Published:Updated:

அந்தப்புரம் - 28

அந்தப்புரம் - 28
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 28

குடும்பம்ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 28

குடும்பம்ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 28
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 28
அந்தப்புரம் - 28

வாழ்க்கை ஓர் அழகான பயணம். அதன் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் மகிழ்ச்சியாக, அனுபவித்துக் கொண்டிருக்கும் தம்பதியினர் சுனிதாவும் சுரேஷும். தன்னுடைய வாழ்வின் ஆதர்சமாக சுரேஷ், சுனிதாவை நினைத்தான். சுனிதாவும் அவனை அப்படியே நினைத்தாள்.

சுரேஷ் எம்.பி.ஏ படித்தவன். ஒரு வங்கியில், பொது மேலாளர். எந்த விஷயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்வதுதான் அவனுக்குப் பிடிக்கும். சுனிதா, சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் துடிப்பான பெண்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனேயே, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தனர். என்னென்ன செய்ய வேண்டும் என ஒரு பட்டியலையே தயார் செய்தனர். அதை அடைவதற்கான இலக்கையும் நிர்ணயித்தனர். அந்தத் திட்டமிடலில் முதல் அம்சம், இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பது. பரஸ்பர அன்பு. ஒருவர் வேலை விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவது இல்லை. இருவரும் அவரவர் துறையில் நல்ல நிலைக்கு வர வேண்டும், வங்கியில் போதுமான அளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும். புதிய, அழகான, வசதிகள் நிறைந்த வீடு வாங்க வேண்டும். இரண்டு - மூன்று ஆண்டுகளில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் போன்ற வாழ்க்கைத் திட்டங்கள் அவர்களுக்கு இருந்தன.

திருமணம் ஆகிவிட்டது, குழந்தைப்பேறு அடைவதை தள்ளிப்போடுவது என்று இருவரும் முடிவெடுத்திருந்தனர். ஆனால், எப்படி தள்ளிப்போட முடியும் என இருவருக்கும் யோசனை. இது பற்றி குடும்ப டாக்டரிடம் கேட்கவும் இருவருக்கும் தயக்கம். சுரேஷ், நெருங்கிய நண்பன் அஸ்வினிடம் ஆலோசனை கேட்டான். `இது ரொம்ப ஈஸியான விஷயம். கர்ப்பத்தைத் தவிர்க்கிறதுக்கான மாத்திரையை தினமும் எடுத்துக்கிட்டாலே போதும். கருத்தரிக்காமப் பார்த்துக்கலாம்’ என்றான் அஸ்வின். அவனே, ஒரு மாத்திரையைப் பரிந்துரைத்து வாட்ஸ்அப் செய்தான்.

அந்தப்புரம் - 28

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன்? எதற்கு? எப்படி?

இன்றைய நவீன சமூகத்தில் கூட்டுக் குடும்பம் என்பது இல்லாமல் போய்விட்டது. தனிக்குடும்பங்கள் அதிகரித்துவிட்டன. திருமணம் ஆன உடனே தனிக்குடித்தனம் செல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பொருளாதார, சமூகக்  காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அந்தக் காலத்தில் தனிக் குடும்பத்தில் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று பிள்ளைகள் மட்டும் நான்கைந்து பேர் இருந்தனர். இன்றைக்கு தனிக் குடும்பத்தின் அளவும் சுருங்கிவிட்டது. பெரும்பாலும் ஒன்று, ஒரு சிலர் மட்டும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். `ஒரு குழந்தை போதும்’ என முடிவு செய்யும் தம்பதிகளுக்கு அடுத்த குழந்தையைத் தவிர்ப்பது எப்படி என்று தெரிவது இல்லை. குடும்பக்கட்டுப்பாடு, கர்ப்பத்தைத் தவிர்க்கும் மாத்திரை எனப் பல விஷயங்கள் இருந்தாலும் இது பற்றிய விழிப்புஉணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது என்பதையே சுரேஷ், சுனிதாவின் திட்டமிடல் நமக்குக் காட்டுகிறது.

மாத்திரை, இன்ட்ரா யூடரைன் டிவைஸ் (ஐ.யு.டி) எனப்படும் லூப், டையாப்ரம் (Diaphragm), கேப், ஆணுறை, பெண்களுக்கான காண்டம், ஸ்பெர்மிசைட்ஸ், வித்ட்ராவல் மெத்தட், ரிதம் மெத்தட், ஸ்டெரிலைசேஷன், மென்ஸ்ட்ருவல் ரெகுலேஷன், அபார்ஷன் என கருத்தரிப்பதைத் தவிர்க்க 12 முக்கிய வழிகள் உள்ளன.

இதில், மாத்திரை, ஐ.யு.டி, கேப், ஸ்பெர்மிசைட், டையாப்ரம், பெண்களுக்கான காண்டம் ஆகியவை பெண்களுக்கானவை. ஆணுறை, வித்ட்ராவல் எனப்படும் உடலுறவில் ஈடுபட்டாலும், விந்தணுவை உள்ளே செலுத்தாமை ஆகியவை ஆண்களுக்கானவை.

ஸ்டெரிலைசேஷன் என்பது ஆண், பெண் இருவருக்குமான அறுவைசிகிச்சைமுறை. கருக்கலைத்தல் என்பது பெண் கருத்தரித்துவிட்டால், அதைக் கலைப்பதற்கான சிகிச்சைமுறை.

இவற்றில், மாத்திரை, கேப், ஆணுறை, ஸ்பெர்மிசைட், வித்ட்ராவல் மெத்தட், ரிதம் மெத்தட், ஸ்டெரிலைசேஷன் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை. இந்த முறைகளில், கரு முட்டையுடன் விந்தணு சேருவது இல்லை. ஐ.யு.டி என்பது கருத்தரிப்பதைத் தவிர்ப்பது இல்லை. கருவானது கர்ப்பப்பையில் பதிந்து வள்ர்வதைத்தான் தடுக்கிறது. இந்த முறைகளைப் பற்றி ஒவ்வொன்றாக வரும் இதழ்களில் பார்ப்போம்.

அந்தப்புரம் - 28

டவுட் கார்னர்

``எங்களுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அடுத்த குழந்தை இப்போது வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். இதனால், மிகவும் கவனத்துடன் இருந்தோம். ஆனாலும் என் மனைவி கருத்தரித்துவிட்டார். கருத்தரிப்பதைத் தவிர்க்க எது சிறந்த வழி டாக்டர்?’’


ஆனந்த், மதுரை.

``சிறந்த வழிமுறை என்று எதுவும் இல்லை. கருத்தரித்தலைத் தவிர்க்கும் வழிமுறைகள் என்பது தம்பதிகளின் உடல்நிலை, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை, அவரவர் விருப்பம் சார்ந்து முடிவுசெய்ய வேண்டியது. உதாரணத்துக்கு, திருமணம் ஆன புதுமணத் தம்பதிகளுக்கு ஆணுறை அல்லது கர்ப்பத்தைத் தவிர்க்கும் மாத்திரை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது. இதுவே, குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு ஐ.யு.டி அல்லது மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. `இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டோம், இனி குழந்தை வேண்டாம்’ என முடிவுசெய்பவர்களுக்கு அறுவைசிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம்.”

“ `கர்ப்பத்தைத் தவிர்க்கும் மாத்திரைகளை எடுப்பது நல்லது இல்லை’ என என் தோழி சொல்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை?”

சரண்யா, திருச்சி.

“இதில் துளியும் உண்மை இல்லை. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் மிகவும் பாதுகாப்பானவை. ஆனால், இதை அவரவர் விருப்பப்படி வாங்கி எடுத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. உங்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெறும்போது, அவர் உங்கள் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு மாத்திரையைப் பரிந்துரைப்பார். எல்லா பெண்களுக்கும் இந்த மாத்திரை பாதுகாப்பானது என்றும் சொல்ல முடியாது. சிலருக்கு ஒவ்வாமை பிரச்னை இருக்கலாம். இவர்களுக்கு இந்த மாத்திரை எடுத்தால், பிரச்னை ஏற்படலாம். எனவே. மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.”

“ `கர்ப்பம் அடைதலைத் தவிர்க்கும் மாத்திரை எடுத்துக்கொண்டால் மார்பகப் புற்றுநோய் வரும்’ என்று படித்திருக்கிறேன். இது உண்மையா?”

கீதா, சென்னை.


“இல்லை. இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.”

“எங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஓர் ஆண்டுக்கு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவுசெய்திருக்கிறோம். எங்களில் யார், கரு உருவாவதைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? என் வருங்கால மனைவி மட்டும் மாத்திரை எடுத்துக்கொண்டால் போதுமா?”


துரை, நாமக்கல்.

“கருத்தரித்தலைத் தவிர்க்க வேண்டியது யார் என்பதை நீங்கள் இருவரும் சேர்ந்துதான் முடிவுசெய்ய வேண்டும். அதற்கு முன்னர், அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். சில உடல்நலப் பிரச்னை இருந்தால், சில கருத்தரிப்பு முறையைத் தவிர்க்க வேண்டும். தயக்கம் இன்றி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நல்லது.”

- ரகசியம் பகிர்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism