Published:Updated:

லப் டப் டிப்ஸ்

லப் டப் டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
லப் டப் டிப்ஸ்

லப் டப் டிப்ஸ்

தயம், உடலை இயக்கும் இயற்கை இன்ஜின். இதயத்தை இதமாக வைத்துக்கொள்ளும் நல்ல விஷயங்களும், இதயத்தைப் பாதிக்கும் தீயவையும் என்னென்ன என்பதை அறிந்துகொண்டால், ஆரோக்கியம் நம் கையில்!

குட்

இஞ்சி டீ: பால், சர்க்கரை சேர்க்காத கிரீன், இஞ்சி டீயைத் அருந்தலாம்.

நேர்மறை எண்ணங்கள்:
தன்னம்பிக்கைப் புத்தங்களை வாசிக்கலாம். தன்னம்பிக்கை தரும் மனப் பயிற்சிகளைச் செய்யலாம்.

லப் டப் டிப்ஸ்

வாக்கிங், ஏரோபிக்ஸ், சைக்கிளிங்: உடற்பயிற்சிகளை தினசரி 40 நிமிடங்கள் என்ற அளவில், வாரத்துக்கு ஐந்து நாட்கள் செய்ய வேண்டும்.

மகிழ்ச்சியான மனநிலை:
நகைச்சுவைப் படங்கள், நிகழ்ச்சிகள் பார்க்கலாம், விருப்பமான செயல்களில் ஈடுபடலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
லப் டப் டிப்ஸ்

உணவு: சிவப்பு நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களான ஆப்பிள், பீட்ரூட், தக்காளி, மாதுளை, தர்பூசணி சாப்பிடலாம்.

தினமும் மூன்று, நான்கு பாதாம், வால்நட் சாப்பிடலாம்.

பேட்

எண்ணங்கள்: கோபம், சோகம், டென்ஷன் போன்றவை உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி இதயத்தைப் பாதிக்கும்.

புகைப் பழக்கம்: இதில் உள்ள நச்சு இதயம், நுரையீரலைப் பாதித்து நோய்களை உருவாக்கும்.

லப் டப் டிப்ஸ்

வாழும் சூழல்: சத்தம் மிகுந்த சூழல், எரிச்சல் மனநிலையை உருவாக்கி, உடல் மற்றும் மனதைப் பலவீனமாக்கும்.

மாசடைந்த சூழலில் வசிப்பது சருமம், கூந்தல், நுரையீரல், இதயம், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

லப் டப் டிப்ஸ்

கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள்: உடல் பருமனாகும். இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

- மினு