Published:Updated:

அந்தப்புரம் - 32

அந்தப்புரம் - 32
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 32

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 32

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 32
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 32
அந்தப்புரம் - 32

ப்ரீத்தம் - ப்ரியா இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து வீடு. இருவரும் பிறப்பதற்கு முன்பு இருந்தே, இவர்களின் பெற்றோர் அதே வீடுகளில்தான் வசித்துவந்தனர். ப்ரீத்தம் பிறந்த இரண்டு மாதங்கள் கழித்து ப்ரியா பிறந்தாள். சமவயது என்பதால், இருவரும் சின்ன வயதில் இருந்தே ஒன்றாக விளையாடி, பழகிவந்தனர். ஒரே பள்ளியில் படித்தனர். வேறு வேறு கல்லூரிகளில் படித்தாலும், நல்ல நண்பர்கள். தினமும் சந்தித்துப் பேசுவது, அரட்டை அடிப்பது என மிகவும் சாதாரணமாக இருந்தது அவர்கள் பழக்கம். ப்ரீத்தம் படித்தது இன்ஜீனியரிங், ப்ரியா படித்தது மேனேஜ்மென்ட். இருவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றிவந்தனர்.

மகிழ்ச்சி, துக்கம் என எதுவாக இருந்தாலும் இருவரும் ஷேர் செய்துகொள்வார்கள். பிரச்னை என்றால், ஆலோசனை கேட்டுக்கொள்வார்கள்.

25 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகப் பழகியவர்களுக்குள் காதல் என்ற உணர்வு தோன்றியது இல்லை. திடீரென ஒருநாள், ப்ரீத்தம் வீட்டில் திருமணப் பேச்சு எழுந்தது. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு, சில பெண்களின் புகைப்படங்களைத்  தேர்வுசெய்து வைத்திருந்தார் ப்ரீத்தமின் அம்மா. ஆனால், இவர்களில் யாரையும் ப்ரீத்தமுக்குப் பிடிக்கவில்லை. ‘நம்மை நன்கு புரிந்துகொண்ட ஒருத்தி வாழ்க்கைத்துணையாகக் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று யோசனை செய்தவனாக, தன்னுடைய அறைக்கு வந்தான் ப்ரீத்தம். அப்போது, `அது ஏன் ப்ரியாவாக இருக்கக் கூடாது?’ என்று தோன்றியது. இத்தனை ஆண்டுகளாக நல்ல தோழியாக இருந்த ப்ரியாவே தன்னுடைய வாழ்க்கைத்துணையாக வந்தால், நன்றாக இருக்கும் என முடிவே செய்துவிட்டான். தயங்காமல், ப்ரியாவை போனில் அழைத்தான். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எப்போ சந்திக்கலாம்?” என்றான். ப்ரியா, “நாளைக்கு ஈவினிங்” என்றாள்.

அந்தப்புரம் - 32

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருவரும் ஒரு ரெஸ்டாரன்டில் சந்தித்தனர்.

ப்ரீத்தம் தன் விருப்பத்தைச் சொன்னான். முதலில் ப்ரியா அதிர்ச்சியானாள். ஆனால், ஒரு நிமிடம் இருவரின் நட்பைப் பற்றி யோசித்துப்பார்த்தாள். இயல்பாகவே, `சரி’ என்றாள். மகிழ்ச்சியில் வீட்டுக்குப் போய், தன் பெற்றோரிடம் சொன்னான் ப்ரீத்தம். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இரண்டுபேர் வீட்டிலும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாகப் பேசி சமாதானம் செய்தனர். இதனால், மிக எளிமையாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்துத் திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்தது. அன்றே இருவரும் ஊட்டிக்கு ஹனிமூன் சென்றனர். ரயிலில் முதல் வகுப்பில் பிரத்தியேக கூபே புக் செய்திருந்தனர். சென்னை சென்ட்ரலில் ரயில் கிளம்பியது. அரக்கோணம் தாண்டியிருக்கும், ப்ரியாவிடம் சில்மிஷங்கள் செய்ய ஆரம்பித்தான்.  ஊட்டி செல்லும் வரைகூட பொறுத்திருக்க முடியவில்லை. ப்ரியாவைக் கட்டி அணைத்து, முத்தமழை பொழிந்தான். இருவரும் தங்கள் ஆடைகளுக்கு விடை கொடுத்தனர். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்தது. தாம்பத்திய உறவுக்குத் தயாரான நேரத்தில் ப்ரீத்தமால் முடியவில்லை. ‘ரயிலில் அசௌகரியம் காரணமாக முடியவில்லை’ என நினைத்து, ஊட்டி போனதும் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். ப்ரியா உடனே கம்பளியைப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். ப்ரீத்தம், அது தன் ஆண்மைக்கு நேர்ந்த அவமானமாக நினைத்தான். அவனால் உறங்க முடியவில்லை. இது பற்றி நண்பர்களிடம் பேசுவதா? டாக்டரிடம் கேட்பதா என்று இரவு வானத்தைப் பார்த்தபடி யோசித்தான்.

ஏன்? எதற்கு? எப்படி?

எல்லா மனிதனும் ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் திருமணம் செய்துகொள்கிறான். திருமணத்தின் மூலம் இந்த சமுதாயமும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் எதிர்பார்க்கிறது. திருமணம் செய்துகொள்பவர்களின் எதிர்பார்ப்போ வேறுவிதமாக இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டால் இனி, தன்னுடைய துணையுடன் உடலுறவுகொள்ளலாம் (நம்முடைய சமுதாயத்தில் தாம்பத்திய உறவுக்குத் திருமணம்தான் லைசென்ஸ்) அதன் மூலம், குழந்தைப்பேறு அடைந்து, தனக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக்கொள்ளலாம் என நினைக்கின்றனர்.

திருமணம் ஆகிவிட்டது என்றாலே, எல்லா தம்பதிகளும் எந்தப் பிரச்னையும் இன்றி தாம்பத்திய உறவு கொள்கின்றனர் என்று நாமாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. இது சுலபமான, எளிய விஷயமும் அல்ல. தாம்பத்தியம் என்பது சொல்லித் தெரிவது இல்லை. அது தன்னிச்சையாக, இயல்பாக ஏற்பட வேண்டியது. இதை நாம் அறிந்துகொள்ளும் முறை வேண்டுமானால் யாராவது சொல்லிக்கொடுப்பதாகவோ, நாமே அறிந்துகொள்வதாகவோ இருக்கலாம். ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும் செக்ஸ் தொடர்பான பிரச்னைகள் பற்றி வரும் இதழ்களில் பார்ப்போம்.

டவுட் கார்னர்

``சில டி.வி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, அதில் வரும் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டால், எனக்குப் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்?’’

வி.தேவராஜன், சிதம்பரம்.

``முதலில் தயக்கம், பயத்தைத் தவிர்த்து, உங்கள் சந்தேகம் என்ன என்பதை மருத்துவரிடம் பேசித் தெளிவு பெறுங்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் அப்படிப் போட்டிருக்கிறது என்று எல்லாம் மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.’’

``பாலியல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட என்ன காரணம்?’’

என்.ரவிக்குமார், சேலம்.

``இதைப் பொதுவானது என வகைப்படுத்த முடியாது. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு தம்பதிக்குமே பிரச்னைகள் வேறுபடும். இருப்பினும், பொதுவாகக் காணப்படும் பிரச்னைகளை அடிப்படையாகக்கொண்டு ஆர்கானிக் (உடல் சார்ந்த பிரச்னை), சைக்கோஜெனிக் (உணர்ச்சி, மனம் சார்ந்த பிரச்னை) மற்றும் சமூக - கலாசார பிரச்னை என்று பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு காரணியால்தான் பாலியல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது என்று கூற முடியாது. பல்வேறு பிரச்னைகளின் கூட்டுக் காரணமாகவும் இவை ஏற்படுகின்றன.’’
 
``செக்ஸ் பிரச்னைக்கு டாக்டர் எப்படி உதவ முடியும்? மற்ற நோய்களுக்கு டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவதற்கும், செக்ஸ் பிரச்னைக்கு மருத்துவரை அணுகி; சிகிச்சை பெறுவதற்கும் வேறுபாடு உள்ளதா? செக்ஸ் பிரச்னையைக் கண்டறிய ஏதேனும் பரிசோதனை உள்ளதா?’’

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

``மற்ற உடல்நலப் பிரச்னைகளைப் போலத்தான் பாலியல் பிரச்னைகளும். மற்ற உடல்நலக் குறைபாடுகளுக்கு எப்படி சிகிச்சை பெறுகிறோமோ, அதைப்போன்றதுதான் இதுவும். இதை வித்தியாசமான பிரச்னையாகக் கருத வேண்டாம். பாலியல் பிரச்னைக்கு நீங்கள் மருத்துவரை சென்று சந்திக்கும்போது, அவர் உங்களுக்கு உள்ள பிரச்னை, அதன் தன்மை, எவ்வளவு நாளாகப் பிரச்னை உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களைக் கேட்டுக் குறித்துக்கொள்வார். (பொதுவாக, தம்பதியராகச் சென்று மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது) அதன் அடிப்படையில் சில உடல் பரிசோதனைகளைச் செய்வார். அதைத் தொடர்ந்து தேவைப்படும் மருத்துவப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். அது, அவரவர் பிரச்னையைப் பொறுத்து மாறுபடும்.

பரிசோதனைகளில் பயோகெமிக்கல் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, பீனியல் ஹீமோடைனமிக் ஸ்டீஸ், நரம்பு தொடர்பான ஆய்வு, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, டாப்ளர் பரிசோதனை, ரெஜிஸ்கேன், உளவியல் பரிசோதனைகள் என சில பரிசோதனை முறைகள் உள்ளன. இவை அனைத்தையும் செய்யும்படி டாக்டர் பரிந்துரைக்க மாட்டார். நோயாளியின் பிரச்னை மற்றும் அவர் மேற்கொண்ட உடலியல் பரிசோதனை அடிப்படையில் தேவையான சில பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.

- ரகசியம் பகிர்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism