
ஆலு பனீர்
தேவையானவை
பனீர் - 200 கிராம்
வேகவைத்து, தோல் நீக்கிய சிறிய
உருளைக்கிழங்கு - 200 கிராம்
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
தோல் நீக்கித் துருவிய இஞ்சி - 1 இன்ச்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5-6
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - தேவையான அளவு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை
பனீரை சின்னச்சின்ன சதுரங்களாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடான பின் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், பனீரைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கிய பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளற வேண்டும். பின்னர், சீரகத் தூள், மிளகுத் தூளைத் தூவி, கிளறிவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். பின், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழைகளை மேலே தூவ வேண்டும். இதை, காலை உணவாகவோ, மாலை சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
பலன்கள்
உடலுக்குத் தேவையான மாவுச்சத்து, புரதம், கால்சியம் கிடைக்கும்.
பசியைப் போக்கி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். மதியம் வரை பசிக்காமல் திடமான உணவாக இருக்கும்.
எலும்புகள் உறுதி பெறும். உடல் எடையும் அதிகரிக்கும். குழந்தைகள் அடிக்கடி சாப்பிடலாம். பெரியவர்கள் வாரம் இருமுறை சாப்பிடலாம்.
ஆரோக்கியமான எடைகூட உதவும் உணவு இது. உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பீட் ட்ரீட்
தேவையானவை
நடுத்தர அளவு பீட்ரூட்,
ஆப்பிள் - தலா 1
நடுத்தர அளவு கேரட் - 2
வெல்லம் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி - 2.
செய்முறை
பீட்ரூட், கேரட், ஆப்பிளைத் தோல் நீக்கி நறுக்கிக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் ஒரு முறை அரைத்துக்கொண்ட பின், ஐஸ் கட்டிகள், வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். டம்ளரில் ஊற்றும்போது, எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, பருக வேண்டும்.

பலன்கள்
கொழுப்புச்சத்து இல்லாததால், அனைவரும் தினமும் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும் இந்த ஜூஸைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் குடித்துவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரற்ற மாதவிலக்கு, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளின் தீவிரம் குறையும்.
ஃபோலிக் அமிலம் நிறைவாக இருப்பதால், குழந்தை பெறத் திட்டமிடுபவர்களும் கர்ப்பிணிகளும் சாப்பிட்டுவர, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட், நுண்ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் சி, ஏ இருப்பதால், இந்த ஜூஸை அடிக்கடி பருகிவர, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
- ப்ரீத்தி
படங்கள்: எம்.உசேன்