Published:Updated:

அந்தப்புரம் - 33

அந்தப்புரம் - 33
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 33

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 33

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 33
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 33
அந்தப்புரம் - 33

திருமணம் ஆன அன்றே ஊட்டிக்குத் தேன்நிலவுக்குச் சென்ற ப்ரீத்தம்- ப்ரியா தம்பதியினர், ரயிலில் முதல் இரவு கொண்டாட முயன்றது தோல்வியில் முடிந்தது. அசதிதான் காரணம் என நினைத்த ப்ரியா உடனே தூங்கிவிட்டாள். ப்ரீத்தமுக்கோ கவலையாக இருந்தது. ஆண்மைக்கு சவாலாகத் தோன்றியது. இதுபற்றி யாரிடம் கேட்பது என்று மனப்போராட்டம். வெகுநேரம் கழித்தே உறங்கினான். காலையில், மேட்டுப்பாளையத்தில் ரயில் நிற்கும்போதுதான் கண் விழித்தான். இரவில் இருந்த கவலை எல்லாம் விலகி தெளிவாக இருந்தது அவன் மனம். ‘திருமண அசதி, ரயிலில் சௌகரியம் இன்மை போன்றவற்றால்தான் முதலிரவு நடக்கவில்லை... ஊட்டிச்குச் சென்றதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சமாதானம் செய்துகொண்டான்.

ஊட்டிக் குளிரில், ஹனிமூன் அறையில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என ஃபோர்ப்ளே முடிவில் தாம்பத்திய உறவுக்கு முயற்சிக்கும்போது ப்ரீத்தமால் உள்ளே நுழைக்க முடியவில்லை. ஏதோ தட்டுப்படுவது போன்ற உணர்வு அவனுக்கு இருந்தது. அதையும் மீறி நுழைக்க முயற்சித்தபோது. ப்ரியா வலியால் கத்தி அழ ஆரம்பித்துவிட்டாள். சரி முதலில் அப்படித்தான் இருக்கும், சரியாகிவிடும் என இரண்டு மூன்று முறை முயற்சித்தான். ஆனாலும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் இத்துடன் போதும் என்ற மனநிலைக்கு வந்தனர். இருவராலும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத சூழலில், நான்கு நாள் ஹனிமூன் பிளானை இரண்டாவது நாளிலேயே முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர்.

அந்தப்புரம் - 33

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுக்குவந்து ரெஃப்ரெஷ் ஆனதும் நேராகச் சென்றது மருத்துவமனைக்குத்தான். டாக்டரிடம் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கியதால், முதல் ஆளாக இருவரையும் உள்ளே அழைத்தார் டாக்டர். “என்ன பிரச்னை?” என்று கேட்க, ப்ரீத்தம் சொல்ல ஆரம்பித்தான். “கல்யாணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகலை டாக்டர். ஃபர்ஸ்ட் நைட்ல ட்ரை செய்யும்போது உள்ளேவிட முடியலை. திரும்ப திரும்ப ட்ரை செய்தேன். ஆனாலும், ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அதுவும் இல்லாம, ஏதோ தட்டுப்படுறமாதியே இருந்துச்சு” என்றான். இதனால், ப்ரியாவுக்குத் கன்னித்திரை என்று சொல்லப்படும் ஹைமன் (Hymen) தடிமனாக இருந்திருக்கும் என யூகித்தார். ஹைமனாக்டமி (Hymenectomy) என்கிற சிறிய அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரைத்தார். ப்ரியாவும் உடனே சரி எனச் சொல்ல, அன்றே அறுவைசிகிச்சை நடந்தது. மைனர் சர்ஜரி என்பதால், அன்றே வீடு திரும்பினர். சில நாட்கள் கழிந்தது. இப்போது, முயற்சிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். ஃபோர்ப்ளே எல்லாம் நல்லபடியாகச் சென்றது. ஆனால், இப்போதும் ப்ரீத்தமால் உள்ளே நுழைக்க முடியவில்லை. அறுவைசிகிச்சைக்குப் பிறகும் பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

ப்ரீத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்தான். விரக்தி, எரிச்சல் உணர்வு, இயலாமை ஏற்பட்டது. இதனால், ப்ரியாவைக் குற்றம் சொல்லிப் பேச ஆரம்பித்தான். ப்ரியாவும் விடவில்லை. ப்ரீத்தமிடம் உள்ள ஈகோ காரணமாக அவனுக்கு உள்ள பிரச்னையை, அவனுடைய தோல்வியை மறைக்க, தன் மேல் குற்றம் சுமத்துவதாகச் சண்டைபோட்டாள். இருவரது வாழ்க்கையும் நரகமாக மாறியது. திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்த நிலையில், இருவருக்குள்ளும் இன்னும் தாம்பத்திய உறவு நடக்காதது, இருவருக்கும் பெரும் குறையாகவே இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருவரும் குழப்பத்தில் இருந்தனர்.

ஏன்? எதற்கு? எப்படி?

தம்பதிகளிடையே பல்வேறு தீவிர உளவியல் சிக்கல்கள் தோன்றவும், இருவரிடையே சண்டை சச்சரவுகள், விரோதம் தோன்றவும் ஏன் தாம்பத்தியம் முறிவுபடவும் முக்கிய காரணமாக இருப்பது பாலியல் பிரச்னைகள்தான். மிகச் சமீப காலம் வரையில், பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் சிக்கலானதாக, கடினமானதாக மற்றும் திருப்தியற்றதாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், பிரச்னை என்ன என்று மருத்துவர்களால் சரியாகக் கணிக்க முடியாததுதான். தற்போது, நன்கு திறன்மிக்க மருத்துவர்கள் பலர் இந்தப் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வந்துவிட்டனர். இதன்மூலம், பாலியல் பிரச்னைகளை வைத்து ஏமாற்றும் தகுதியற்ற நபர்களிடமிருந்து தப்பித்து, பிரச்னைகளில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்வு வாழ்கின்றனர். இதற்கு நாம் டாக்டர் மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்சன் மற்றும் பாலியல் தொடர்பான இதர ஆராய்ச்சியாளர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். இவர்கள், பாலியல் மனநிலை (இயல்பான செயல்பாடு) மற்றும் பெத்தாலஜி எனப்படும் நோய்க்கூறு இயல் (இயல்புக்கு மாறான செயல்பாடு) தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டனர். இந்த ஆராய்ச்சியானது, பாலியல் பிரச்னைகளைக் கையாள்வது தொடர்பாகப் பல மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவியது. மேலும், பல மருத்துவர்களை முழு நேர பாலியல் பிரச்னைகளைத் தீர்க்கும் மருத்துவர்களாகவே மாற்றியது. இப்படித்தான், நவீன மருத்துவத்தில் பாலியல் மருத்துவம் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது.

டவுட் கார்னர்

அந்தப்புரம் - 33“செக்ஸ் பிரச்னைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும்?”

எம்.கார்த்திகேயன், சென்னை.

“எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என்று எல்லாம் இங்கு இல்லை. அவரவர் பிரச்னையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். பொதுவாக செக்ஸ் பிரச்னை என வருபவர்களுக்கு, அவர்கள் பிரச்னையைப் பொறுத்து, செக்ஸ் தெரப்பி, செக்ஸ் கவுன்சலிங், மெடிக்கல் தெரப்பி (சிகிச்சையுடன் மருந்து அளித்தல்), அறுவைசிகிச்சை (சரி செய்தல்), ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரப்பி, வாக்குவம் சக்‌ஷன் கருவி, ஆண் உறுப்பில் ஊசி செலுத்துதல் (Intracavernous), பீனைல் இம்பிளான்ட் சர்ஜரி, நடத்தை மாறுபாடு தெரப்பி, சப்போர்ட்டிவ் தெரப்பி, மெரிட்டல் தெரப்பி என பல வகை உள்ளன.

தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தும், பல நேரங்களில், மனப்பதற்றம், படபடப்பு போன்றவை காரணமாக ஆண்/பெண்ணுக்கு தங்கள் துணையுடன் இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்தமாதிரியான சூழலில், இவர்களுக்கு மாத்திரை மருந்து அளிப்பதில் பிரயோஜனம் இல்லை. அதேநேரத்தில், `உங்களுக்கு ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள், நம்பிக்கையாக இருங்கள்’ என்று சொல்வதால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. இவர்களுக்கு செக்ஸ் தெரப்பி அளிக்கப்படும். அவர்களது படபடப்பு, பதற்றத்தை வெற்றிகொள்ள பயிற்சி அளித்து, தாம்பத்திய பிரச்னையில் இருந்து மீட்கப்படுவர்.

இந்த சிகிச்சையின்போது, மருத்துவமனையிலேயே சில குறிப்பிட்ட செக்ஸ் பயிற்சிகளை தம்பதிகள் செய்ய வேண்டும். பயிற்சிகள் மேற்கொள்ளும்போது ஏற்படும் பயம், சந்தேகங்களை டாக்டரிடம் சொல்லி, கேட்டு தீர்க்க வேண்டும். வீட்டுக்குச் சென்று செய்துபார்க்கச் சொல்லப்படும். இப்படி பதற்றம், படபடப்பு அவர்களிடமிருந்து அகற்றப்பட்டு, மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு சிகிச்சை அளிக்கப்படும். இங்கே சொன்னது ஒரு உதாரணத்துக்குத்தான். ஒட்டுமொத்த சிகிச்சையும் 5 முதல் 10 முறை மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெறுவதன் மூலம் முடிந்துவிடும்.”

“என் கணவருக்கு செக்ஸ் தொடர்பான பிரச்னை இருக்கிறது. இதற்கு நானும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, காஞ்சிபுரம்.

“செக்ஸ் தெரப்பியைப் பொறுத்தவரையில், தம்பதியரில் ஒருவருக்குத்தான் பிரச்னை உள்ளது என்று முடிவுகட்டிவிட முடியாது. இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான். உதாரணத்துக்கு, கணவனுக்கு ஆண் உறுப்பு விறைப்படைதலில் பிரச்னை உள்ளது எனில், அது அவனை மட்டும் பாதிப்பதில்லை. தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியாமல் அந்த மனைவியும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார். கணவன் மிக சீக்கிரத்தில் விந்தணுவை வெளியிட்டால், மனைவியால் உச்சத்தை அடைய முடியாது. அதேபோல், பெண்ணின் வெஜைனல் இறுக்கமாக இருந்தால், கணவனால் உள்ளே நுழைக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார். எனவே, இருவரும் சிகிச்சைக்கு வருவதன் மூலம்தான், வெற்றிகரமாகப் பிரச்னையில் இருந்து மீள முடியும்.”

அந்தப்புரம் - 33

“என் தோழிக்கு வைப்ரேட்டர் பயன்படுத்தும்படி டாக்டர் பரிந்துரைத்திருக்கிறார். வைப்ரேட்டர் என்பதன் அர்த்தம் புரிகிறது. உண்மையில் வைப்ரேட்டர் என்றால் என்ன? செக்ஸ் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் கருவியா?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.

வைப்ரேட்டர் என்பது பிளாஸ்டிக்கால் ஆன ஒரு கருவி. இதில் உள்ளே மோட்டார் இருக்கும். இதை இயக்கத் தொடங்கியதும் துடிப்பதுபோல வைப்ரேட் ஆகி, மென்மையாக மசாஜ் செய்வதுபோன்று இருக்கும். இதை பிரத்யேக மசாஜர் அல்லது பாலியலுக்கு உதவும் கருவி என்றும் சொல்லலாம். பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படுவதில் பிரச்னை இருப்பின், இதைப் பயன்படுத்தலாம். தூண்டப்படுதலில் மிகத் தாமதம் ஏற்படும்போது, ஹெவி டியூட்டி வைப்ரேட்டர் பயன்படுத்தலாம். இது, செக்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல. அதிகப்படியான பாலியல் திருப்தி கிடைக்க பிரச்னை இல்லாதவர்களும் பயன்படுத்தலாம்.”

“வயாகரா மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பாலுணர்ச்சி அதிகரிக்கும் என்கிறார்களே... இந்த மாத்திரை பாலுணர்ச்சியைத் தூண்டுமா? உண்மையில், இந்த மாத்திரை என்ன மாதிரியானது? வயாகரா மாத்திரையைப் பெண்கள் உபயோகிக்கலாமா?”

ஜி.தேவதாஸ், நாகர்கோவில்.

“இதற்கு ஆம், இல்லை என்று இரண்டுமே பதில்தான். உண்மையில் இந்த மாத்திரையானது ஆணுக்கு பாலுணர்வைத் தூண்டுவது இல்லை. ஏற்கெனவே, தூண்டப்பட்ட உணர்வை நீட்டிக்கச் செய்கிறது. வயாகரா என்பது ஒரு பிராண்ட் பெயர். இதன் மூலக்கூறு ரசாயனத்தின் பெயர் சில்டெனஃபில் சிட்ரேட் (Sildenafil citrate). இந்த சில்டெனஃபில் சிட்ரேட்டை பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. யாருக்கு, நீண்ட நேரம் விறைப்புத்தன்மை இல்லாத குறைபாடு உள்ளதோ, அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்வழியே எடுத்துக்கொள்ளும் மாத்திரை. பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குறைபாடுக்கு இந்த மாத்திரையைப் பயன்படுத்தலாமா எனஆய்வுகள் நடந்து வருகின்றன. இன்றைய தேதிக்கு, வயாகராவால் பெண்களுக்குப் பயன் இல்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism