Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 4

மருந்தில்லா மருத்துவம் - 4
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 4

மணிப்பூரகச் சக்கரம்

மருந்தில்லா மருத்துவம் - 4

மணிப்பூரகச் சக்கரம்

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 4
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 4
மருந்தில்லா மருத்துவம் - 4

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானா சக்க ரங்களின் சக்தியால் ஒரு குழந்தைக்கு, செடி வேரூன்றி வளர்வது போல், ஒன்றரை வயதில் இருந்து நான்கு வயதுக்குள் மணிப்பூரகச் சக்கரம் வளரும். இந்தக் காலகட்டத்தில்தான், புவிஈர்ப்பு சக்திக்கு எதிராக, உடல் மேல் நோக்கி வளரும், குழந்தை, நடக்க ஆரம்பிக்கும்.

இளம் மஞ்சள் நிறத்தில் இதழ்களுடைய மணிப்பூரகச் சக்கரம் மார்புக்கூட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதை முன் மணிப்பூரகம் என்கிறோம். இதற்கு எதிர்ப்பகுதியில் பின் மணிப்பூரகம் அமைந்துள்ளது.

இந்தச் சக்கரம் மலரும் பருவத்தில், பெற்றோரின் செயலை குழந்தைகள் மனதில் பதித்துக்கொள்வர். எனவே, குழந்தை எப்படி வளர வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அந்தச் சூழ்நிலையை வீட்டில் ஏற்படுத்துவது அவசியம். ஓடியாடி விளையாடும் இந்தப் பருவத்தில்தான், மற்ற குழந்தைகளுடன் பழகுவதற்கும், மொழியைப் பேசுவதற்கும் கற்று, மனதில் நிரந்தரமாகப் பதியவைக்கும் செயல்பாட்டை குழந்தைகள் செய்வர். இந்தப் பருவத்தில் குழந்தையின் சூழ்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது, தன்னம்பிக்கை குறைதல், தாழ்வுமனப்பான்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

மருந்தில்லா மருத்துவம் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேல் வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளான இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், மண்ணீரல், கணையம் என அனைத்தும் முன் மணிப்பூரகத்தின் கட்டுப்பாட்டில் அடங்கியிருக்கின்றன.

நம் உடலுக்கு ஆற்றல் தேவை. உணவை செரிமானம்செய்து அந்த ஆற்றலை நம்முடைய செரிமான மண்டலம் தருகிறது.  தேவையற்றதைக் கழிவுப்பொருளாக வெளியேற்றுகிறது. இந்தச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவது இந்தச் சக்கரம்தான். மிக வேகமான இந்தக் காலத்தில் சாப்பிடக்கூட நேரம் இல்லை. வாயில் போடும் உணவை அரைப்பதற்கு, வாயில் பற்கள், நாக்கு, உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. இவற்றை உபயோகிக்காமல், உணவை விழுங்குவதால், இரைப்பைக்குச் செரிமானம் செய்யும் சுரப்பிகளுக்கு வேலை அதிகமாகிறது. அதேபோல அனைவரும் செய்யும் தவறு, சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாதது.

7 முதல் 9 மணிக்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும். நம் உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் இரைப்பை, காலை 7 முதல் 9 வரை தீவிரமாக வேலைசெய்யும். இரைப்பையில் உணவு செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் என்சைம், ஹார்மோன் சுரக்கின்றன. இந்த நேரத்தில், இரைப்பைக்கு உணவை அளிக்காமல் இருந்தால், இங்கு சுரக்கும் அமிலம் இரைப்பையைப் புண்ணாக்கும். இதைத்தான் `அசிடிட்டி’ (Acidity), `கேஸ்ட்ரைடிஸ்’ (Gastritis) என்கிறோம். இதுவே, நாளடைவில் அல்சர், புற்று நோய் வரக் காரணமாகலாம்.

மனதில் தோன்றும் கோபம், மன அமைதியின்மை, பொறாமை, வருத்தம் போன்றவை முன் மணிப்பூரகச் சக்கரத்தின் இயக்கத்தைப் பாதிப்பதால், இந்தச் சக்கரத்தைச் சார்ந்த எல்லா உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால்தான், இரைப்பையை நோய்கள், மனஅழுத்தத்தாலோ, தவறான உணவுப் பழக்கத்தாலோ வரும். இரைப்பைப் புண்,  உணவுக்குழாயிலும், தொண்டைப் பகுதியிலும், தொண்டை வழியாக நடுக்காது வரை பரவி பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு தலைவலி, தொண்டைக் கமறல் போன்ற அறிகுறிகள் மட்டுமே தென்படும். இதற்கு, முன் மணிப்பூரகச் சக்கரத்துக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

நம் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் அல்லது சில மருந்துகளின் பக்க விளைவுகள், குடிப்பழக்கம் போன்றவற்றால், மஞ்சள்காமாலை, கல்லீரல் வீக்கம், செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். ஆயினும், கல்லீரல் தன்னையும் காப்பாற்றி, உடலையும் காக்கும் திறன் உடையது. இதைப் பழுதடையாமல் பாதுகாப்பது நம் வாழ்க்கை முறையைப் பொறுத்தது.

மண்ணீரல் பாதிக்கப்பட்டால், உடலின் நீர்ச்சத்துச் சம நிலை குழைந்து, சிவப்பு அணுக்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

மருந்தில்லா மருத்துவம் - 4

சிகிச்சைகள்

சரியான வாழ்க்கைமுறை இன்மை, மனஅமைதியின்மை, தவறான உணவுப்பழக்கத்தினால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படும். இதைச் சரிசெய்ய முன் மணிப்பூரகச் சக்கரத்துக்கு மருந்தில்லா மருத்துவ முறையான ‘ரெய்கி’ சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், செல்கள் உற்பத்திக்கு தைராய்டு சுரப்பியை ஊக்குவிக்க வேண்டும். எனவே, விஷுத்தி சக்கரத்துக்கு சக்தி அளிக்கப்பட வேண்டும். விஷுத்தி சக்கரம், மணிப்பூரகச் சக்கரம் இரண்டும், ஆக்ஞா சக்கரத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆகையால், சர்க்கரை நோய்க்கு, மணிப்பூரக, விஷுதி, ஆக்ஞா சக்கரங்களுக்கு ரெய்கி சிகிச்சை அளிப்பதன் மூலம் முன்னேற்றத்தைப் பெறலாம்.

சிறுகுடல் சார்ந்த வியாதிகள், வயிற்றுப்புண், அல்சர், புற்றுநோய், அடைப்பு போன்ற வியாதிகளுக்கு முன் மணிப்பூரகச் சக்கரத்தின் வழியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலர், சாப்பிட்ட சிறிது நேரத்தில் தொப்புளைச் சுற்றி வலியை உணர்வார்கள். இது, சிறுகுடலைச் சார்ந்த வியாதி. இதற்கும் முன் மணிப்பூரகச் சக்கரத்துக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும், உடல்பருமனாக இருந்தாலும், கை, கால்கள் நீர் சேர்ந்து வீக்கம் இருந்தாலும் ரத்த அணுக்கள் பாதிக்கப்படும். மண்ணீரலுக்கு, முன் மணிப்பூரகச் சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளித்து, பூரண நிவாரணம் அளிக்கலாம்.

- தொடரும்

மணிப்பூரகம் சீரான செயல்பாட்டுக்குமணிப்பூரகச் சக்கரம் சமநிலையில் இருக்க, மனதைப் பாதிக்கும் கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் உதவும். மணிப்பூரக உறுப்புகளில் ஏற்படும் பிரச்னை களுக்கு சுஜோக் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கப்பதன் மூலமாகவும் நிவாரணம் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism