ஓட்ஸ் கட்லெட்

தேவையானவை

ஓட்ஸ் - 1 கப்

வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு - 2

பொடியாக நறுக்கிய காலிஃபிளவர், சுரைக்காய், பீன்ஸ், துருவிய கேரட் - தலா 1/4 கப்

சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

உலர்ந்த மாங்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு -1/4 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பிரெட் தூள் - 1/4 கப்

செய்முறை

வெறும் வாணலியில் ஓட்ஸை வறுத்துக்கொள்ள வேண்டும். அதை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் காலிஃபிளவர், மசித்த உருளை, சுரைக்காய், பீன்ஸ், கேரட், சிவப்பு மிளகாய்த் தூள், மாங்காய்த் தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு, எண்ணெய் போட்டு, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைய வேண்டும். நமக்குப் பிடித்த வடிவில் இந்த மாவைப் பிடித்துக்கொண்டு, பிரெட் தூளில் பிரட்டி, தவாவில் மிதமான எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.

பலன்கள்

காலை அல்லது மாலை நேர டிஃபனாக இருக்கும்.

ஓட்ஸ், பசியைப் போக்கும். இதயப் பிரச்னைகள் வராமல் தவிர்க்கும்.

நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து கலந்து இருப்பதால், சமச்சீர் உணவாக அமையும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி செய்துதரலாம்; மதிய உணவாகக் கொடுத்து அனுப்பலாம். தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

பொன்னாங்கண்ணிக் குழம்பு

தேவையானவை

பொன்னாங்கண்ணிக் கீரை - 1 கப்

பூண்டு - 20 பல்

துவரம் பருப்பு - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

புளிக் கரைசல் - 1 டேபிள்ஸ்பூன்

வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகு, தனியா, சீரகம் - தலா 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 4

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பருப்பை வேகவைத்து, மசித்துக்கொள்ள வேண்டும். மிளகு, தனியா, சீரகம், மிளகாயை வாணலியில் வறுத்து, ஆறவைத்துப் பொடித்து, ரசப்பொடி தயாரித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு, கீரையைப் போட்டு வதக்கிய பின், மிக்ஸியில் கீரை மற்றும் பருப்பைச் சேர்த்து அரைக்க வேண்டும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள், பூண்டு போட்டு வறுத்து, புளிக் கரைசல், அரைத்த கீரை மற்றும் பருப்பைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பிறகு, வெல்லம், உப்பு, ரசப்பொடிச் சேர்த்து, நன்றாகக் கொதி வந்த பிறகு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.

பலன்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை, கண்களுக்கு நல்லது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டுவர, பார்வைத்திறன் அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ, சி இருப்பதால், சருமத்தைத் தங்கம்போல ஜொலிக்கவைக்கும்.

புளிப்பும் இனிப்பும் கலந்திருப்பதால், கீரையைச் சாப்பிடாதோரும் இதன் புதுச் சுவையை விரும்புவர்.

பூண்டு சேர்வதால், வாயுத்தொல்லை நீங்கும். மதிய வேளையில் சாப்பிட ஏற்றது.

- ப்ரீத்தி

படங்கள்: எம்.உசேன்