Published:Updated:

'கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்!'’ - நடிகர் பாண்டு #LetsRelieveStress

'கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்!'’ - நடிகர் பாண்டு #LetsRelieveStress

'கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்!'’ - நடிகர் பாண்டு #LetsRelieveStress

'கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்!'’ - நடிகர் பாண்டு #LetsRelieveStress

'கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்!'’ - நடிகர் பாண்டு #LetsRelieveStress

Published:Updated:
'கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்!'’ - நடிகர் பாண்டு #LetsRelieveStress

டிகர் பாண்டு ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவர். நல்ல ஓவியரும்கூட. பிசினஸ்மேன், நடிகர், நகைச்சுவைப் பேச்சாளர் எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். அவரிடம், ``உங்களுக்கு ஏற்படும் டென்ஷன், மனஅழுத்தத்தை எப்படிக் கையாளுகிறீர்கள்?’’ என்று கேட்டோம். இதோ அவரே பேசுகிறார். கேட்போம்...


`` 'சின்னத்தம்பி' படத்துக்கு, அஞ்சு நாள், மூன்று நாள், ரெண்டு நாள், ஒரு நாள்னு பத்து நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். வழக்கம்போல 'புளூ மவுன்டெய்ன்'ல டிக்கெட் போட்டிருந்தாங்க. பொள்ளாச்சி பக்கத்துல பவானி லோயர் டேம்ல ஷூட்டிங். 
ஈரோடு பக்கத்துலதான் எனக்குச் சொந்த ஊர்ங்கிறதால, அந்தப் பக்கம் ஷூட்டிங்னா ரொம்ப ஆசையா கெளம்பிடுவேன். அந்த ஸ்பாட்டுக்குப் போகணும்னா, ஈரோட்டுல இறங்கணும். அங்கேருந்து கம்பெனி கார்ல ஓட்டலுக்குப் போயிட்டு, ரெஃப்ரெஷ் பண்ணிட்டு, ஷூட்டிங்குக்குப் போறதா ப்ளான். ட்ரெயின், ஈரோட்டுக்கு ராத்திரி 2 மணிக்குப்போகும். அந்த நேரத்துல விழிச்சிருந்து, கவனமா பார்த்து இறங்கிடணும். கொஞ்சம் அசந்து தூங்கிட்டோம்னா, ட்ரெயின் திருப்பூர் போய் சேர்ந்துடும். அதனால, டி.டி.ஆர்-கிட்ட சொல்லிவெச்சிட்டு படுத்துட்டேன். ஏ.சி கோச்ங்கிறதால லேசா ஒரு தட்டு தட்டி எழுப்புவாங்க. அதுலேயே சுதாரிச்சுக்கிட்டு எந்திரிச்சுப் போயிடுவேன். 

அன்னிக்குனு பார்த்து அந்த டி.டி.ஆர் வேற கோச்சுக்குப் போயிட்டார் போலிருக்கு. நானும் நல்லாத் தூங்கிட்டேன். ட்ரெயின் திருப்பூருக்கே போயிடுச்சு. சினிமாவுல நான் ஒண்ணும் பெரிய ஆர்ட்டிஸ்ட் கிடையாது. ஆனா, நமக்குனு ஒரு நல்ல பேர் இருக்கு. நமக்காக மத்தவங்களைக் காக்கவைக்கவும் முடியாது. இப்போ இறங்கவேண்டிய இடத்தை மிஸ் பண்ணியாச்சு. என்ன பண்றது? செமயா டென்ஷனாகிட்டேன். அந்த ஷெட்யூல்ல எனக்கு முதல் நாளே ஷூட்டிங் இருந்துச்சு. என்ன பண்றதுனே புரியலை. அப்போ செல்போன் வசதியெல்லாம் கிடையாது. லேண்ட்லைன்தான். ஸ்டேஷன்ல் இறங்கிப் பேசினேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோட்டுக்கு வந்த அவங்க காரையே திருப்பூருக்கு அனுப்ப, ஓட்டல் ரூமுக்குக்கூடப் போகாம நேரா ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். அங்கே போய் எங்கே குளிக்கிறது... பல்லை மட்டும் வெளக்கி, முகம் கழுவினேன். ஷூட்டிங்கை முடிச்சிட்டு சாயங்காலம் ரூமுக்குப்போய்தான் குளிக்கவேண்டியதாப் போச்சு. இதை எதுக்குச் சொல்றேன்னா... நாம எவ்வளவுதான் புத்திசாலியா இருந்தாலும், சமயோஜிதமா நடந்துக்கிட்டாத்தான் இன்னைக்கு இருக்குற உலகத்துல டென்ஷன் இல்லாம வாழ முடியும். சும்மாவாகிலும் வெட்டி வேதாந்தம் பேசிக்கிட்டு இருந்தோம்னா நமக்குத்தான் கஷ்டம். 

இதே மாதிரிதான் இன்னொருமுறை திருப்பூர்ல மாரத்தான் ஓட்டப் பந்தயத் தொடக்க விழா. காலையில 7 மணிக்கு நான்தான் கொடியசைச்சுத் தொடங்கிவைக்கணும். இந்த முறை ஈரோடு கிடையாது. திருப்பூருங்கிறதால கொஞ்சம் நிம்மதி. ஆனா, விதி யாரை விட்டுச்சு? இந்த முறை கோயம்புத்தூர்ல போய் இறங்கிட்டேன். அங்கேயிருந்து நேரா நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்குப் போய் தொடங்கிவெச்சுட்டு, அதுக்குப் பிறகுதான் ரூமுக்குப் போனேன்’’ என்றவரிடம், ``சமீப காலத்துல உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணின விஷயம் எது, அதுலேருந்து எப்படி வெளியில வந்தீங்க?’’ ``நான் அடிப்படையில ஓவியன். சொத்து சுகம் இருந்தாலும், தன்னந்தனியா சென்னைக்கு வந்து, கஷ்டப்பட்டு ஆர்ட்ஸ் காலேஜுல படிச்சவன். இது இப்போ இருக்கிற நிறையப் பேருக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர்., தி.மு.க-வைவிட்டுப் பிரிஞ்சு, தனிக்கட்சி ஆரம்பிச்சப்போ, அரசியல் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அடுத்து என்னனு யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க. நான் அங்கே ஒரு ஓவியனா கட்சியின் கொடியை வடிவமைச்சுக் கொடுத்தேன். அ.தி.மு.க கொடி நான் வடிவமைச்சதுதான். அதுக்கப்புறம் மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன்முதலா நான்தான் சென்னையில அறிமுகம் செஞ்சேன். 

நந்தனம் பெரியார் பில்டிங்குல இருக்குற உலோக எழுத்துகள் நான் வடிவமைச்சதுதான். அதன் பிறகு நிறைய ஆர்டர்கள் எனக்குக் கிடைச்சுது. `எழுத்துன்னா அது பாண்டுதான்’னு நல்ல பேர் வாங்கினேன். ஒன்றிரண்டு நாடுகள் தவிர, உலகத்துல இருக்கிற எல்லா நாடுகளுக்கும் நான் போய் வந்திருக்கேன். தற்செயலாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். பணத்தோட அருமை எனக்கு நல்லாத் தெரியும். 
இப்பவும் ஒரு புதுப்படத்துல நடிக்க கால்ஷீட் கேட்டாங்க.  குற்றாலத்துல ஏழு நாள் ஷூட்டிங்னாங்க. நான் ரெண்டு லட்ச ரூபாய் கேட்டேன். அவங்க 50 ஆயிரம் ரூபா தர்றேன்னாங்க. நான் பெரிய பிரஸ்டீஜ் பத்மநாபன் மாதிரி வேண்டாம்னுட்டேன். அதுக்கப்புறம் எனக்கு மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு. வீம்பா அம்பதாயிர ரூபா பணத்தையும் நல்ல வாய்ப்பையும் விட்டுட்டோமேனு கவலைப்பட்டேன். இந்த மாதிரி சில சமயம் நடக்கும். ஆனா, இந்த விஷயத்துக்கு ரெண்டு மூணு நாள்கூட கவலைப்பட்டுக்கிட்டு இருப்பேன். வெறுப்பா இருக்கும். ஆனா, அதுக்கப்புறமா என்னை நானே சரி பண்ணிக்குவேன். டென்ஷன்கிறது எல்லாத்துக்கும் வர்றதுதான். அந்த மாதிரி நேரத்துல பழைய காலத்து சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்களைக் கேட்க ஆரம்பிச்சிடுவேன். குறிப்பா, பழைய 'பிளாக் அண்ட் ஒயிட்' காலத்துப் பாடல்களைக் கேட்பேன். நான் சந்தோஷமா இருந்தாலும் அந்தப் பாடல்களைத்தான் கேட்பேன். என்னமோ அப்படிக் கேட்கும்போது மனசு லேசாகிடும். 

அதே மாதிரி ஆன்மிகத்துல எனக்கு ஈடுபாடு ஜாஸ்தி. குறிப்பாக சித்தர்களோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறதா நான் நம்புகிறேன். அதனால சித்தர்கள் வாசம் செய்யும் இடங்களுக்குப் பயணப்பட்டுப் போவேன். அங்கே கிடைக்கிற மனஅமைதி, சாந்தம், இதெல்லாம் என்னை அமைதிப்படுத்திடும். இன்னொரு முக்கியமான விஷயம்... பெரும்பாலும் மனசுல என்ன தோணுதோ அதை வெளிப்படையாகப் பேசிடுவேன். அதனால பெரிசா எந்த விஷயத்திலும் எனக்கு மனஅழுத்தம் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் அதுக்காக எவ்வளவு வருத்தப்படணுமோ அதை ஒரே மூச்சுல வருத்தப்பட்டு முடிச்சிடுவேன். கவலைகளுக்கு நான் ரெண்டாவது பதிப்பு போட மாட்டேன்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism