Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்தி ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்தி ஷாப்பிங்

பைலேட்ஸ் சர்க்கிள் (Pilates Circle) - ரூ2700

ஹெல்த்தி ஷாப்பிங்

கை, கால்களுக்கு இடையில் வைத்து சில வகைப் பயிற்சிகளைச் செய்ய உதவும் கருவி இது. இந்தப் பயிற்சிகள், கை, கால், இடுப்புப் பகுதித் தசைகளை வலிமைப்படுத்தும்.

அக்கி ஃபீட் (Achy Feet) - ரூ450

ஹெல்த்தி ஷாப்பிங்

தட்டையான பாதப் பிரச்னை சிலருக்கு இருக்கும். அவர்களுக்கான பிரத்யேகக் காலுறை இது. உடலின் சமநிலைத் தன்மையைச் சரிசெய்ய, இதை அணியலாம்.

டீடாக்ஸ் டப் (Detox tub) - ரூ550

ஹெல்த்தி ஷாப்பிங்

வெதுவெதுப்பான நீரில் கால்களை மூழ்கவைப்பதன் மூலம் ரிலாக்ஸேஷன் தரும் டப் இது. 20 நிமிடங்கள் இப்படி வைக்கும்போது, நீரின் நிறம் லேசாக மாறும்; கால்களில் உள்ள கழிவுகள், நகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். கால் வலி குறையும். பாதம் மென்மையாகும்.

தெராபுட்டி (Theraputty) - ரூ900

ஹெல்த்தி ஷாப்பிங்

களிமண்ணை அழுத்துவதைப்போல இந்த தெராபுட்டியையும் கைகளால் அமுக்கி அழுத்தம் கொடுப்பதன் மூலம், கை விரல்கள், மணிக்கட்டுக்குப் பயிற்சி அளிக்கலாம்.

ஃபைன் பேஃஷியல் மசாஜர் (Fine Facial Massager) - ரூ350

ஹெல்த்தி ஷாப்பிங்

முகத்தில் மசாஜ்செய்ய உதவும் கருவி இது. இதில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆப்ஷன்களைவைத்து, வெவ்வேறு விதமான முகத்துக்கான மசாஜ் சிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம்.

நோஸ் கிளிப் (Nose clip) - ரூ450

ஹெல்த்தி ஷாப்பிங்

மூக்கின் இரண்டு துவாரங்களின் இடையில் கிளிப்போல மாட்டிக்கொண்டால், குறட்டைவிட முடியாது. மிருதுவான உருண்டைகள் கிளிப் நுனியில் இருப்பதால் வலிக்காது. டாக்டர் பரிந்துரையுடன் இதைப் பயன்படுத்தலாம்.

வெயிட் லாஸ் வாட்ச் (Weight Loss watch) - ரூ2000

ஹெல்த்தி ஷாப்பிங்

இந்த வாட்ச்சைக் கட்டிக்கொண்டால், இதில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள்,  அக்குபிரஷர் போல இருக்கும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்யும்போது, கலோரி எவ்வளவு எரிக்கப்படுகிறது மற்றும் பி.எம்.ஐ போன்றவற்றைக் கணக்கிட்டுக் காண்பிப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஸ்லீப் மேனேஜர் (Sleep Manager) - ரூ8000

ஹெல்த்தி ஷாப்பிங்

ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்கினோம்... ஆழ்ந்த தூக்கமா, தடைபட்ட தூக்கமா, அரைத் தூக்கமா, தூக்கமின்மைப் பிரச்னையா எனத் தூக்கத்தைப் பற்றிய தெளிவான விவரங்களைத் தரும்.

மல்டி மசாஜ் (Multi Massage) - ரூ450

ஹெல்த்தி ஷாப்பிங்

தனித்தனி ஸ்டிக்குகளை இணைத்து, கழுத்தில் துண்டு போடுவதுபோல வைத்தால், இதில் இருக்கும் இரண்டு பந்துகளும் கழுத்து, தோள்பட்டைக்கு மசாஜ் தரும்.

- ப்ரீத்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

உதவி: மெடிவேர்ல்டு, அண்ணா சாலை, சென்னை