Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்தி ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்

ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்

Published:Updated:
ஹெல்த்தி ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்

நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், வரும்முன் காப்பதைப் பற்றி பேசுபவை நம் பாரம்பரிய மருத்துவங்கள். அந்த வகையில் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, சுரப்பிகளைத் தூண்டி, புத்துணர்ச்சியோடு இருக்க உதவுபவை அக்குபிரஷர் கருவிகள். புத்துணர்வு எப்போதும் குடியிருக்க, அவசியம் வைத்திருக்கவேண்டிய சில பொருட்கள் இங்கே...

நாவல் டம்ளர் - ரூ185

நாவல் மரத்தில் செதுக்கப்பட்ட டம்ளர் இது. இதில், நீர் அருந்துவதால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கவும் முடியும். காலை, மாலையில் உணவுக்கு இரண்டு மணி நேரம் முன், நீர் ஊற்றிவைத்து, குடித்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஒரு வருடம் வரைக்கும் பயன்படுத்தலாம்.

கை மரப்பந்து - ரூ30

நெருஞ்சி முள் போன்ற அமைப்புடன் உள்ள இந்த மரப்பந்தை கைகளில் வைத்து உருட்ட வேண்டும். நரம்புகள் சங்கமிக்கும் இடம் கை என்பதால், ரத்த ஓட்டம் மேம்படும். இதனைச் செய்யும்போது, நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும் என்பதால், கட்டாயம் நீர் அருந்த வேண்டும். தினமும் அதிகபட்சம் 21 நிமிடங்கள் மட்டுமே இதனைச் செய்ய வேண்டும்.

கை உருளை - ரூ100

மரக்கட்டையால் செய்யப்பட்ட இதை கையில் பிடித்துக்கொண்டு, உடலின் எந்தப் பகுதியிலும் அழுத்தி உருட்டலாம். கை, கால், முதுகு எனச் சோர்வாக இருக்கும் பகுதியில் அழுத்தி உருட்டினால், அங்கு உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, வலி குறையும். இதனைச் செய்வதற்கு முன்னர் நீர் அருந்த வேண்டியது அவசியம்.

ஹெல்த்தி ஷாப்பிங்

சுஜோக் மோதிரம் - (4) - ரூ50

கை விரல்களில் மோதிரம்போல அணிந்து, பயிற்சிசெய்யும் வளையம் இது. முழுதும் கம்பிகளால், ஸ்பிரிங்போல கோக்கப்பட்ட இதை, விரல்களில் மாட்டி உருட்ட வேண்டும். இதனால், விரல்களில் உள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு, புத்துணர்ச்சி உண்டாகும். உருட்டாமல், ஒரே இடத்தில் நிறுத்தக் கூடாது.

தலை மசாஜ் - ரூ30

களைப்புடன் இருக்கும்போது, மன அழுத்தத்தில் இருக்கும்போது, தூக்கம் இல்லாமல் தவிக்கும்போது இதைக்கொண்டு மசாஜ் செய்யலாம். இதன் நுனியில் உள்ள மெல்லிய உருண்டையான அமைப்பு, தலையை வருடிவிடுவதுபோன்ற உணர்வைத் தரும். படுக்கச் செல்லும் முன்னர் செய்தால், நல்ல தூக்கம் வரும்.

ரிலீஃப் மேட் - ரூ209

தரையில் இதை வைத்து, அதன் மீது முழுப் பாதமும் படும்படியாக நிற்க வேண்டும். முடியாதவர்கள், நாற்காலியில் நேராக அமர்ந்து, இரு பாதங்களையும் இதன் மீது அழுத்தி வைக்கலாம். இதன் நடுவில் உள்ள மேடான பகுதியில் உள்ளங்காலை வைத்து அழுத்தம் தரலாம். ஒட்டுமொத்த உடலுக்குமான புத்துணர்ச்சியைத் தரக்கூடிய பயிற்சி இது.

பாத உருளை - ரூ100

இருக்கையில் நேராக அமர்ந்து, பாதத்துக்கு கீழே இந்த உருளையை வைத்து உருட்ட வேண்டும். அப்போது, கால் நரம்புகள், சுரப்பிகள் தூண்டப் பட்டு, ரத்த ஓட்டம் சீராகி, புத்துணர்வு கிடைக்கும். ஓய்வாக இருக்கும் நேரம், டி.வி பார்க்கும்போது, வேலை நேரத்தில்கூட இதைச் செய்யலாம். காலை, மாலையில் அல்லது சோர்வாக இருக்கும் சமயங்களில் செய்தால், புத்துணர்வு உண்டாகும்.

மூக்கு சுத்தக் குவளை - ரூ30

கொதிக்கவைத்து, ஆறவைத்த, இளஞ்சூடான நீரை இந்தக் குவளையில் நிரப்பி, கழுத்தை இடப்பக்கமாகச் சாய்த்து, வாய் வழியாக மூச்சுவிட வேண்டும். வலது பக்க மூக்குத் துவாரத்தில் குவளையில் உள்ள நீரை, ஐந்து முதல் ஏழு சொட்டுகள் விட வேண்டும். அது, இடதுபுற மூக்குத் துவாரம் வழியே வெளியேறும். இவ்வாறு, மறுபுறமும் செய்ய வேண்டும். அடிக்கடி வெளியில் செல்வோர், மூக்கு சுத்தமாக இருக்க இதனைச் செய்யலாம்.

கோல்டன் பால் - ரூ60

காந்த சக்தி உள்ள, தூண்டுதல் புள்ளிகளை உடைய பந்து இது. உள்ளங்கையில் வைத்து உருட்டும் போது, ரத்த ஓட்டமும், காந்த சக்தியும் தூண்டப்படும். கூர்மையான முள் போன்ற இதன் அமைப்பால் உடனடியாகப் பலன் கிடைக்கும். அதிகபட்சம், 21 நிமிடங்கள் செய்ய வேண்டிய இந்தப் பயிற்சிக்கு முன்னர், நீர் பருக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி ஷாப்பிங்

அக்குபங்சர் செருப்பு - ரூ250 / ரூ350

காலுக்கு மிருதுவான, அதே சமயம் மென்மையாக நரம்புகளைத் தூண்டக்கூடிய செருப்பு இது. வீட்டுக்குள்ளேயே அணிந்து கொள்ளலாம். இதனால், சோர்வு உண்டாகாமல் தடுக்கப்படுவதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குறிப்பாக வயதானோருக்கு அதிக நன்மைகளைத் தரும்.

மேக்னடிக் பிரேஸ்லெட் - ரூ110

காந்த சக்தி உள்ள இந்த பிரேஸ்லெட்டை, கையில் எப்போதும் அணிந்துகொள்ளலாம். இளைஞர்கள், மாணவர்கள் கையில் ஃபேஷனாகவும் அணியலாம் என்பது இதன் சிறப்பு. ரத்த ஓட்டத்தைச் சீராக்கி எப்போதும், துடிப்புடன் இருக்கவைக்கும். மாணவர்கள் அணிந்துகொள்வதால், கவனத்திறன் மேம்படும். 

கண் சுத்த குவளை - ரூ15

கண்களுக்குப் புத்துணர்வு தரும் உபகரணம் இது. குவளையில் சுத்தமான நீரை நிரப்பி, கண்களை அதில் வைத்து விழித்துப் பார்க்க வேண்டும். அப்போது, மேலும் கீழும், பக்கவாட்டிலும் கண்களை உருட்டினால், கண்களில் உள்ள கசடுகள் வெளியேறும். ஆசிரியரிடம் முறையாகக் கற்றுக்கொண்டு மட்டுமே இதனைச் செய்ய வேண்டும்.

- மினு, படங்கள்: எம்.உசேன்

உதவி: ஆரோக்கியச் சந்தை, முகலிவாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism