Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்தி ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்தி ஷாப்பிங்

எர்கோ பால் (Ergo ball) - ரூ 700

ஹெல்த்தி ஷாப்பிங்

இந்த எர்கோ பாலை தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளில் வைத்து அழுத்திப் பயிற்சிசெய்ய, உள்ளங்கை, கைவிரல்களின் அனைத்துப் பகுதிகளும் புத்துணர்வு பெறும்.

ஃபிட் பேண்ட் (Fit band) - ரூ 650

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹெல்த்தி ஷாப்பிங்

எலாஸ்டிக் தன்மைகொண்ட இதை இழுக்க முடியும். ஜன்னல் கம்பி போன்றவற்றில் கட்டியோ மாட்டியோ கை, கால்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். 

போர் கிளென்சர் (Pore Cleanser) - ரூ 750

ஹெல்த்தி ஷாப்பிங்

சருமத் துவாரங்களில் அழுக்கு, தூசு, கெமிக்கல்கள் படர்ந்திருந்தால், பரு, தேமல் உள்ளிட்ட சருமப் பிரச்னைகள் வரும். அவற்றை எளிதில் சுத்தம் செய்யும் கிளென்ஸர் இது.

பயோ ஃபீட்பேக் (Bio feedback) - ரூ 1,100

ஹெல்த்தி ஷாப்பிங்

தூக்கத்தில் குறட்டைவிட்டால், அருகில் எவரும் உறங்க முடியாது. இந்த வாட்சைக் கட்டிக்கொண்டு உறங்கினால், குறட்டைச் சத்தம் கேட்கும்போது, மெல்லிய அதிர்வு ஏற்பட்டு, ஒருபக்கம் சாய்ந்து படுக்க நினைவூட்டும்.

பின்ஹோல் கிளாஸ் (Pinhole glass) - ரூ 650

ஹெல்த்தி ஷாப்பிங்

கூலிங் கிளாஸ் மாதிரித்தான் இதுவும். வீட்டில் டி.வி பார்க்கும்போது, இதை அணிந்துகொண்டு பார்த்தால், டி.வி வெளிச்சம் கண்களைத் தாக்காமல் பாதுகாக்கும். சின்னச் சின்ன துவாரங்கள் வழியே ஐந்து நிமிடங்கள் பார்க்க முயற்சி செய்தால், கண்களுக்கான பயிற்சியாக அமையும்.

சூத்திங் சவுண்ட்ஸ் (Soothing Sounds) - ரூ 2,000

ஹெல்த்தி ஷாப்பிங்

மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தூங்கும் சமயத்தில், ஏதேனும் வேலைகள் செய்யும் தருணத்தில்கூட மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே இருக்க, மனம் சாந்தமாகும். டென்ஷன், பதற்றம், எரிச்சலான மனநிலை மாறும்.

தெர்மோமீட்டர் (Thermometer) - ரூ 2,500

ஹெல்த்தி ஷாப்பிங்

காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என, கைகளில் இந்த தெர்மோமீட்டரைப் பிடித்து அறிந்துகொள்ளலாம். சுகாதாரமான தெர்மோ மீட்டர் இது.

ஸ்டீமர் (Steamer) - ரூ 2000

ஹெல்த்தி ஷாப்பிங்

சருமத்தில் படிந்த அழுக்குகளை நீக்க ஸ்டீம் செய்துகொள்ளலாம். இதில், அரோமா எண்ணெய்கள், மூலிகை எண்ணெய்கள் கலந்து, டிஃப்யூசர் போலவும் பயன்படுத்தலாம். வீடு முழுவதும் நறுமணம் கமழும்.

- ப்ரீத்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

உதவி: மெடிவேர்ல்டு, அண்ணா சாலை, சென்னை