கம்புமாவு ரொட்டி

தேவையானவை

கம்பு மாவு - 2 கப்

வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு - 2

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்

இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 2 ஸ்பூன்

உலர்ந்த மாங்காய்த் தூள் - 1 ஸ்பூன்

சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு, நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.

செய்முறை

மசித்த உருளைக்கிழங்குடன், கம்பு மாவு, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, சீரகத் தூள், மாங்காய்த் தூள், உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசைய வேண்டும். உருளையில் நீர் இருப்பதால், தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது. சப்பாத்தி போல தட்டி, தவாவில் போட்டு இரண்டு பக்கமும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிச் சுட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்

உடலின் வெப்பம் தணியும். காலையில் சாப்பிடுவது சிறந்தது.

நரம்புகளுக்குப் புத்துணர்வை அளித்து, உடலுக்கு ஆற்றலைத் தரும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.

வயிறு, வாய்ப் புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கம்புக்கு உண்டு. இதனுடன், உருளை சேருவதால் பசியாறும். திடமான உணவாக இருக்கும்.

தொடர்ந்து தோசை, சப்பாத்தி சாப்பிட்டு வருபவர்களுக்கு, புதுவித சுவையைத் தரும் ஆரோக்கிய ரெசிப்பி.

ஃப்ரூட் - வெஜ் சாட்

தேவையானவை

சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், தக்காளி, வேகவைத்து, தோல் நீக்கிய உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்

ஆப்பிள், தோல் நீக்கிய வெள்ளரி - தலா 1/2 கப்

திராட்சை - சிறிதளவு

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1

புதினா சட்னி, மீட்டா சட்னி (பேரீச்சம் பழம், புளி, வெல்லம் சேர்த்து அரைத்தது), எலுமிச்சைச் சாறு - தலா 1/2 ஸ்பூன்

கறுப்பு உப்பு, வறுத்த சீரகத் தூள், மிளகாய்த் தூள் - தலா1/4 ஸ்பூன்

புதினா இலைகள் - மேலே தூவுவதற்காக (புதினா இலைகளை வெந்நீரில் நனைத்துப் பயன்படுத்த வேண்டும்).

செய்முறை

பழங்கள், காய்கறிகளைப் பெரிய பாத்திரத்தில் கொட்டி, அதில் புதினா மற்றும் மீட்டா சட்னி, உப்பு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து வைக்கவும். மேலே புதினா இலைகளைத் தூவிவிடவும். இதைத் தயார் செய்த உடனே, சாப்பிட்டுவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடக் கூடாது.

பலன்கள்

வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளதால், கண்களுக்கும் சருமத்துக்கும் ஏற்ற உணவு. குடலைச் சுத்தம் செய்யும்.

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின், தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளதால், இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலை அல்லது மாலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. அனைத்து ஊட்டச்சத்துக்களும் கலந்து இருப்பதால், கம்ப்ளீட் டயட்டாக இருக்கும்.

அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய ரெசிப்பி இது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்.

- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்