்கும் பருவத்தைத் தாண்டுவது. இதை நோய்போல் பாவித்து, ஹார்மோன் சிகிச்சை அளிப்பதால், ஈஸ்ட்ரோஜென் அதிகமாகச் சுரந்து, கர்ப்பப்பை, மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு. மார்பகக் கட்டிக்கு, பிட்யூட்டரியைக் கட்டுப்படுத்தும் ஆக்ஞா சக்கரத்துக்கு சிகிச்சை அளித்தால், பூரண குணம் கிடைக்கும்.

இனப்பெருக்க உறுப்புகளைத் தவிர, வேறு சில உறுப்புகளும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ளன. அதில் தோன்றும் வியாதிகளும் தீர்வுகளும்.

சிறுநீர்ப் பையில் கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இவற்றையும் ஸ்வாதிஷ்டானா சக்கரத்தில் சிகிச்சை அளித்துக் குணமாக்கலாம்.

சுஜோக் அக்குபஞ்சர் முறையில், நோயின் அறிகுறிகளைப் பொறுத்து, சிறுநீர்ப்பை மெரிடியனின் புள்ளிகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெருங்குடல் வியாதிகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல் புண், அல்சர், புற்றுநோய், குடல்வால் பிரச்னை, ஆசன வாயில் வலி, மூலம் உள்ளிட்ட நோய்களுக்கு, ஸ்வாதிஷ்டானா சக்கரத்திற்கு ரெய்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு, அதிக மன வருத்தத்தால், சிறுநீர்ப் பை வலுவிழந்து, சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் ஏற்படலாம், இதற்கும் ஸ்வாதிஷ்டானா சக்கரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அக்குபஞ்சர் மூலம் பெருங்குடல் வியாதியைப் பொறுத்து, பெருங்குடல் மெரிடியனில் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism