Published:Updated:

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

Published:Updated:
அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!
அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

ரு படத்தில், `உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்கிற மிருகம், எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு... எழுப்பிடாத’ என்பார் கமல்ஹாசன். அது உண்மையே... நம் ஒவ்வொருவருக்குள்ளும் மிருகத்தன்மை இருக்கிறது. மனிதன், நாகரிகம் உருவாவதற்கு முன் விலங்கு போலத்தான் வாழ்ந்துவந்தான். அந்த மிருகத்தன்மை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாகரிகம், சமூகக்கட்டுப்பாடு போன்ற காரணங்களால் மறைந்திருக்கும் இந்தக் குணம், சூழ்நிலை மாறும்போது வெளிப்படுகிறது. எப்போதாவது, எதிர்பாராத கணத்தில் வன்முறை எண்ணம் தலைதூக்குவது இயல்பான விஷயம்தான். ஆனால், அதுவே ஒரு குணமாகத் தொடரும்போது, சமூக விரோத ஆளுமைக் குறைபாடு (Anti social personality disorder - ASPD) என்ற பிரச்னையாக மாறுகிறது.

மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே, கஷ்டப்படுவார்களே என்ற எண்ணம் துளியும் இன்றி, மற்றவர்களிடம் வன்முறையில் ஈடுபடுபவர்கள், சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுபவர்கள், எந்தக் குற்றவுணர்வும் இன்றி இவை அனைத்தும் மிகச் சரி என்ற மனநிலையில் இருப்பவர்களை  `ஏ.எஸ்.பி.டி பிரச்னை உள்ளவர்கள்’ என்கிறோம். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை ஏற்படலாம். பொதுவாக, 20 முதல் 30 வயதில் சிலருக்கு இந்தப் பிரச்னை தொடங்கும் அல்லது வெளிப்பட ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னை அதிக அளவில் ஆண்களிடமே காணப்படுகிறது.

இவர்களுக்கு, மனிதர்களிடம் மட்டும் அல்ல... விலங்குகளிடம்கூட எந்தவித அனுதாபமோ, இரக்கமோ இருக்காது. குழந்தைகளிடம்கூட முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்கள், சமுதாயத்தில் வன்முறையில் அதிகம் ஈடுபடுவார்கள்.

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

அறிகுறிகள்

சிறு வயதில் ‘காண்டக்ட் டிஸ்ஆர்டர்’ எனப்படும் நடத்தைக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பர். சிறுவயதில் இருந்தே சக மாணவர்களோடு சேராமல், தனித்துச் செயல்படுவார்கள். மற்றவர்களை அடிப்பது, அடுத்தவர் பொருளைத் திருடுவது, பிராணிகளைத் துன்புறுத்துவது, பொய் கூறுவது, சரியாகப் படிக்காமல் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் சொல்பேச்சு கேட்காமல் இருப்பது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவர். மனதளவில் சமூகத்தில் இருந்து தனிமைப்பட்டு இருப்பார்கள். இளம் வயதிலேயே மது, சிகரெட், போதைப்பழக்கத்துக்கு ஆளாவார்கள்.

பெரியவர்கள் ஆனதும், பெற்றோர் ‘கால்கட்டு போட்டால் சரியாகிவிடும்’ என்று திருமணம் செய்துவைப்பார்கள். ஆனால், இவர்களுக்குக் குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர்களுக்குப் பிடித்த, சுயநலமான செயல்களையே செய்வார்கள்.

மனைவியை, குழந்தைகளை அன்பாக, அக்கறையாகப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை முரட்டுத்தனமாகத் தாக்குவது, திட்டுவது என சித்ரவதை செய்து, அதில் இன்பம் அடைவார்கள். செல்லப் பிராணிகளை வளர்த்தால், மனம் அமைதி அடையும் என்பது உண்மை. ஆனால், இவர்கள் செல்லப் பிராணிகளின் காதை வெட்டுவது, வாலை வெட்டுவது எனக் கொடூரமாக நடந்துகொள்வார்கள். அப்போது அதற்கு ரத்தம் வந்து துடித்தால், அதனை ரசித்துச் சந்தோஷப்படுவார்கள்.

சமூக விரோத ஆளுமைக் குறைபாடு உள்ள ஒருவர், தன் கோரச் செயலை முதலில் விலங்குகளிடம் இருந்தே தொடங்குகிறார். அவற்றால் யாரிடமும் சென்று புகார் கூற முடியாது என்பதால் தைரியமாக ஈடுபடுவார்கள். செல்லப் பிராணிகளுக்குப் பிறகு, அதே செயல்களை மிரட்டியோ, சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்தோ குழந்தைகளிடம் செய்வார்கள். பிறகு, துணிந்து இவற்றைப் பெரியவர்களிடமும் செய்வார்கள்.

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

காரணம்

ஆளுமை என்பது எண்ணங்கள், நடத்தை, உணர்வுகள் போன்றவற்றின் ஒட்டுமொத்த உருவாக்கம். வெளி உலகத்தை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிந்துகொள்கிறோம், தொடர்புகொள்கிறோம் என்பதைப் பொறுத்து, ஒருவரின் ஆளுமை அமையும். சமூக விரோத ஆளுமைப் பிரச்னை உள்ளவர்கள் சிறு வயதில் இருந்தே இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களைப் பார்த்து வளர்ந்தவர்களாக இருப்பார்கள் அல்லது சிறு வயதில் இருந்தே அதிக வன்முறையைப் பார்த்து வளர்ந்தவர்களாக இருப்பர். அதாவது, தந்தை குடித்துவிட்டு தாயிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பது, அடித்துக் கொடுமைப்படுத்துவது போன்றவற்றைப் பார்த்து வளர்வதாலும் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. விவாகரத்தான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளிடம் இந்தப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது.

அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

சிகிச்சை என்ன?

இப்படித் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவர முடியும். மனஅழுத்தம், பதற்றம், கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்யலாம். ‘தனக்கு இந்தப் பிரச்னை’ என்று பாதிக்கப்பட்டவரால் சொல்ல முடியாது. எனவே, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்தான் இதைக் கண்டறிந்து பாதிப்பு பற்றி மருத்துவரிடம் விளக்க வேண்டும்.

முதலில் கவுன்சலிங் மூலம் பிரச்னையைக் கண்டறிந்து, தைராய்டு உள்ளிட்ட சில பரிசோதனைகள் செய்யப்படும். பிறகு, உளவியல் சோதனை செய்யப்படும். அதில் இவர்களுக்கு மனஅழுத்தம், பதற்றம், குழப்பம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது கண்டறியப்படும். பின்னர், இதன் அடிப்படையில் சிகிச்சை திட்டமிடப்படும்.

- பி.கமலா

ஏ.எஸ்.பி.டி தவிர்க்க...

சிறு வயதில் இருந்தே குழந்தைகளை அரவணைத்து வளர்க்க வேண்டும்.

குழந்தைகளிடம் தேவையான விஷயங்களில் கண்டிப்பு இருந்தாலும், அதிகப்படியான அன்பு காட்ட வேண்டும்.

அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை எடுத்துக்கூற வேண்டும்.

அவர்கள் அடம்பிடித்தாலோ, அதிகம் கோபப்பட்டாலோ அவர்களை அடிக்காமல், திட்டாமல், பொறுமையாக அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்.

அவர்கள் தானாகவே யோசித்து முடிவெடுக்கும் வயது வரும் வரை, அனைத்துச் செயல்களிலும் அவர்கள் கூடவே இருந்து வழி நடத்த வேண்டும்.

நல்ல புத்தகங்களைப் படிக்கவைப்பது, விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தவைப்பதோடு, டான்ஸ், மியூசிக், ஆர்ட்ஸ், கிராஃப்ட் போன்ற வகுப்புகளில் சேர்த்துவிட்டு, நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதனால், தானாகவே அவர்களின் மனம் பக்குவப்பட ஆரம்பிக்கும். வளர்ந்ததும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். வளர வளரவே அவர்களுக்குப் பொறுமை, யோசிக்கும்தன்மை வந்துவிடும்.

பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டை இடுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது. இதைப் பார்க்கும் குழந்தையின் மனதில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.

எவ்வளவு வசதியாக வளர்த்தாலும், பெற்றோரின் அரவணைப்பு மிகவும் முக்கியம். குழந்தையைத் தனிமையில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும்போது இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

அன்பே அனைத்துக்கும் மூலாதாரம். அன்பை அதிகமாகக் கொடுத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்!