Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 5

மருந்தில்லா மருத்துவம் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
மருந்தில்லா மருத்துவம் - 5

ஹெல்த்

மருந்தில்லா மருத்துவம் - 5

ல் 1 முதல் எல் 5 வரையில் அமைந்திருக்கும் எலும்புத்தொடருக்கு `லம்பார்’ (Lumbar) என்று பெயர். இந்தப் பகுதியைச் சார்ந்தது பின் மணிப்பூரகம்.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள், அடிவயிற்றின் எலும்புக்கூட்டினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் கர்ப்பமுறும்போது, கர்ப்பப்பையில் வளரும் சிசுவுக்குக் குறுகிய அடிவயிறு போதாது.

இயற்கையிலேயே, வலுவான தசைகளினாலான கர்ப்பப்பை, சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைகிறது. இப்படி விரிவடையும்போது, கர்ப்பப்பை, மேல் வயிற்றுப் பகுதியை அடைகிறது. மார்புக்கூட்டில் எலும்புகள் உள்ளதுபோல், இங்கும் எலும்புகள் இருந்தால் கர்ப்பப்பை சிதையும். சிசுவும் வளர முடியாது. இதனால்தானோ என்னவோ, இந்தப் பகுதியில் எலும்புகள் இல்லை. இது இயற்கையின் வியக்கத்தக்க அமைப்பு. அதே சமயம், கர்ப்பப்பையைப் பாதுகாக்க மிக வலுவான தசைகள் முன்புறமும் பின்புறமும் அமையப்பெற்று பின் மணிப்பூரகச் சக்கரத்தைச் சார்ந்திருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மருந்தில்லா மருத்துவம் - 5

ஏற்படும் பிரச்னைகள்

இன்றைக்குப் பலரையும் பாதிக்கும் விஷயம் முதுகுவலி. நீண்ட நேரம் ஒரே இடத்தில், முதுகை வளைத்து உட்கார்ந்து வேலை செய்யும்போது, தசைகள் இறுகி, நரம்பில் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்படுகிறது. அதேபோல், முதுகை வளைத்து அதிகப் பளுவைச் சுமப்பவர்களுக்கும், குண்டும் குழியுமான சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும், முதுகுவலி ஏற்படும்.

இதன் காரணமாக, எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்புகள் நசுங்கி, தண்டுவடத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றன அல்லது வெளிப்பாகத்தில் துருத்திக்கொண்டு வந்து நரம்புகள் மேல் அழுத்தம் கொடுக்கின்றன. இதனால், முதுகுவலி, கால்வலி வரலாம். குருத்தெலும்பு இவ்வாறு வெளியே வரும் நிலைக்கு  ‘வட்டு விலகுதல்’ (Disc Prolapse)  என்று கூறுவர். சிலருக்கு முதுகுவலி மட்டுமே வரும். சிலருக்குக் கால்வலி, முழங்கால் வலி, சியாடிகா, பாதம் உணர்ச்சியற்ற நிலை போன்ற பிரச்னைகள் வரலாம்.

இதற்கு மருந்து, மாத்திரை எடுத்தாலும் அது, நோயின் அறிகுறிகளையே நீக்கும். நோய் நீங்காது. சிலருக்கு அறுவைசிகிச்சை செய்வார்கள். ஆனால், மருந்து, மாத்திரை இல்லாமல் அறுவைசிகிச்சை  இல்லாமல், முதுகுவலி, வட்டு விலகுதல், கால்வலி, மூட்டுவலி அனைத்தும் மணிப்பூரகச் சக்கர சிகிச்சையால் நீங்கும். மேலும், ஸுஜோக், அக்குபஞ்சர் மூலம் புறங்கையில் உள்ள புள்ளிகளைத் தூண்டிவிட வேண்டும். தசைகளின் பலவீனத்தாலோ, எலும்புகளின் தேய்மானத்தாலோ ஏற்பட்ட வட்டு விலகுதல் பிரச்னைக்கு, அதற்கான புள்ளிகளை, உள்ளங்கையிலேயே தேர்ந்தெடுத்து, சிகிச்சை அளிப்பதன் மூலம் சரிப்படுத்தலாம்.

மருந்தில்லா மருத்துவம் - 5

சியாடிகா (Sciatica)

முதுகில் உள்ள தண்டுவடத்தில் இருந்து கிளம்பும் நரம்புகள், இடுப்பு வழியாகச் சென்று கால் விரல்களை அடைகின்றன. முதுகுப்பகுதியில் உள்ள தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் இடுப்பின் கீழ்ப்பகுதியில் ஒருங்கிணைந்து,   பல கிளைகளாகப் பிரிந்து கால்களுக்குச் செல்கின்றன. அதிக நேரம் ஒரே இடத்தில் அமரும்போது, இடுப்பின் கீழ்ப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால், இடுப்பு, கால்களில் வலி ஏற்படுகிறது. தொடையின் வெளிப்புறமும், காலின் பின்பகுதியிலும் வலி ஏற்படலாம். இது `சியாடிகா’ என அழைக்கப்படுகிறது. இதற்கு, பின்-மணிப்பூரகச் சக்கரத்துக்கு சிகிச்சை அளித்தால் பூரண குணமடையலாம். மேலும், கால்களுக்கும் சிகிச்சை அளித்து, சியாடிகா வலியைக் குறைக்கலாம்.

நரம்புகள் பாதிக்கப்படுவதால், தண்டுவட மெரிடியனில், தகுந்த புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, ஸுஜோக் அக்குபஞ்சர் முறையினால் சிகிச்சை அளிக்கும்போது, உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

மருந்தில்லா மருத்துவம் - 5

முழங்கால்வலி (ஆர்த்ரைடிஸ்)

முழங்கால்வலி யாருக்கும் வரலாம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உடல்பருமன், முதுகுவலி, டெங்கு போன்ற சில வைரஸ் தாக்குதல், உடற்பயிற்சி இன்மை எனப் பல காரணங்கள் உள்ளன. முழங்கால் ஒரு வலுவான மூட்டு, இதை வலுப்படுத்த, வலுவான தசைகளும் தசைநார்களும், குருத்தெலும்புகளும் உள்ளன. இதில் ஏதாவது ஒன்று வலுவிழந்தால், வலி அல்லது முழங்கால் வீக்கம் ஏற்படலாம். இதற்கு வலுவூட்ட மூலாதாரச் சக்கரத்துக்கும், பின் ஸ்வாதிஷ்டானா சக்கரத்துக்கும், பின் மணிப்பூரகச் சக்கரத்துக்கும் சிகிச்சை அளித்து மூலக் காரணமான தண்டுவடத்தை வலுப்படுத்த வேண்டும்.

சிலருக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை அளிக்கப்படுகிறது. கால் மூட்டு தனியாக இயங்கக்கூடியது அல்ல.  மூலக்காரணமான முதுகையும், முழங்கால் மூட்டையும் பிரபஞ்ச சக்தி மூலம் வலுவடையச் செய்ய வேண்டும். இதனால், அறுவைசிகிச்சை இல்லாமலேயே நிவாரணம் பெறலாம். மூட்டுவலி எந்தக் காலில் ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, கல்லீரல் மெரிடியனில் அல்லது சிறுநீரக மெரிடியனில் ஸுஜோக் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பதன் மூலம் சரிப்படுத்தலாம்.

- தொடரும்

படம்: தி.ஹரிஹரன்