‘நாம் எப்படிச் சாப்பிடுகிறோம்?’ என்று கேட்டால், `உணவைக் கையால் எடுத்து வாயில்வைத்து, மென்று, விழுங்குகிறோம்’ என்று சொல்வோம். இதை நமக்குச் சொல்லிக்கொடுத்தது யார் என்று கேட்டால்... ‘இதை எல்லாமா சொல்லிக்கொடுப்பார்கள். இது எல்லாம் தானாகவே நடக்கக்கூடியது’ என்போம் அல்லவா! அப்பா - அம்மா சொல்லிக்கொடுக்காமல் ஒரு குழந்தை எப்படிச் சரியாகச் சாப்பிடுகிறது? இதற்குக் காரணம் மூளைதான்.

உணவை வாயில் வைத்த உடனே, அந்த உணவின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மூளை கட்டளையிடுகிறது. இதன்படி, அரைக்கவேண்டிய உணவு பற்களிடம் ஒதுக்கப்படுகிறது. தாடையை மேலும் கீழுமாகவும், நாக்கை மேலும் கீழும், முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைத்து உணவை அரைக்கத் துணை செய்கிறோம். பின்னர் அரைக்கப்பட்ட உணவை, நாக்கின் மேல் வைத்து, நாக்கை மேல் அண்ணத்துடன் ஒட்டும்படி உயர்த்தி - அழுத்தி உணவுக்குழாய்க்குள் உணவைச் செலுத்துகிறோம். இதுவே, திரவ உணவாக இருந்தால் நேரடியாக உள்ளே செலுத்துகிறோம். இந்த அத்தனைப் பணிகளையும் செய்யும் நமது வாயின் இயக்கம் அற்புதமானது.

தலையில் இருந்து தாடை வரை சுமார் 30 விதமான தசைகளும், 30 நரம்புகளும் ஒத்திசைந்து வேலை செய்யும்போதுதான் நம்மால் சாப்பிட முடிகிறது. நாம் திட உணவுகளை எவ்வளவு நேரம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நமது சுவாசம் தடைப்படுவது இல்லை. ஆனால், தண்ணீர் போன்றவற்றைக் குடிக்கும்போது நமது சுவாசம் தடைப்படும். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது தவறு, சாப்பிடும்போது பேசுவது தவறு என நமது முன்னோர்கள் சொன்னதில் அறிவியலும் உண்டு. உணவை வாயில் சரியாக அரைப்பது வரை மட்டும்தான் நம் இச்சைப்படி நடக்கும். உணவுக்குழாய்க்கு உணவு சென்றுவிட்டால், அதன் பிறகு அனிச்சையாகத்தான் உணவு செரித்தல் நடக்கிறது.

உணவுக்குழாயும் (Esophagus) மூச்சுக்குழாயும் அரை இன்ச் இடைவெளியில்தான் இருக்கின்றன. ஒரே ஒரு பருக்கை மூச்சுக்குழாயில் நுழைந்தாலே, நாம் திணறிப்போவோம். கிலோக் கணக்கில் தினமும் நாம் சாப்பிடும் உணவு எப்படிச் சரியாக உணவுக்குழாய் வழியாகச் செல்கிறது? நாம் அனைவருமே தினமும் எச்சில் விழுங்குவது, தண்ணீர் அருந்துவது, சாப்பிடுவது என சராசரியாக 2,000 தடவை ஏதாவது ஒன்றை விழுங்கிக்கொண்டே இருக்கிறோம். நமது உணவுக் குழாய் சுமார் 20 செ.மீ நீளம்கொண்டது. உணவுக் குழாயில் இரண்டு முடிச்சுக்கள் இருக்கின்றன. தொண்டையின் முடிவில் உணவுக் குழாய் தொடங்கும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. கிரைக்கோபரின்ஜியஸ் (Cricopharyngeus) எனும் தசைகளால் ஆன இந்த வால்வுதான் வாயில் இருந்து உணவு ழுங்கப்படும்போது, சரியாகத் திறந்து உணவைப் பிடித்து உணவுக்குழாய்க்குள் உணவை இழுத்துக்கொள்கிறது. இந்தத் தசையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உணவின் பயணம் சிக்கலாகும்.

உணவுக்குழாய் என்பது ஏதோ சாதாரண தண்ணீர் குழாய் போன்றது என நினைத்து விட வேண்டாம். நாம் உணவை விழுங்கியவுடன், தொபுக்கடீர் என நேரடியாக இரைப்பையில் உணவு விழுந்துவிடாது. மலைப்பாம்பு உணவை விழுங்கும்போது அலைபோல தோன்றுவதைப் பார்க்க முடியும். அதேபோல, நமது உணவுக் குழாயில் உணவு செல்லும்போது உணவுக்குழாயில் இருக்கும் தசைகள் வளைந்து கொடுத்து, நெகிழ்ந்து உணவைப் பாதுகாப்பாக இரைப்பைக்குக் கொண்டுசெல்கின்றன.

உணவுக்குழாய் இரைப்பையுடன் இணையும் இடத்தில் ஒரு வால்வு (Lower esophageal sphincter) இருக்கிறது. உணவுக்குழாயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த வால்வு வழியாக உணவு, இரைப்பைக்கு செல்லும். அதேபோல இரைப்பையில் இருந்து உணவு மேலே ஏறிவிடக் கூடாது என்பதால் அதைத் தடுக்கும் வேலையையும் இந்த வால்வுதான் செய்கிறது. ஏனெனில் இரைப்பையில் மிக வலுவான அடர் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் உணவுக்குழாயில் புகுந்தால், அந்தப் பகுதியை அரித்துவிடும். உணவுக்குழாயில் உணவு பயணிக்கும் சமயத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டால் நாம் துடிதுடித்துப் போகிறோம். நாம் சரியாக உணவை மென்று சாப்பிடாமல் போனாலும், உணவுக்குழாயில் அல்லது செரிமான மண்டலத்தில் ஏற்படும் வேறு சில கோளாறுகளாலும், உணவுக்குழாயில் நடக்கும் பணிகள் பாதிக்கப்படலாம்.

உணவுக்குழாயில் ஏற்படும் பிரச்னைகளை டிஸ்பேஜியா (Dysphagia) என்று சொல்வார்கள். உணவுக்குழாயில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பொதுவாக பலருக்கும் அதை எப்படி விளக்குவது எனத் தெரியாது. பலரும் வெவ்வேறுவிதமாகப் பிரச்னையைச் சொல்வார்கள். உங்களுக்கு எப்போதாவது உணவு விழுங்குவதில் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதன் அனுபவத்தை, கடிதம், இ-மெயில், ‘டாக்டர் விகடன்’ ஃபேஸ்புக் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். டிஸ்பேஜியா பற்றி விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்

படம்: சி.தினேஷ் குமார்